Breaking News LIVE: விசைப்படகு மீனவர்கள் நாளை முதல் வேலை நிறுத்தம்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
LIVE
Background
vijay TVK: நடிகர் விஜய் தனது கட்சிப் பெயரை, தமிழக வெற்றிக் கழகம் என திருத்தம் செய்துள்ளார். முன்னதாக கடந்த பிப்ரவரி 4ம் தேதி கட்சி தொடர்பான அறிவிப்பு வெளியான போது, தமிழக வெற்றி கழகம் என தனது கட்சியின் பெயரை விஜய் குறிப்பிட்டு இருந்தார். ஆனால், தமிழ் இலக்கணப்படி, நிலைமொழியாக வெற்றிக்கு அடுத்து வருமொழியான கழகம் சேரும்போது இடையில் ஒற்றெழுத்தான “க்” வர வேண்டும் என பலரும் சமூக வலைதளங்களிலும், பொதுவெளியிலும் சுட்டிக் காட்டினர். சில அரசியல் கட்சியினர் இதனை கடுமையாக விமர்சித்தும் வந்தனர். இந்நிலையில், நடிகர் விஜய் தனது கட்சிப் பெயரில், வெற்றி கழகத்திற்கு இடையே ஒற்றெழுத்தான “க்” சேர்த்து ”தமிழக வெற்றிக் கழகம்” என சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
#தமிழகவெற்றிக்கழகம் new cover pic @tvkvijayhq handle renamed #TVKVijay pic.twitter.com/XUQFhnKDAj
— TVKPalacodeConstituency (Dharmapuri) (@TVMIPalacode) February 18, 2024
கட்சியின் பெயரில் இருந்த பிழையை பல்வேறு தரப்பினரும் சுட்டிக் காட்டியதை ஏற்று, விஜய் அதில் திருத்தம் செய்துள்ளார். இதன் மூலம், ஒரு அரசியல்வாதிக்கு மிக முக்கியமானதாக கருதப்படும் விமர்சனங்களை ஏற்கும் பண்பை விஜய் நிரூபித்துள்ளதாக அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெருமிதம் தெரிவித்து வருகின்றனர். கட்சி தொடர்பான அதிகாரப்பூர்வ அற்விப்புகள் வெளியாகி இருந்தாலும், 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது. மேலும், 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், பணிகளை மேற்கொள்ளுமாறு நிர்வாகிகளுக்கு அக்கட்சி தலைமை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் ஏமாற்றம்:
விஜயின் ரசிகர்களைப் பொறுத்தவரை ஒருபக்கம் அவரை அரசியல் தலைவராக பார்க்கும ஆசை இருந்தாலும் இனிமேல் அவரை நடிகராக திரையில் பார்க்க முடியாத வருத்தம் இருக்கதான் செய்கிறது. தங்களது சிறு வயது முதல் பார்த்து வளர்ந்த ஒரு நடிகரை இனிமேல் மீண்டும் திரையில் பார்க்க முடியாதது அவர்களுக்கு ஒரு பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. இந்நிலையில் விஜயின் 69 ஆவது படமே அவரது கடைசிப் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படும் நிலையில் இந்தப் படத்தை யார் இயக்கப் போகிறார் என்பதே ரசிகர்களின் ஒரே கேள்வியாக இருக்கிறது.
சினிமாவில் 40 ஆண்டுகள்
நடிகர் விஜயகாந்தின் குழந்தை பருவத்து கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. வெற்றி திரைப்படத்துடன் சேர்த்து நடிகர் விஜய்யும் அவரின் திரை பயணத்தை தொடங்கி 40 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். 1992ம் ஆண்டு வெளியான 'நாளைய தீர்ப்பு' திரைப்படம் மூலம் முதன்மை கதாபாத்திரத்தில் அறிமுகபடுத்தினார் எஸ்.ஏ. சந்திரசேகர். அதன் தொடர்ச்சியாக செந்தூரபாண்டி, ரசிகன், ராஜாவின் பார்வையிலே, விஷ்ணு, சந்திரலேகா, கோயம்புத்தூர் மாப்பிள்ளை என அடுத்தடுத்து கமர்சியல் படங்களாக நடித்து இளைய தளபதி என்ற அடைமொழியுடன் கொண்டாடப்பட்டார். ரொமாண்டிக் நடிகராக இருந்து வந்த விஜய் அடுத்தடுத்தப் படங்களின் மூலம் ஆக்ஷன் ஹிரோவாக மக்கள் மனதில் பதிந்தார்.
விசைப்படகு மீனவர்கள் நாளை முதல் வேலை நிறுத்தம்
விசைப்படகு மீனவர்கள் நாளை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளில் 60 ஆயிரம் பேருக்றகு வேலைவாய்ப்பு
தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திருக்கறுங்குடி முருகன் கோயிலுக்கு செல்ல நாளை மறுநாள் முதல் தடை
நாளை மறுநாள் முதல் திருக்கறுங்குடி முருகன் கோயிலுக்கு 27ம் தேதி வரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஓசூரில் யானை தாக்கியதில் தொழிலாளி படுகாயம்
ஓசூர் தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கியதில் தொழிலாளி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
செம்மொழி பூங்கா மலர் கண்காட்சியை காண குவியும் மக்கள்
சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள செம்மொழி பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சியை காண பொதுமக்கள் குவிந்துள்ளனர்.