மேலும் அறிய

Breaking Live: குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 - பொங்கல் பரிசை அறிவித்த முதலமைச்சர் முக ஸ்டாலின்!

Breaking LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

LIVE

Key Events
Breaking Live: குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 - பொங்கல் பரிசை அறிவித்த முதலமைச்சர் முக ஸ்டாலின்!

Background

சீனாவில் உச்சமடைந்து வரும் உருமாறிய BF.7 வகை கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவி வருகிறது. குஜராத்தில் 3 பேருக்கும் ஒடிசாவில் ஒருவரும் உருமாறிய BF.7 கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் இன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

சீனாவில் கொரோனா எண்ணிக்கை மீண்டும் உச்சத்தை எட்டத் தொடங்கியுள்ளது. அங்குள்ள மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் நிரம்பி வருவதால் உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன. அதன் தொடர்ச்சியாக, ஜப்பான், தென் கொரியா, பிரேசில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

’கோவிட் இன்னும் முடியவில்லை’

இதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று உயர்மட்ட அரசு அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் கொரோனா நிலைமை குறித்து ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.

கூட்டத்தை தொடர்ந்து, கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மன்சுக் மாண்டவியா, "கோவிட் இன்னும் முடிவடையவில்லை. விழிப்புடன் இருக்கவும், கண்காணிப்பை பலப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். எந்த சூழ்நிலையையும் சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.

வாராந்திர ஆய்வுக் கூட்டம்

மேலும், கொரோனா நிலவரம் குறித்து கண்காணிக்க வாராந்திர கூட்டம் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சர்வதேச மற்றும் உள்ளூர் விமான நிலையங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவது குறித்து வியூகம் அமைப்பது, வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு புதிய விதிமுறைகள் விதிப்பது, உருமாறிய கொரோனா குறித்து நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொள்வது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படலாம் என தகவல் வெளியாகியிருந்தது.

அதேபோல, வெளிநாட்டில் இருந்து திரும்பும் இந்திய பயணிகள், நாட்டில் பரவும் கொரோனா வகை, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக எடுக்கப்பட உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றும் தகவல் வெளியாகி இருந்தது.

கொரோனா தொற்று உறுதி செய்த அனைவரின்  மாதிரிகளும் INSACOG மரபணு வரிசைமுறை ஆய்வகங்களுக்கு தினமும் அனுப்பப்பட வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

அதென்ன BF.7 வகை?

செல் ஹோஸ்ட் மைக்ரோப் என்னும் ஆய்விதழில் வெளியான கட்டுரை ஒன்றில், 4.4 மடங்கு அதிக நடுநிலைப்படுத்தல் எதிர்ப்புத் திறனை BF.7 வகை கொரோனா கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2020-ல் உலகம் முழுக்கப் பரவி பாதிப்பை ஏற்படுத்திய வூஹான் வைரஸை விட, தடுப்பூசி போடப்பட்ட அல்லது கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து உருவாகும் ஆன்டிபாடிகள் BF.7 வைரஸை அழிக்கும் வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது. 

17:53 PM (IST)  •  22 Dec 2022

Pongal 2023 Gift: குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 - பொங்கல் பரிசை அறிவித்த முதலமைச்சர் முக ஸ்டாலின்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 1, 000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை வழங்க முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டார். 

13:17 PM (IST)  •  22 Dec 2022

9 துறை முகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு..!

சென்னை, கடலூர், பாம்பன், தூத்துக்குடி, நாகை, எண்ணூர், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 9 துறை முகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

12:43 PM (IST)  •  22 Dec 2022

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 600 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

12:42 PM (IST)  •  22 Dec 2022

நெய்வேலி அனல்மின் நிலையத்தில் தீ விபத்து - 5 பேர் படுகாயம்

நெய்வேலி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

12:21 PM (IST)  •  22 Dec 2022

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Embed widget