Breaking Tamil LIVE: ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
LIVE
Background
- தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது. ஏற்கனவே பருவநிலை மாறுபாடு காரணமாக வழக்கத்தை விட வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இன்று தொடங்கும் அக்னி நட்சத்திரம் மே 28 ஆம் தேதி வரை இருக்கும். வழக்கமாக இந்த நாட்களில் குறைந்தது 100 டிகிரி அளவில் வெயில் தாக்கம் இருக்கும். ஆனால் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்தே 100 டிகிரி வெயில் கொளுத்தி வருகிறது. எனவே பொதுமக்கள் அவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுளது. நீராகாரம், குளிர்ந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
- ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு - குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றது. இந்த ஆட்டம் பெங்களூரு அணி பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா அல்லது வெளியேறுமா என்பதை நிர்ணயிக்கும் முக்கியமான போட்டியாகும். முன்னதாக நேற்று கொல்கத்தா அணியிடம் தோற்ற்ற மும்பை அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்ததால் ரசிகர்கள் சோகமடைந்தனர்.
- கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு இலவச இருதய பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அகிலேஷ் யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ஒரு சில பக்க விளைவுகள் ஏற்பட அதன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது. இது மக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியது.
பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்!
புல்வாமா தாக்குதலை போன்று ஜம்மு மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், இந்திய விமான படையை சேர்ந்த 5 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.
காங்கிரஸ் மாவட்ட தலைவர் மரண வழக்கு - 7 தனிப்படைகள் அமைப்பு
காங்கிரஸ் மாவட்ட தலைவர் மரண வழக்கு குறித்து விசாரிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க.வில் இணைந்தார் டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர்
டெல்லி முன்னாள் காங்கிரஸ் தலைவர் அரவிந்தர்சிங் லவ்லி பா.ஜ.க.வில் இணைந்தார்.
கர்நாடக ஆபாச வீடியோ வழக்கு: இன்று மாலை சிபிஐ முன் ஆஜராகும் ரேவண்ணா
கர்நாடக ஆபாச வீடியோ வழக்கில், பிரஜ்வல் மற்றும் அவரது தந்தை ரேவண்ணா மீது பாலியல் வன்கொடுமை வழக்கு தொடரப்பட்ட நிலையில், இன்று மாலை சிபிஐ முன் ரேவண்ணா ஆஜராக உள்ளதாக, அவரது வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்.
ரேவண்ணா வீட்டில் புலனாய்வுத்துறையினர் சோதனை!
ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட பெண்களை ரேவண்ணா வீட்டிற்கு நேரில் அழைத்துச் சென்று புலனாய்வுத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுமட்டும் இல்லாமல் ரேவண்ணா வீட்டில் இருந்த லேப்டாப் உள்ளிட்டவற்றை புலனாய்வுத்துறையினர் கைப்பற்றினர்.