(Source: ECI/ABP News/ABP Majha)
Breaking News Tamil LIVE: மேகதாது விவகாரம் - தமிழகத்திற்கு எதிராக கர்நாடகாவில் தீர்மானம் நிறைவேற்றம்
Breaking News Tamil LIVE Updates: இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.
LIVE
Background
சென்னையில் பெட்ரோல் டீசல் விலை 137 நாட்களுக்கு பிறகு கடந்த மார்ச் 23-ம் தேதி உயர்ந்தது. அதனை அடுத்து, நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகள் உயர்ந்து ரூபாய் 102.91க்கு விற்பனையானது. டீசல் ஒரு லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து, 92.95 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் பெட்ரோல், டீசல் விற்பனையாகிறது.
முன்னதாக, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 15 ரூபாய் வரை அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கணித்திருந்தனர். பெட்ரோல், டீசல் விலையை நான்கு மாதங்களுக்கும் மேலாக சீராக வைத்திருந்து நஷ்டத்தை சமாளிக்க எண்ணெய் நிறுவனங்கள் தயாராகி வருவதால், இந்த வாரம் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தனர்.
மேகதாது விவகாரம் - தமிழகத்திற்கு எதிராக கர்நாடகாவில் தீர்மானம்
மேகதாது விவகாரத்தில் தமிழக சட்டப்பேரவை தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார்.
உத்தரப்பிரதேச முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் தேர்வு - நாளை பதவியேற்பு
உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். லக்னோவில் நடந்த எம்எல்ஏக்களின் கூட்டத்தில் பாஜக சட்டமன்ற குழு தலைவராக ஆதித்யநாத் தேர்வானார். நாளை மாலை நடைபெறும் விழாவில் அம்மாநில முதலமைச்சராக அவர் பதவியேற்கிறார்.
சிதம்பரத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இன்று முதல் ஒரு மாதம் 144 தடை உத்தரவு பிறப்பித்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிகோரி போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இன்று முதல் ஒரு மாதம் 144 தடை உத்தரவு பிறப்பித்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிகோரி போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணம் - விமான நிலையத்திற்கு புறப்பட்டார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை துபாய்க்கு பயணம் மேற்கொள்கிறார். அதற்காக தனது வீட்டில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றார். முதலமைச்சரை அனுப்பி வைக்க விமான நிலையத்தில் திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.