Breaking News LIVE: மக்களவை 3-ம் கட்ட தேர்தல்: 65.68 % வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
LIVE
Background
மக்களவை தேர்தலில் நான்காம் கட்ட வாக்குப்பதிவிற்கான பரப்புரை இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், நட்சத்திர தொகுதிகளை குறிப்பிட்டு தலைவர்கள் வாக்குகளை சேகரிக்க உள்ளனர். 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 96 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதில் ஆந்திராவில் உள்ள 25 மக்களவை தொகுதிகளுக்கும், தெலங்கானாவில் உள்ள 17 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
வாக்குப்பதிவை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். பாஜக, காங்கிரஸ் அகிய தேசிய கட்சிகளோடு, தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆகிய மாநில கட்சிகளுக்கும் முனைப்புடன் வாக்கு சேகரித்து வருகின்றன. நான்காம் கட்ட வாக்குப்பதிவிற்கான பரப்புரையில் பாஜக - காங்கிரஸ் இடையேயான கருத்து மோதல் மேலும் வலுவடைந்தது. இந்நிலையில் இன்று மாலையுடன் பரப்புரை ஓய்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க, தமிழ்நாட்டில் ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலின் எடிட்டர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் சேர்மனிடம் மனு கொடுக்க சென்றிருந்த ஃபெலிக்ஸ் ஜெரால்டை இரவு 11.30 மணி அளவில் தமிழக போலிசார் கைது செய்துள்ளனர். கோவை போலிசார் அவருக்கு சம்மன் வழங்கியிருந்த நிலையில் திருச்சிக்கு அழைத்து வருவதாக போலிசார் தரப்பில் தகவல்.
மேலும் தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகி வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் நாட்டில் நடைபெறும் முக்கிய செய்திகளை உடனுக்குடன் காணலாம்.
மக்களவை 3-ம் கட்ட தேர்தல்: 65.68 % வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மக்களவைக்கான 3-ம் கட்ட தேர்தலில் 65.68 சதவிகித வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மதுரை, சேலம், திருவண்ணாமலையில் கோடை மழை
மதுரை, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்தது.
ஹனுமன் கோவிலில் வழிபட்ட அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மன்
#WATCH | Delhi CM Arvind Kejriwal and Punjab CM Bhagwant Mann at the Hanuman Mandir in Connaught Place.
— ANI (@ANI) May 11, 2024
Delhi CM Arvind Kejriwal and his wife Sunita Kejriwal offered prayers at the temple. pic.twitter.com/8FdtwDHwtR
மோடி தீபாவளி விடுமுறை எடுப்பதில்லை.. ராகுல் சுற்றுலாவுக்கு தாய்லாந்து செல்கிறார் - அமித்ஷா
#WATCH | Vikarabad, Telangana: Union Home Minister addresses a public meeting and says, "This election is divided into two groups. On one side, we have the NDA, which is moving forward under the leadership of Narendra Modi. On the other side, we have the INDI alliance, which is… pic.twitter.com/iG79QzDFIs
— ANI (@ANI) May 11, 2024
பூர்ணமாசி ஜனிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி அவரிடம் ஆசிபெற்ற பிரதமர் மோடி
#WATCH | Prime Minister Narendra Modi felicitates Padma Shri awardee Purnamasi Jani & seeks blessings by teaching her feet, during his public meeting in Odisha's Kandhamal. pic.twitter.com/sWjRAt69Jz
— ANI (@ANI) May 11, 2024