மேலும் அறிய
Breaking News LIVE, JULY 11: சாட்டை துரைமுருகன் விடுவிப்பு...!
Breaking News LIVE, July 11, 2024: நாடு முழுவதும் நடைபெற உள்ள பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் காணலாம்.
LIVE
Key Events
Background
- விக்கிரவாண்டி இடைதேர்தலில் 82 சதவிகித வாக்குகள் பதிவு - நாள மறுநாள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன
- மக்களுடன் முதலமைச்சர் திட்டம் - தர்மபுரியில் இன்று தொடங்கி வைக்கிறார் ஸ்டாலின்
- சென்னையின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய காற்றுடன் கொட்டிய மழை - இன்றும் மழை தொடர வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்
- பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு - செங்கல்பட்டு மாணவி முதலிடம், 22ம் தேதி கலந்தாய்வு தொடங்குகிறடு
- இந்தியா உலகிற்கு புத்தத்தை கொடுத்தது, யுத்தத்தை அல்ல - ஆஸ்திரியா வாழ் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் மோடி பேச்சு
- மூன்று நாள் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இன்று நாடு திரும்புகிறார்
- வேலையின்மையால் இளைஞர்கள் மன உளைச்சலில் உள்ளனர் - காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி குற்றச்சாட்டு
- சிபிஐ மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது - உச்சநீதிமன்றம் அதிரடி
- ஐரோப்பியா கால்பந்து சாம்பியன்ஷிப் - நெதர்லாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து
- கால்பந்தாட்ட ஜாம்பவான் பீலேவின் சாதனையை முறியடித்த 16 வயது ஸ்பெயின் வீரர் - மிகக் குறைந்த வயதில் ஐரோப்பியா சாம்பியன்ஷிப்பில் கோல் அடித்து லாமின் யாமல் அசத்தல்
- ஐரோப்பியா சாம்பியன்ஷிப்பில் திங்கட்கிழமை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில், ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன
- டி.என்.பி.எல்: திருப்பூரை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது சேப்பாக்
21:35 PM (IST) • 11 Jul 2024
Breaking News LIVE, JULY 11: நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் விடுவிப்பு...!
Breaking News LIVE, JULY 11: தமிழ்நாடு அரசு மீது அவதூறு பரப்பியதாக, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்ட நிலையில் , தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.
21:01 PM (IST) • 11 Jul 2024
நீதிபதி மகாதேவனை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை
சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை
20:51 PM (IST) • 11 Jul 2024
இந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணம் - கால அட்டவணை வெளியீடு
இந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணம் - கால அட்டவணை வெளியீடு. 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்ட பிறகு, இந்திய அணி விளையாடும் முதல் தொடர் இதுவாகும்
19:48 PM (IST) • 11 Jul 2024
தாய்லாந்தில் நடிகை வரலட்சுமி - நிக்கோலாய் சச்தேவ் ஜோடியின் திருமணம் நடைபெற்றது
தாய்லாந்து ரிசார்ட்டில் நடிகை வரலட்சுமி - நிக்கோலாய் சச்தேவ் ஜோடியின் திருமணம் நடைபெற்றது
18:44 PM (IST) • 11 Jul 2024
புதுக்கோட்டையில் ரவுடி துரை சுட்டுக்கொலை
புதுக்கோட்டையில் வம்பன் காட்டுப்பகுதியில் ரவுடி துரை சுட்டுக்கொலை
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
வணிகம்
இந்தியா
தொழில்நுட்பம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion