மேலும் அறிய

Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?

டெல்லியில் நடைபயணத்தின்போது, முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது நபர் ஒருவர் மர்ம திரவத்தை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தாண்டு பிப்ரவரி மாதம், டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மி கட்சி பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களுக்கு மேல் உள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், அவர் மீது நபர் ஒருவர் மர்ம திரவத்தை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நபர் திரவம் வீசுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. பாதுகாப்பு அதிகாரிகளும் கெஜ்ரிவாலின் ஆதரவாளர்களும் அந்த நபரைப் பிடித்துத் தாக்கினர். தனக்கு என்ன நடந்தது என தெரியாமல் ஒரு நிமிடம் திக்குமுக்காடி நின்றார் கெஜ்ரிவால். வீசப்பட்டது தண்ணீர்தான் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த சம்பவம் குறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், "தெற்கு டெல்லியின் மாளவியா நகர் பகுதியில் ஆதரவாளர்களுடன் கெஜ்ரிவால் நடந்து சென்றபோது இந்த சம்பவம் நடந்தது. அந்த நபர் அசோக் ஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார். காவலில் எடுக்கப்பட்டு அவர் விசாரிக்கப்பட்டு வருகிறார்" என தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்திய நபர், பாஜகவை சேர்ந்தவர் என டெல்லி முதலமைச்சர் அதிஷி பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் கூறுகையில், "டெல்லியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மத்திய அரசும், உள்துறை அமைச்சரும் எதுவும் செய்யவில்லை" என்றார். குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்த டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் பிரவீன் சங்கர் கபூர், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஒவ்வொரு அரசியல் வியூகமும் தோல்வியடைந்துள்ளது. இப்போது அவர் தனது பழைய தந்திரங்களைப் பயன்படுத்துகிறார். முன்பு ஒருமுறை அவரை அறைந்திருக்கின்றனர். அவர் மீது மை வீசப்பட்டது. இன்றும் அப்படித்தான் நடந்தது. அரவிந்த் கெஜ்ரிவால் என்ன புதிய ஆட்டத்தை தொடங்கினார் என்பதை அவரே சொல்ல வேண்டும்" என்றார்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

திமுக – அதிமுக ஆதரவு கேட்ட சீமான்! ஸ்டாலின் கொடுத்த பதில் என்ன தெரியுமா?
திமுக – அதிமுக ஆதரவு கேட்ட சீமான்! ஸ்டாலின் கொடுத்த பதில் என்ன தெரியுமா?
அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் உடனே புகார் கொடுங்கள்! சிபிஐ வெளியிட்ட புதிய மொபைல் எண்!
அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் உடனே புகார் கொடுங்கள்! சிபிஐ வெளியிட்ட புதிய மொபைல் எண்!
நவம்பர் 10 வானிலை: தென் தமிழகத்தில் கனமழை; காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இன்று மழை பெய்யுமா?
நவம்பர் 10 வானிலை: தென் தமிழகத்தில் கனமழை; காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இன்று மழை பெய்யுமா?
தீபாவளி மது விற்பனையில் தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த திருச்சி மண்டலம்! ரூ.98.97 கோடி விற்பனை செய்து முதலிடம்
தீபாவளி மது விற்பனையில் தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த திருச்சி மண்டலம்! ரூ.98.97 கோடி விற்பனை செய்து முதலிடம்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh: 16 நாட்களாக சிறையில்..! அன்பில் மகேஷிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? நீதிமன்ற தீர்ப்பு என்ன?
16 நாட்களாக சிறையில்..! அன்பில் மகேஷிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? நீதிமன்ற தீர்ப்பு என்ன?
Pawan Kalyan: 3வது மனைவியை பிரிவதாக அறிவித்தார் துணை முதலமைச்சர்! 13 வருட திருமண வாழ்க்கை முடிவு!
Pawan Kalyan: 3வது மனைவியை பிரிவதாக அறிவித்தார் துணை முதலமைச்சர்! 13 வருட திருமண வாழ்க்கை முடிவு!
TN Weather News: 15 மாவட்டங்களுக்கு வார்னிங்.. எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை - தமிழக வானிலை அறிக்கை
15 மாவட்டங்களுக்கு வார்னிங்.. எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை - தமிழக வானிலை அறிக்கை
Suriya: ஓங்கி அடிச்சா ரூபாய் 100 கோடி வசூல்டா.. ஹாட்ரிக் ஹிட்டால் ஹாப்பி மோடில் சூர்யா! சிங்கம் களமிறங்கிடுச்சே!
Suriya: ஓங்கி அடிச்சா ரூபாய் 100 கோடி வசூல்டா.. ஹாட்ரிக் ஹிட்டால் ஹாப்பி மோடில் சூர்யா! சிங்கம் களமிறங்கிடுச்சே!
Volkswagen: இந்தியர்கள் ஷாக்..! டக்கரான SUV-யை விற்பனை லிஸ்டில் இருந்து தூக்கிய ஜெர்மன் நிறுவனம் - காரணம் என்ன?
இந்தியர்கள் ஷாக்..! டக்கரான SUV-யை விற்பனை லிஸ்டில் இருந்து தூக்கிய ஜெர்மன் நிறுவனம் - காரணம் என்ன?
தீபாவளி பட்டாசு விற்பனை ரூ.7,000 கோடியை தொட்டது... அடுத்த ஆண்டு ரூ.10,000 கோடி வர்த்தகத்திற்கு சிவகாசி அதிரடி திட்டம்
தீபாவளி பட்டாசு விற்பனை ரூ.7,000 கோடியை தொட்டது... அடுத்த ஆண்டு ரூ.10,000 கோடி வர்த்தகத்திற்கு சிவகாசி அதிரடி திட்டம்
முதல்வரே உங்க எம்எல்ஏ செய்ற வேலைய பாத்தீங்களா.. இதற்கு என்ன பதில் சொல்ல போறீங்க..கனிமொழி ஆவேசம்!
முதல்வரே உங்க எம்எல்ஏ செய்ற வேலைய பாத்தீங்களா.. இதற்கு என்ன பதில் சொல்ல போறீங்க..கனிமொழி ஆவேசம்!
அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் இனி இல்லை ! பயோமெட்ரிக், வாக்காளர் அட்டை முக்கியம்!
அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் இனி இல்லை ! பயோமெட்ரிக், வாக்காளர் அட்டை முக்கியம்!
Embed widget