மேலும் அறிய
Advertisement
Headlines Today: நேற்று என்ன நடந்தது..? இன்று என்ன நடக்கிறது..? அனைத்தையும் அறிய! காலை 7 மணி தலைப்பு செய்திகள்..!
Headlines Today: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- மாநிலம் முழுவதும் இன்று 500 மதுக்கடைகள் மூடல்: தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை
- செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றிய விவகாரம்: அமலாக்கத்துறையின் கோரிக்கை நிராகரிப்பு
- 40 கி.மீக்கு மேல் வேகமாக வண்டி ஓட்டினால் அபராதமா..? போக்குவரத்து காவல்துறை விளக்கம்
- அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை நிறைவு : சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக நடந்தது
- கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 24ம் தேதி 100 மருத்துவ முகாம்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
- அமைச்சர் பிடிஆர் மனது வைத்தால் திமுக சிறைக்கு செல்வது உறுதி - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
- நடிகர்கர்கள் சினிமாவில் கிடைக்கும் புகழை வைத்துக் கொண்டு அதன் மூலம் முதலமைச்சர் ஆகலாம் என நினைக்கின்றனர் என திருமாவளவன் கூறியுள்ளார்.
- இருதய அறுவை சிகிச்சை செய்வதற்கு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையை விட, காவேரி மருத்துவமனையில் அப்படி என்ன வசதிகள் இருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
- மதநல்லிணக்கக் கொள்கையை வலியுறுத்திய கலைஞர் பிரதிநிதியாக பங்கேற்கிறேன்: முதல்வர் ஸ்டாலின்
- 810 காவலர்களுக்கு தங்கள் விருப்பத்திற்கேற்ப பணியிட மாற்றம் வழங்கப்பட்டு தமிழ்நாடு டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்தியா:
- நாளை அனைத்து எதிர்க்கட்வி தலைவர்கள் ஆலோசனை கூட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பீகார் பயணம்
- மணிப்பூர் அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை: பாஜக எம்.எல்.ஏக்கள் பிரதமர் மோடிக்கு கடிதம்
- யாருக்கும் காப்புரிமை, பதிப்புரிமை இல்லாதது; யோகா உலகிற்கே சொந்தமானம் - பிரதமர் மோடி பெருமிதம்
- ஒரு தாயாக உங்கள் வலி புரிகிறது; மணிப்பூர் மக்கள் அமைதி காத்திட வேண்டும் - சோனியாகாந்தி வேண்டுகோள்
- மத்திய அரசுக்கு பதிலாக மாநிலமே டிஜிபியைத் தேர்வு செய்யலாம் வகையில், பஞ்சாப் காவல்துறை சட்டத் திருத்த மசோதா நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது.
உலகம்:
- பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ட்ரான் கானுக்கு லாகூர் உயர்நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
- அமெரிக்க சென்றுள்ள பிரதமர் மோடி தங்கியுள்ள நட்சத்திர ஹோட்டலில் ஒரு அறையில் ஒரு இரவு தங்க அதிகபட்சமாக ரூ.12.15 லட்சம் வரையில் வாடகை பெறப்படுகிறது.
- அட்லாண்டிக் கடல் பகுதியில், டைட்டானிக் கப்பல் சிதிலங்களை பார்வையிட சென்ற நீர்மூழ்கி கப்பல் காணாமல் போனது தொடர்பாக தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுரஸ் சிறையில் ஏற்பட்ட வன்முறையில் 41 பெண் சிறை கைதிகள் உயிரிழந்துள்ளனர்.
- அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடியுடன் டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்கை சந்தித்தார்.
- அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி
விளையாட்டு:
- டிஎன்பிஎல் தொடர்: திருச்சி அணியை எளிதில் வீழ்த்தி கோவை அசத்தல் வெற்றிபெற்றது.
- இந்தியாவில் முன்னணி டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா டேவிஸ் கோப்பை போட்டியில் இருந்து விடைபெற முடிவு செய்துள்ளார்.
- பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் சுனில் சேத்ரி ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார்.
- சர்வதேச போட்டியில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறி சுனில் சேத்ரி.
- ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 இன் அட்டவணையை ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு அறிவித்துள்ளது .
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion