Breaking News LIVE: கோயம்பேட்டில் லூலு மால் வரப்போகிறது என்பது வதந்தி
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
LIVE
Background
கிட்டதட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சென்னையில் இன்று (ஜனவரி 29ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 619வது நாளாக தொடர்கிறது.
பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்வு.. பீர் வகை ரூ. 10 வரை அதிகரிப்பு..
மதுபானங்களின் மீதான கலால் வரி மீதான வரி உயர்த்தப்பட்ட நிலையில் அதன் அடிப்படையில் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. அதன்படி, 375 மி.லி., 750 மி.லி., 1,000 மி.லி. கொள்ளளவுகளில் விற்கப்படும் மதுபானங்கள் அந்தந்த ரகத்துக்கு ஏற்ப உயர்த்தப்பட்டு விற்கப்பட இருக்கிறது.
இதையடுத்து, வருகின்ற பிப்ரவரி 1ம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோயம்பேட்டில் லூலு மால் வரப்போகிறது என்பது வதந்தி
கோயம்பேட்டில் லூலு மால் வரப்போகிறது என்பது வதந்தி என்று அரசு விளக்கம் அளித்துள்ளது.
நடிகர் இளவரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
காவல்துறை மீது குற்றம் சாட்டிய விவகாரத்தில் நடிகர் இளவரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Breaking News LIVE: முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி..!
டெல்லி விஜய் சவுத் பாதையில் முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பேண்டு வாத்தியங்கள் இசைக்க வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் முப்படை வீரர்கள் பாசறை திரும்புகின்றனர்.
Governor RN Ravi: ஆளுநர் ரவிக்கு மீடியா 'மேனியா நோய்' தாக்கியுள்ளதைப் போன்று தெரிகிறது- அமைச்சர் ரகுபதி
கேரளா, தெலுங்கானா, தமிழ்நாடு ஆளுநர்களுக்கிடையே யாருடைய பெயர் ஊடகங்களில் அதிகம் வருகிறது என மறைமுக போட்டி நடப்பதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். ஆளுநர் ரவிக்கு 'மீடியா மேனியா' நோய் தாக்கியுள்ளதைப் போன்று தெரிகிறது என அமைச்சர் ரகுபதி தனது அறிக்கையில் தெவித்துள்ளார்.