மேலும் அறிய

Breaking News LIVE: மீனவர்கள் கைது - வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்..!

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

LIVE

Key Events
Breaking News LIVE: மீனவர்கள் கைது - வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்..!

Background

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன் தினம் மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டை பெற்று சுமார் 400 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.  இந்த நிலையில் நேற்று அதிகாலை நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை இரண்டு விசைப்படகையும் அதில் இருந்த 15 மீனவர்களையும் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளது. இதையடுத்து அவர்கள் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 15 மீனவர்களையும் அவரது படகையும் விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று ஒரு நாள் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதினால் சுமார் 700 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் நங்கூரம் இட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தினால் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு அரசுக்கு ஒரு நாளைக்கு ஒரு  கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

கடந்த ஜுன் மாதம் 21ம் தேதி  புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 91 விசைப்படகுகளில் 450 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவற்றில், உதயகுமாருக்கு சொந்தமான படகில் உதயகுமார், அவரது மகன்கள் ரவீந்திரன்(40), உலகநாதன்(35), வைத்தியநாதன்(27), அருள்நாதன்(23), முத்து மகன் குமரேசன்(35),  அகிலா என்பவருக்கு சொந்தமான படகில் அவரது கணவர் காளிமுத்து(45), எம்.அர்ஜுனன்(50), எஸ்.குமார்(42), என்.குருமூர்த்தி(27), எம்.அருண்(22) மற்றும் தமிழரசனுக்கு சொந்தமான படகில் தமிழரசன், சி.பாஸ்கர்(40), ஓ.முத்துராஜா(25), டி.அரேன்(20), டி.ஜெகநாத்(35), எஸ்.குமார்(43), ஆகியோர் 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி 3 விசைப்படகுகளில் இருந்த 17 மீனவர்களையும் கைது செய்ததுடன், அவர்களது விசைப்படகுகள், வலைகள், மீன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதேபோன்று, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து 405 விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.  அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்தபோது அந்தோணி பிரசாத்துக்கு சொந்தமான விசைப்படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், அதிலிருந்த சந்தியா, தேவா, நடராஜன், நாகராஜன், ஜிப்ரா ஆகிய 5 மீனவர்களை கைது செய்தனர். மத்திய, மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கைக்குப் பிறகு 22 தமிழக மீனவர்களும் சில தினங்களுக்கு முன்பு  நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டனர். தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

14:58 PM (IST)  •  10 Jul 2023

Breaking News LIVE: அயனாவரத்தில் காவலர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை அயனாவரத்தில் காவலர் அருண்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

14:56 PM (IST)  •  10 Jul 2023

Breaking News LIVE: மழை பாதிப்பு - மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி பேச்சு

வட மாநிலங்களில் ஏற்பட்ட மழை பாதிப்புகள் பற்றி மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி பேசியுள்ளார். 

14:55 PM (IST)  •  10 Jul 2023

Breaking News LIVE : பேனா நினைவுச்சின்னத்தை எதிர்த்த மனு தள்ளுபடி

சென்னை மெரினா கடலில் போனா நினைவுச் சின்னம் அமைப்பதை எதிர்த்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதுது. 

13:27 PM (IST)  •  10 Jul 2023

மாற்றப்படும் டாஸ்மாக் கடை திறப்பு?

அண்மையில் மூடப்பட்ட 500 டாஸ்மாக் கடைகள் அமைந்திருந்த பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்படும் எனவும், கடைகள் மூடப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் குடிப்பழக்கத்தை கைவிட்டால் மகிழ்ச்சியே எனவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் ”மதுவிற்பனை செய்து வருமானம் ஈட்ட வேண்டிய நிலை அரசுக்கு இல்லை. டாஸ்மாக் திறக்கப்படும் நேரத்தை மாற்ற ஆலோசித்து வருகிறோம். டாஸ்மாக் கடையை காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை திறக்கவேண்டும் மது பிரியர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதுகுறித்து பரிசீலனையில் உள்ளது. இன்னும் எவ்வித முடிவும் எடுக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.  

