Breaking Tamil LIVE: பேரணியில் குழந்தைகள் பங்கேற்றதாக புகார்; மத்திய அமைச்சர் அமித்ஷா மீது வழக்குப்பதிவு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
LIVE
Background
தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் முதலே வெயிலின் தாக்கம் கொடூரமாக உள்ளது. எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வெப்பநிலை அதிகபட்சமாக பதிவாகி வருகிறது. வழக்கமாக அக்னி நட்சத்திரத்தின் போது தான் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் ஆனால் இந்த ஆண்டு சற்று மாறாக ஏப்ரல் முதலே 40 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில், கரூர் பரமத்தியில் 44.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இன்றும் நாளையும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் இயல்பை விட 9 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டிற்கு இன்றும் நாளையும் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களான திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு நிர்வாக ரீதியாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 3 ஆம் கட்டம் தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மொரேனாவில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ”எனது தந்தை ராஜீவ் காந்தி உயிர் தியாகத்தை தான் அவரது தாயாரிடமிருந்து வாரிசு உரிமையாக பெற்றாரே தவிர, சொத்துக்களை அல்ல. இதை மோடி புரிந்துகொள்ளமாட்டார். இந்திரா காந்தி போன்ற பெண்ணைப் பற்றி மோடி முட்டாள்தனமாக பேசும்போது, வம்ச அரசியலை மட்டுமே பார்க்கிறார். எங்களது குடும்பம் செய்த தியாகத்தை புரிந்துகொள்ளமாட்டார்” என ஆவேசமாக பேசியுள்ளார். இதற்கிடையில் நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காணலாம்.
பேரணியில் குழந்தைகள் பங்கேற்றதாக புகார்; மத்திய அமைச்சர் அமித்ஷா மீது வழக்குப்பதிவு
தெலங்கானாவில் தேர்தல் பேரணியில் குழந்தைகள் பங்கேற்றதாக புகாரையடுத்து, மத்திய அமைச்சர் அமித்ஷா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொடைக்கானல் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை திரும்பினார்
ஓய்வுக்காக கொடைக்கானல் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை திரும்பினார்.
வாக்குப்பதிவு முரண்பட்ட புள்ளி விவரங்கள் கவலை அளிக்கிறது - தலைமைத் தேர்தல் ஆணையருக்கு சீதாராம் யெச்சூரி கடிதம்
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான முரண்பட்ட புள்ளி விவரங்கள் கவலை அளிக்கிறது என்று மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தலைமைத் தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ADMK: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் கேவியட் மனுவை தாக்கல் செய்தது அதிமுக!
சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையில் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்கவேண்டும் என அதிமுக தரப்பில் உச்சநீதிமனறத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
TN 43 பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ- பாஸ் தேவையில்லை
TN 43 பதிவெண் கொண்ட வாகனங்கள் ஊட்டிக்கு செல்ல இ - பாஸ் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.