Breaking News LIVE: மல்யுத்த சம்மேளன தலைவர் மீது பாலியல் வழக்கு : விசாரணைக் குழுவில் இணைந்தார் பபிதா போகாட்..
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
LIVE
Background
தமிழ்நாட்டில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்க இன்றே கடைசி நாள். இதுவரை 2.34 கோடி மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. இன்னும் 33 லட்சம் பேர் இணைக்காமல் உள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் மானிய விலையிலான மின்சாரத்தைப் பயன்படுத்தும் மின் நுகர்வோர் 2.67 கோடி பேர் உள்ளனர். இலவசம், மானியம் பெறும் பயனாளிகளின் விவரங்களை ஆதார் எண்ணுடன் இணைக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதற்கான கடைசி நாளாக கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி என அறிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலானோர், தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்காததால், இதற்கான கால அவகாசத்தை ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டித்து மின் வாரியம் உத்தரவிட்டது.
2023 ஜனவரி 31 ம் தேதிக்கு பிறகு மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க அவகாசம் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 28ம் தேதி முதல் டிசம்பர் 30 வரை சுமார் 1.61 கோடி பேருக்கு மின் இணைப்புடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார்.
தற்போது 2,811 பிரிவு அலுவலங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும், கூடுதலாக 2,811 சிறப்பு முகாம்கள் மூலம் அந்தந்த பகுதிக்கே நேரடியாக சென்று சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காத நுகர்வோர், மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால், மின் பயன்பாடு கணக்கெடுத்த 20 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்த முடியாததுடன், அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். மின் இணைப்பு துண்டிக்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
மல்யுத்த சம்மேளன தலைவர் மீது பாலியல் வழக்கு : விசாரணைக் குழுவில் இணைந்தார் பபிதா போகாட்
Former wrestler Babita Phogat joins the Oversight Committee panel formed to probe allegations against the Wrestling Federation of India.
— ANI (@ANI) January 31, 2023
(File Pic) pic.twitter.com/G4Epve2eVR
உலக பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நாடாக இந்தியா மாறி இருக்கிறது - குடியரசுத் தலைவர் உரை..
உலக பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நாடாக இந்தியா மாறி இருக்கிறது - குடியரசுத் தலைவர் உரை..
வீடூர் அணையில் இருந்து நீர்திறக்க, நீர்வளத்துறை ஆணை
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், வீடூர் அணையிலிருந்து, திண்டிவனம் மற்றும் வானூர் வட்ட பகுதிகளுக்கு 2022 -2023 – ஆம் ஆண்டு பாசனத்திற்கு 01.02.2023 முதல் 15.06.2023 வரை 135 நாட்களுக்கு மொத்தம் 328.56 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 2200 ஏக்கர் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 1000 ஏக்கர் ஆக மொத்தம் 3200 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும் என நீர்வளத்துறை அறிக்கை தெரிவிக்கிறது
Erode By Election : ஈரோடு இடைத்தேர்தல்: 2 நாளில் முடிவு எடுக்கப்படும், இதுவரை முடிவு எட்டப்படவில்லை - பாஜக
Erode By Election : ஈரோடு இடைத்தேர்தல்: 2 நாளில் முடிவு எடுக்கப்படும், இதுவரை முடிவு எட்டப்படவில்லை - பாஜக
கோயில்கள் பெயரிலான போலி இணையதளங்களை முடக்க ஆணை..!
கோயில்கள் பெயரிலான போலி இணையதளங்களை முடக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. போலி இணையதளங்களை இயக்குவோர் மீது உரிமையியல் குற்றவியல் வழக்கு தொடரவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.