Breaking News LIVE: தமிழ்நாட்டில் இன்று 251 பேருக்கு கொரோனா...!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
LIVE
Background
சர்வதேச மல்யுத்த போட்டிகளில் போட்டியிட்டு பதக்கங்களை வென்ற ஏழு பெண் மல்யுத்த வீராங்கனைகள், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜ.க- எம்.பி.,யுமான பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் புகார் தெரிவித்து, கடந்த ஜனவரி மாதம், மூன்று நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த, பாக்சிங் வீராங்கனை மேரி கோம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நீதி கிடைக்கும் வரை, போலீஸ் நிர்வாகம் எவ்வளவு சித்ரவதை செய்தாலும் போராட்டம் நடத்துவோம் என டெல்லி ஜன்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி ஜந்தர் மந்தரில், பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக போராட்டம் நடத்திய, மல்யுத்த வீரர்களை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா, மல்யுத்த வீரர்கள் பதக்கங்களை வெல்லும்போது நாம் அனைவரும் ட்வீட் செய்து, பெருமைப்படுகிறோம். ஆனால் இன்று அவர்கள் சாலையில் அமர்ந்திருக்கிறார்கள், நியாயம் கிடைக்கவில்லை.
பிரதமர் மல்யுத்த வீரர்களைப் பற்றி கவலைப்படுகிறார் என்றால், அவர்களை அவர் ஏன்? சந்திக்கவில்லை. ஏன் பிரிஜ் பூஷன் சிங்கை அரசு காப்பாற்ற முயற்சிக்கிறது என்றார்.
இதனை தொடர்ந்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் பங்கேற்றார். பின்னர் பேசிய அவர், ”அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் அல்லது சாராதவர்கள் யாராக இருந்தாலும் நாம் நாட்டை நேசிப்பவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் இங்கு வந்து மல்யுத்த வீரர் வீராங்கனைகளின் போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும்” என்றார்.
நாங்கள் இந்த வீரர்களுக்கு அனைத்து ஆதரவுகளையும் தருவோம், அதே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீரர் வீராங்கனைகளுக்கு வழங்கப்படும், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மத்திய அரசு துண்டிக்க கூடாது என கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையே, பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிரான வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என மல்யுத்த வீரர்கள், உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர். மல்யுத்த வீரர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்கள் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறி, டெல்லி காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை மறுத்த பிரிஜ் பூஷன் சிங், தான் நிரபராதி என்பதை நிரூபிக்க கடுமையாக போராடுவேன் என்று தெரிவித்துள்ளார். உதவியற்றதாக உணரும் அந்த நாளில் மரணத்தைத் தழுவ விரும்புகிறேன் என்றும் உணர்ச்சி பொங்க வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் இன்று 251 பேருக்கு கொரோனா...!
தமிழ்நாட்டில் இன்று மட்டும் 251 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Breaking News LIVE: ஏடிஜிபிக்கள் 4 பேர் பணியிடை மாற்றம்..!
தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றி வரும் 4 ஏடிஜிபிக்களை பணியிடை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
Breaking News LIVE: சென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடந்து வருகிறது
சென்னையில் நடந்து வரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில், ரஜினிகாந்த், ஏ.ஆர். முருகதாஸ், ரஜினிகாந்த், சசிகுமார் உள்ளிட்டோர் வாக்களித்தனர். தலைவர், 2 துணை தலைவர், செயலாளர் பதவிக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.
சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் திருடப்பட்ட சிலைகள்...மீட்க தயாராகும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு..!
1970களில் திருடப்பட்டு, தற்போது சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள 16 விலை உயர்ந்த சிலைகளை மீட்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.