மேலும் அறிய
Advertisement
Breaking LIVE: அதிமுக துணை பொதுச் செயலாளர்கள் நியமனம்
Breaking Live :தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
LIVE
Key Events
Background
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நேற்று காலை ஓபிஎஸ் சென்றார். அப்போது, அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. ஓபிஎஸ் ஆதரவாளர் மீது இபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. மேலும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இபிஎஸ் ஆதரவாளர்களை தாக்கினர்.
அதிமுக அலுவலகம் அருகே தொண்டர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இருதரப்பினரும் எதிர் எதிரே நின்றுக்கொண்டு கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது, கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.
கல்வீச்சு, மோதலுக்கு பின் ஓபிஎஸ் ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டில் அதிமுக தலைமை அலுவலகம் வந்தது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இபிஎஸ் ஆதரவாளர்களை விரட்டியடித்தனர். இதனால், அந்த பகுதி போர்களம் போல காட்சியளித்தது. அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ் படங்கள் கிழித்து, தீ வைத்து எரிக்கப்பட்டன. காவல்துறையினர் உள்ளிட்ட பலர் காயம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பின்னர் சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.மேலும், அலுவலகத்தின் மீது யாருக்கு உரிமை உள்ளது என்பது குறித்து ஜூலை 25ம் தேதி ஆஜராகி விளக்கமளிக்கும்படி இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதுசம்பந்தமாக மனுத்தாக்கல் செய்தால் நாளை விசாரிப்பதாக நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்திருந்த நிலையில், இன்று பிற்பகல், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் இதே பிரச்னை தொடர்பாக முறையீடு செய்யப்பட்டது.
அதேபோல, வருவாய் கோட்டாட்சியர் உத்தரவை ரத்து செய்து, சீலை அகற்ற உத்தரவிட வேண்டும் எனவும், தாங்கள் தான் உண்மையான அதிமுக எனவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த முறையீட்டை கேட்ட நீதிபதி சதீஷ்குமார், மனுத்தாக்கல் நடைமுறை முடிந்தால் நாளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.
18:57 PM (IST) • 13 Jul 2022
அதிமுக துணை பொதுச் செயலாளர்கள் நியமனம்
அதிமுக துணை பொதுச் செயலாளர்களாக முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
16:00 PM (IST) • 13 Jul 2022
18 வயதிற்கு மேற்பட்டோருக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி
75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பாடும் நிலையில் 75 நாட்களுக்கு 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அளிக்க முடிவு செய்துள்ளது மத்திய சுகாதாரத்துறை.
15:27 PM (IST) • 13 Jul 2022
வாக்கி டாக்கி ஊழல் - விரிவான விசாரணை
மீனவர்களுக்கு வாக்கி டாக்கி தந்ததில் ரூ.35.72 கோடி இழப்பீடு ஏற்பட்டதாக 144 ஆவணங்கள் கிடைத்துள்ளன. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான புகாரில் விரிவான விசாரணை நடந்து வருகிறது : லஞ்ச ஒழிப்புத்துறை
15:19 PM (IST) • 13 Jul 2022
ஓப்போ நிறுவனம் ரூ.4,389 கோடி வரி ஏய்ப்பு
ஓப்போ இந்திய நிறுவனம் ரூ.4,389 கோடி சுங்கவரி ஏய்ப்பு செய்ததாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் கண்டுபிடிப்பு
15:15 PM (IST) • 13 Jul 2022
பழனிச்சாமி 4 ஆண்டுகள் கொள்ளையடித்தது அம்பலம் - புகழேந்தி
பழனிச்சாமியும் அவரது தரப்பினரும் 4 ஆண்டுகள் கொள்ளையடித்ததை பொன்னையன் அம்பலபடுத்தி விட்டார் - புகழேந்தி
Load More
Tags :
Breaking News Live India Breaking News Tamilnadu Breaking News Today Breaking News Tamilnadu Latest Update Tamilnadu Breaking Newsஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
விழுப்புரம்
தமிழ்நாடு
சேலம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion