Breaking News TAMIL LIVE: பொய் சொல்வதில் இயந்திரத்துக்கு கூட வரம்பு உண்டு.. ஆனால் நரேந்திர மோடிக்கு வரம்பு இல்லை - ராகுல் காந்தி
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
LIVE
Background
தமிழகத்தை பொறுத்தவரையில், 3 ஆண்டுகளாக எந்த திட்டமும் இல்லை என கூறும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தி பார்ப்பதே கிடையாதா என திமுக கேள்வி எழுப்பியுள்ளது. கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடி மேற்கோள் காட்டிய ஆவணங்கள் அனைத்தும் பொய் என தமிழ்நாடு காங்கிரஸ் அளித்த விளக்கங்களால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல் தமிழ் புதல்வன் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார். இதனிடையே, தமிழ்நாட்டில் 53,74,000 பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பதாக வேலைவாய்ப்புத்துறை தெரிவித்துள்ளது. கொளுத்தும் கோடை வெயிலுக்கு மத்தியில், தமிழ்நாட்டில் 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி பெய்து வரும் கோடை மழையால் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2023- 2024ம் கல்வியாண்டுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் சூழலில், உதகை மலர் கண்காட்சியை ஒட்டி நாளை நீலகிரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் கவனத்தை திருப்பினா, தொடர்ந்து சர்ச்சைகுரிய கருத்துகளை கூறி வந்த காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவர் சாம் பிட்ரோடா, தனது பதவியை ராஜினாமா செய்தார். கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம் ராய்கஞ்ச் வரை 2,870 கி.மீ. தொலைவை 60 மணிநேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ் டிரைவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றர். கர்நாடகாவில் பாலியல் வன்கொடுமை மற்றும் ஆள்கடத்தல் தொடர்பான வழக்கில் கைதான ரேவண்ணாவுக்கு வரும் 14 தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் ஊழியர்கள் சுமார் 300 பேர் திடீரென விடுப்பு எடுத்த விவகாரத்தில், 25 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சர்வதேச விவகாரங்களை அணுகினால், உக்ரைன் - ரஷ்யா மற்றும் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காஸா ராஃபா படையெடுப்பு விவகாரத்தில் இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகத்தை அமெரிக்கா நிறுத்தியது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொலை செய்ய செய்ய சதி திட்டம் தீட்டிய விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லாவோக் கடற்கரையில் அமெரிக்கா - பிலிப்பைன்ஸ் ராணுவத்தினர் இணைந்து கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். பிரேசிலில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் செயல்படும் நீதிமன்றங்களை வேறு இடத்திற்கு மாற்ற எதிர்ப்புகள் குவிய, கஞ்சாவை மீண்டும் சட்டவிரோத பட்டியலில் சேர்க்க தாய்லாந்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விளையாட்டுலகில் ஐபிஎல் போட்டிகள் ரசிகர்களை தொடர்ந்து சிறப்பான பொழுது போக்காக அமைந்துள்ளது. நேற்றைய லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது ஹைதராபாத் அணி, வெறும் 9.4 ஓவர்களில் 150 ரன்களுக்கும் அதிகமான இலக்கை எளிதில் சேஸ் செய்தது. தொடர்ந்து ஐபிஎல் 2024 இன்றைய போட்டியில் பெங்களூர் அணியை பஞ்சாப் கிங்ஸ் எதிர்கொள்கிறது. பெடரேஷன் கோப்பை தடகள போட்டியில் பங்கேற்கிறார் நீரஜ் சோப்ரா.
பொய் சொல்வதில் இயந்திரத்துக்கு கூட வரம்பு உண்டு.. ஆனால் நரேந்திர மோடிக்கு வரம்பு இல்லை - ராகுல் காந்தி
मशीन की भी झूठ बोलने की एक सीमा है, पर नरेंद्र मोदी की नहीं। pic.twitter.com/BnzPXGX3ir
— Rahul Gandhi (@RahulGandhi) May 9, 2024
இந்தியாவின் அரசியலமைப்பு ஏழை மக்களுக்கானது. பாஜக வந்தால் அதை மாற்றுவார்கள் - ராகுல் காந்தி
#WATCH | Saroornagar, Hyderabad: Congress MP Rahul Gandhi while addressing the public meeting says, "BJP, RSS have clearly said that if they win the elections, they will change the Constitution of India, they will cancel it. The Constitution of India is the book of the poor… pic.twitter.com/K1nArm2LfA
— ANI (@ANI) May 9, 2024
நடிகை வைஜெயெந்தி மாலாவுக்கு பத்மபூஷண் வழங்கப்பட்டது
Vyjayanthimala Bali conferred with Padma Vibhushan
— ANI Digital (@ani_digital) May 9, 2024
Read @ANI Story | https://t.co/sqZ4XOa2Om#VyjayanthimalaBali #PadmaVibhushan pic.twitter.com/dr0XBDa8Wj
Rahul Gandhi Video : வேலையைத் தேர்ந்தெடுங்கள்.. வெறுப்பை அல்ல - ராகுல் காந்தி
View this post on Instagram
விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து : முதலமைச்சர் இரங்கல்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கீழதிருத்தங்கல் கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின்
இரங்கல் மற்றும் ஆறுதல்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், கீழதிருத்தங்கல் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (9.5.2024) எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உட்பட 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, காயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டிருக்கிறேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்.