Breaking Tamil LIVE : வேலூர் - குடியாத்தத்தில் வெளுத்து வாங்கும் ஆலங்கட்டி மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
LIVE
Background
இன்றும் நாளையும் வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 3°-5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர் வெப்ப அலை மற்றும் அதிகபட்ச வெப்பநிலை காரணமாக வட உள் தமிழக மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஏப்ரல் 6 ஆம் தேதி சென்னையில் இருந்து நெல்லை நோக்கிச் சென்ற ரயிலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.4 கோடி எடுத்துச் செல்லப்பட்டது தெரிய வந்தது. இதனால் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போட்து தாம்பரம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் நெல்லை மாவட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டலில் பணியாற்றும் ஊழியர்கள் என தெரிய வந்தது. இந்த பணம் நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு செல்லப்பட்டதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அவருக்கு தாம்பரம் போலீசார் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும் படி சம்மன் அனுப்பப்பட்டது. இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் இன்று ஆஜராகப் போவதாக ஏற்கனவே நயினார் நாகேந்திரன் தெரிவித்து இருந்தார். இன்று ஆஜராவாரா என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.
மக்களவை தேர்தல் இரண்டு கட்டங்கள் முடிவடைந்த நிலையில், 3 வது கட்டம் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சி தலைவர் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவரது மனைவி இன்று குஜராத்தில் ரோடு ஷோ பிர்ரச்சாரம் மேற்கொள்கிறார். இது ஒரு பக்கம் இருக்க அமேதி மற்றும் ரேபரலி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இங்கே உடனுக்குடன் காணலாம்.
வேலுர் குடியாத்தத்தில் ஆலங்கட்டி மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி!
கடந்த 25 நாட்களாக தினமும் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகிவந்த நிலையில், வேலூர் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் ஒன்றான குடியாத்தத்தில் ஆலங்கட்டி மழை பெய்து வருகின்றது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
: Breaking Tamil LIVE : சேலத்தில் கொளுத்தி எடுக்கும் வெயில்: ஏற்காட்டில் மிதமான மழை
சேலத்தில் கடுமையான வெயில் கொளுத்தி வரும் நிலையில் ஏற்காட்டில் மிதமான மழை பெய்து வருகிறது. ஈரோட்டில் 111 பாரன்ஹீட்டில் வெயில் கொளுத்தி வருவதால் மக்கள் தவித்து வருகின்றனர்.
தஞ்சை பெரிய கோயிலில் பராமரிப்பு பணிகளை தொல்லியல் துறையே மேற்கொள்கிறது - இந்து சமய அறநிலையத்துறை
தஞ்சை பெரிய கோயிலில் பராமரிப்பு பணிகளை தொல்லியல் துறையே மேற்கொள்கிறது என்று இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நாட்டில் தலிபான் முறையை அமல்படுத்தி, இஸ்லாமியமயமாக்கம் செய்துவிடும் - யோகி ஆதித்யநாத்
#WATCH | Etah: Addressing a public rally, UP CM Yogi Adityanath says, "Be alert of the Congress and SP alliance. It is here to do two things. If they come to power, they will give a part of ST, SC and OBC reservation to Muslims... With the intention of Islamization of the country… pic.twitter.com/OsBHVek8Mi
— ANI (@ANI) May 2, 2024
கார்கே ரிமோட் கண்ட்ரோல் சாதனம். ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் பேட்டரிகள் - பாஜக விமர்சனம்
மல்லிகார்ஜுன கார்கே என்னும் ரிமோட் கண்ட்ரோல் சாதனத்துக்கு, சோனியா காந்தியும், ராகுல் காந்தியும்தான் பேட்டரிகள். பேட்டரிகளை எடுத்துவிட்டால் அவரால் ஒரு வார்த்தை கூட பேசமுடியாது - பாஜக
#WATCH | Delhi: On Congress National President Mallikarjun Kharge's statement, BJP National Spokesperson Gaurav Bhatia says, "He (Mallikarjun Kharge) is called a remote controlled President for a reason. A remote control needs two batteries. In Mallikarjun Kharge, those two… pic.twitter.com/aAdpPCYWye
— ANI (@ANI) May 1, 2024