Breaking News LIVE: குவைத் தீ விபத்து: உதவி எண்கள் அறிவித்த தமிழ்நாடு அரசு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
LIVE
Background
- விக்கிரவாண்டி இடைதேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுவார் என அறிவிப்பு
- அமைச்சர் செஞ்சி மஸ்தான் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பதவியில் இருந்து நீக்கம்
- "ஆஸ்திரேலியாவில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள சர்வதேச கராத்தே போட்டியில் விளையாட உள்ள வீரர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவி செய்ய வேண்டும்" - சென்னை மாவட்ட கராத்தே பயிற்சியாளர் தமிழரசன் கோரிக்கை புனேவில் கடந்த 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெற்ற ஆசிய கராத்தே போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 4 வீரர்கள் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
- மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றதை தொடர்ந்து, வரும் 13ம் தேதி தனது முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்கிறார் - மூன்று நாள் பயணத்தின் போது இத்தாலியில் நடைபெறும் ஜி-7 உச்சிமாநாட்டில் பங்கேற்க இருக்கிறார்
- வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியிட்டு இருந்தால் மோடியை வீழ்த்தி இருப்பார் - ரேபரேலி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் ராகுல் காந்தி பேச்சு
- இந்திய ராணுவத்திற்கான புதிய தளபதியான உபேந்திர திவேதி நியமனம் - குன் 30ம் தேதி பொறுப்பேற்கிறார்
- ஆந்திர முதலமச்சராக இன்று பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு - 20 பேர் அடங்கிய புதிய அமைச்சரவை பட்டியல் வெளியீடு - பவன் கல்யாண் துணை முதலமைச்சராக வாய்ப்பு
- சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கிய வழக்கில் அத்பர் ஜோ பைடன் மகன் குற்றவாளி என தீர்ப்பு
- ஐசிசி டி-20 உலகக் கோப்பைய்ல் இன்று நடைபெறும் லீக் போட்டியில் இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் மோதுகின்றன
- அடுத்தடுத்து இரண்டு தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான் அணி, நேற்றைய கனடாவிற்கு எதிரான லீக் போட்டியில் வெற்றி
Breaking News LIVE: குவைத் தீ விபத்து - பில்டிங்கில் இருந்தவர்களின் விவரங்கள் வெளியானது..!
பில்டிங்கில் இருந்தவர்கள் - 195 மொத்தம்
- டூட்டிக்கு போனவர்கள் - 18
- மருத்துவமனையில் சிகிச்சை எடுப்பவர்கள் -61
- காணவில்லை- 49 (இறந்தவர்களாக இருக்கலாம்)
- நலமுடன் இருப்பர் 67
அரசு மருத்துவமனை பெயர்கள்:
முபாரக்கியா -11
ஜெகரா- 4
பர்வானியா - 4
அதான் - ICU - 1
மருத்துவமனையில் 61
காணவில்லை 49
Breaking News LIVE: குவைத் தீ விபத்து: உதவி எண்கள் அறிவித்த தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கிய தமிழர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இவ்விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் உதவி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்தியாவிற்குள் - +91 1800 309 3793
வெளிநாடு - +91 80 6900 9900, +91 80 6900 9901
ஜி 7 மாநாட்டில் பங்கேற்க நாளை இத்தாலி செல்கிறார் பிரதமர் மோடி
இத்தாலியில் நடைபெறும் ஜி 7 மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி நாளை இத்தாலிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
Breaking News LIVE: விஜய பிரபாகரன் புகார் மனு
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
இந்நிலையில் விஜய பிரபாகரன் இன்று டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என மனு அளித்துள்ளார்.
Breaking News LIVE: குவைத் கட்டட தீ விபத்து: 40 இந்தியர்கள் உட்பட 53 பேர் உயிரிழப்பு
குவைத் நாட்டில் உள்ள 7 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட விபத்தில் 40 இந்தியர்கள் உட்பட 53 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.