Breaking News LIVE: பா.ஜ.க கூட்டணியில் ஐ.ஜே.கே.,வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு; ஒப்பந்தம் கையெழுத்து!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
LIVE
Background
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேர்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்தது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகள் தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் வேட்பாளர் அறிவிப்பு தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக கூட்டணி கட்சிகளுக்கான இட ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளது. இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் திமுக தரப்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. ஆனால் அதிமுக தரப்பில் இன்னும் கூட்டணி குறித்து முடிவாகவில்லை. அது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தேமுதிக - அதிமுக கூட்டணி உடன்படிக்கை எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தேமுதிக தரப்பில் 7 இடங்கள் கேட்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பாமக, அதிமுக உடன் கூட்டணி அமைக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையைல் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளது. பாஜக கூட்டணியில் பாமகவிற்கு 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை தொடர் இழுபறியில் இருக்கும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் வேட்பமனு தாக்கல் தொடங்குகிறது. இன்று தொடங்கி வரும் 27 ஆம் தேதி வரை வேட்பமனு தாக்கல் நடைபெறுகிறது. அதேசமயம் வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.
வேட்புமனு தாக்கலுடன் ரூ.25 ஆயிரம் டெபாசிட் தொகையாக அளிக்க வேண்டும். தனி தொகுதி வேட்பாளருக்கு ரூ.12, 500 டெபாசிட் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் அவரையும் சேர்த்து, மொத்த 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். வேட்புமனு பெறும் நிகழ்வு அனைத்து வீடியோ பதிவு செய்யப்படும். ஒவ்வொரு வேட்பாளரும் வேட்புமனு தாக்கல் செய்தவதற்கு முந்தைய நாள் தொடங்கி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் வரை புதிய வங்கி கணக்கு தொடங்கி பராமரிக்க வேண்டும். அந்த வங்கி கணக்கு வேட்புமனு தாக்கலுக்கு 2 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டிருக்க வேண்டும். வேட்புமனு தாக்கல் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மட்டுமே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி பரபரப்பான சூழலில் இன்றைய நிகழ்வுகளை உடனுக்குடன் விரிவாக பார்க்கலாம்.
அமமுக-வுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு - தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு!
அமமுகவுக்கு தேர்தல் ஆணையம் குக்கர் சின்னத்தினை ஒதுக்கீடு செய்துள்ளது.
Breaking News LIVE: பா.ஜ.க கூட்டணியில் ஐ.ஜே.கே.,வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு; ஒப்பந்தம் கையெழுத்து!
பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐ.ஜே.கேவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்தார் மன்சூர் அலிகான்
வேலூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்தார் நடிகர் மன்சூர் அலிகான்.
பாஜக கூட்டணியில் இ.ம.க.மு.க-வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு
பாஜக கூட்டணியில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
Breaking News LIVE: நாளை மாலை நல்ல அறிவிப்பு வெளியிடப்படும் - ஓபிஎஸ்
எங்கள் நிர்வாகிகள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நல்லதொரு முடிவு எடுத்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.