12:33 PM (IST)  •  10 Jul 2023

மீனவர்களை விடுவிக்க கடிதம் ..!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 15 ராமேஸ்வ்வரம் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Kavaraipettai Accident: கவரப்பேட்டை விபத்து! பீகார் நோக்கி சென்ற சிறப்பு ரயில் - பத்திரமாக செல்லும் பயணிகள்
Kavaraipettai Accident: கவரப்பேட்டை விபத்து! பீகார் நோக்கி சென்ற சிறப்பு ரயில் - பத்திரமாக செல்லும் பயணிகள்
தமிழ்நாட்டை உலுக்கிய ரயில் விபத்து.. ரத்தாகும் ரயில்கள், திருப்பிவிடப்படும் ரயில்கள் என்னென்ன ?
தமிழ்நாட்டை உலுக்கிய ரயில் விபத்து.. ரத்தாகும் ரயில்கள், திருப்பிவிடப்படும் ரயில்கள் என்னென்ன ?
பதறும் சென்னை விமான நிலையம்.. தொடரும் கடத்தல் சம்பவம்.. என்னம்மா இப்படி பண்றீங்க ?
பதறும் சென்னை விமான நிலையம்.. தொடரும் கடத்தல் சம்பவம்.. என்னம்மா இப்படி பண்றீங்க ?
“சைக்கிளுக்கு 50, பிளைட்டுக்கு 5000” வடிவேலு பாணியில் உசிலம்பட்டியில் வசூல்வேட்டை..!
“சைக்கிளுக்கு 50, பிளைட்டுக்கு 5000” வடிவேலு பாணியில் உசிலம்பட்டியில் வசூல்வேட்டை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruma On DMK : ”பஞ்சமி நிலம் மீட்பு என்னாட்சு?” திமுகவுக்கு விசிக CHECK புது ரூட்டில் திருமா!MP Ravikumar slams PM Modi |உ.பி-க்கு 34000 கோடி,நமக்கு வெறும் 7000 கோடியா?மோடியை விளாசும் I.N.D.I.ABengaluru Pigeon Thief | புறாவை வைத்து 30 லட்சத்தை சுருட்டிய திருடன்! பெங்களூரை அலறவிட்ட கேடி!TVK Vijay vs BJP | பாஜகவிடம் பணிந்த விஜய்? ஆயுத பூஜைக்கு வாழ்த்து! காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kavaraipettai Accident: கவரப்பேட்டை விபத்து! பீகார் நோக்கி சென்ற சிறப்பு ரயில் - பத்திரமாக செல்லும் பயணிகள்
Kavaraipettai Accident: கவரப்பேட்டை விபத்து! பீகார் நோக்கி சென்ற சிறப்பு ரயில் - பத்திரமாக செல்லும் பயணிகள்
தமிழ்நாட்டை உலுக்கிய ரயில் விபத்து.. ரத்தாகும் ரயில்கள், திருப்பிவிடப்படும் ரயில்கள் என்னென்ன ?
தமிழ்நாட்டை உலுக்கிய ரயில் விபத்து.. ரத்தாகும் ரயில்கள், திருப்பிவிடப்படும் ரயில்கள் என்னென்ன ?
பதறும் சென்னை விமான நிலையம்.. தொடரும் கடத்தல் சம்பவம்.. என்னம்மா இப்படி பண்றீங்க ?
பதறும் சென்னை விமான நிலையம்.. தொடரும் கடத்தல் சம்பவம்.. என்னம்மா இப்படி பண்றீங்க ?
“சைக்கிளுக்கு 50, பிளைட்டுக்கு 5000” வடிவேலு பாணியில் உசிலம்பட்டியில் வசூல்வேட்டை..!
“சைக்கிளுக்கு 50, பிளைட்டுக்கு 5000” வடிவேலு பாணியில் உசிலம்பட்டியில் வசூல்வேட்டை..!
Chennai Train Accident:  கவரப்பேட்டை ரயில் விபத்து மீட்புப்பணிகள் தீவிரம்: சிக்னல் தவறா? சதியா?
Chennai Train Accident: கவரப்பேட்டை ரயில் விபத்து மீட்புப்பணிகள் தீவிரம்: சிக்னல் தவறா? சதியா?
“விஜய் ஏற்றிய கொடி கம்பத்திற்கு தீபாராதனை” கட்சி அலுவலகம் முழுவதும் பூஜை செய்த புஸ்ஸி ஆனந்த்! எங்கசார் உங்க கொள்கை ?
”கொடி கம்பத்திற்கு தீபாராதனை” அலுவலகம் முழுவதும் பூஜை - என்னதான் விஜயின் கொள்கை ?
Rasi Palan Today, Oct 12: விருச்சிகத்துக்கு ஆதரவு: துலாமுக்கு நலம் - உங்கள் ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today, Oct 12: விருச்சிகத்துக்கு ஆதரவு: துலாமுக்கு நலம் - உங்கள் ராசிக்கு என்ன பலன்?
Train Cancel: கவரப்பேட்டை விபத்து!  18 ரயில்கள் இன்று ரத்து - எந்தெந்த ட்ரெயின்? முழு பட்டியல்
Train Cancel: கவரப்பேட்டை விபத்து! 18 ரயில்கள் இன்று ரத்து - எந்தெந்த ட்ரெயின்? முழு பட்டியல்
Embed widget