மேலும் அறிய

Breaking News LIVE Tamil : நாளை முதல் 500 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை - அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

LIVE

Key Events
Breaking News LIVE Tamil : நாளை முதல் 500 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை - அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

Background

Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 14 மாதங்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில் , இன்றைய நிலவரத்தை அறியலாம்.

உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.

இன்றைய விலை நிலவரம்

இந்நிலையில் சென்னையில் இன்று (ஜூலை 31) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 436வது நாளாக தொடர்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.

அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய உயிரி எரிபொருள் கொள்கை

கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.

இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 

நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 

இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.

பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

19:07 PM (IST)  •  31 Jul 2023

”தமிழ்நாட்டிற்கே நான் முதலமைச்சராக இருந்தாலும் கொளத்தூருக்கு எம்எல்ஏதான்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் பேச்சு..

தமிழ்நாட்டிற்கே நான் முதலமைச்சராக இருந்தாலும் கொளத்தூருக்கு எம்எல்ஏதான் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

18:47 PM (IST)  •  31 Jul 2023

Breaking News LIVE Tamil : ஏர் ஏசியா நிறுவன மேலாளர் சஸ்பென்ட்!

கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட் ஏறுவதற்கு முன்பாகவே விமானம் புறப்பட்ட விவகாரத்தில் ஏர் ஏசியா நிறுவன மேலாளர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.

18:22 PM (IST)  •  31 Jul 2023

Breaking News LIVE Tamil : ஹோட்டல் குழம்பில் காகிதங்கள் - 6 பேருக்கு வாந்தி மயக்கம்!

சென்னை தியாகராயர் நகரில் உள்ள விருதுநகர் அய்யனார் ஹோட்டலில் உணவு சாப்பிட்ட 6 பேருக்கு வாந்தி, மயக்கம் புகாரின் அடிப்படையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஹோட்டலில் ஆய்வு செய்ததில், குழம்புகளில் காகிதங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

17:39 PM (IST)  •  31 Jul 2023

Breaking News LIVE Tamil : கொளத்தூர் கூடுதல் வகுப்பறைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

கொளத்தூர் பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

17:37 PM (IST)  •  31 Jul 2023

Breaking News LIVE Tamil : அக்னி குண்டத்தில் குழந்தையோடு தவறி விழுந்த தந்தை

திருவள்ளூர் ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாராட்சியில், தனது ஒரு வயது பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு தீ குண்டத்தில் இறங்கிய தந்தை, கால் இடறி நெருப்பில் விழுந்தார். 36 % தீக்காயங்களுடன் குழந்தை தர்னிஜாவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
"திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கே" கொதித்த வானதி சீனிவாசன்!
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
"திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கே" கொதித்த வானதி சீனிவாசன்!
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
இந்திய அணிக்குள் மோதல்! கம்பீர் - அகர்கர் இடையே கட்டப்பஞ்சாயத்து - காரணம் என்ன?
இந்திய அணிக்குள் மோதல்! கம்பீர் - அகர்கர் இடையே கட்டப்பஞ்சாயத்து - காரணம் என்ன?
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.