Breaking Tamil LIVE : வெயிலூராக மாறிய வேலூர்; 111 டிகிரி ஃபாரன்ஹீட்டில் சுட்டெரிக்கும் சூரியனால் தவிக்கும் பொதுமக்கள்!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
LIVE
Background
மே 1 ஆம் தேதி முதல் 3 தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 3°-5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர் வெப்ப அலை மற்றும் அதிகபட்ச வெப்பநிலை காரணமாக வட உள் தமிழக மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களை ஒப்பிடும் போது சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகவில்லை என்றாலும், காற்றின் ஈரப்பதம் காரணமாக வெளியே செல்லும் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் பகல் நேரங்களில் அதாவது காலை 11 மணி முதல் 3.30 மணி வரை வெளியே வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இதற்கிடையில், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.19 குறைக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஒவ்வொரு மாதமும் சந்தை விலை நிலவரங்களுக்கு ஏற்ப வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக சிலிண்டர் விலையானது மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் வணிக சிலிண்டரை எடுத்துக் கொண்டால் கடந்த 3 மாதத்தில் ஏற்றம் இறக்கமாகவே காணப்படுகிறது. சென்னையில் மார்ச் 1 ஆம் தேதி வணிக சிலிண்டர் விலை ரூ.23.50 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.1,960 ஆக விற்பனை செய்யப்பட்டது.
ஒருவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தையும், ஏற்றத்தையும் தருவதாக ஜோதிடத்தில் கருதப்படுவது குரு பெயர்ச்சி ஆகும். நடப்பாண்டிற்கான குரு பெயர்ச்சி மே 1ம் தேதி அரங்கேறுகிறது. மே 1ம் தேதியில் (சித்திரை 20) மேஷ ராசியில் இருந்து குரு பகவான் ரிஷபத்திற்கு செல்கிறார். மாலை 5.30 மணியளவில் இந்த குரு பெயர்ச்சி நடைபெறுகிறது. இதனால் இன்று திரளான பக்தர்கள் கோயிலுக்கு சென்று வழிப்படுவார்கள். இந்நிலையில் நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காணலாம்.
20 இடங்களி 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்த வெயில் -வெயிலால் தத்தளிக்கும் தமிழ்நாடு!
தமிழ்நாட்டில் மொத்தம் 20 இடங்களில் வெயில் 100 இடங்களைக் கடந்துள்ளது. அதிகபட்சமாக கரூர் பரமத்தி, வேலூர் ஆகிய இடங்களில் 111 டிகிரி ஃபாரன்ஹீட்டும் ஈரோட்டில் 110 டிகிரி ஃபாரன்ஹீட்டையும் வெயில் எட்டியுள்ளது. அதேபோல் சேலம், மதுரை மாநகரம், தர்மபுரி, திருச்சி, திருவள்ளூர், திருத்தனி, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெயில் சுட்டெரித்துள்ளது.
PM Modi Campaign : இட ஒதுக்கீட்டை ஒழித்துவிடுவோமா? இது முழுக்க முழுக்க பொய் - மோடி பரப்புரை
#WATCH | Gujarat: In Banaskantha's Deesa, PM Modi says, "In 2024, the Congress and INDI alliance has come up with a lie... Their eco-system is pushing that lie. They are saying that the reservation would be withdrawn. It is a completely fabricated lie... This time they will be… pic.twitter.com/p75sXvPqNP
— ANI (@ANI) May 1, 2024
ஆசிய நாடுகள் வெப்ப அலையால் கடும் பாதிப்பு - முன்னாள் WHO விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் தகவல்
ஆசிய நாடுகள் வெப்ப அலையால் கடும் பாதிப்படைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக ஆசிய மக்களின் வாழ்வும், வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது - முன்னாள் WHO விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் தகவல்
அமேதி, ரேபரேலி வேட்பாளர்களை காங்கிரஸ் தலைமை அறிவிக்கும் - ஜெய்ராம் ரமேஷ்
#WATCH | Congress leader Jairam Ramesh says, "...Congress Central Election Committee has empowered the party President to declare candidates for Amethi and Rae Bareilly seats. In the next 24-30 hours, the Congress President will finalise the candidates, and his decision will be… pic.twitter.com/tps3nVOnmx
— ANI (@ANI) May 1, 2024
Breaking Tamil LIVE: முன்னாள் பாமக நிர்வாகி செல்லப்பா மீது பெட்ரோல் குண்டு வீச்சு..!
நெல்லை மாவட்டம் மேல பாட்டம் அருகே முன்னாள் பாமக நிர்வாகி செல்லப்பா மீது பெட்ரோல் குண்டு வீச்சு.
சிறு காயங்களுடன் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாளையங்கோட்டை தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.