Breaking LIVE : ஓபிஎஸ்சுடன் இணைய முடியாது - ஈபிஎஸ்
Breaking LIVE : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை அடுத்தடுத்து ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.
LIVE

Background
கட்சி விரோத செயல்களில் ஈடுபடுபவர் ஓபிஎஸ்
ஜெயலலிதாவிற்கு உண்மையான விசுவாசிகளாக இருந்தவர்கள் எங்கள் பக்கம்தான் இருக்கின்றனர். அதிமுகவில் கட்சி விரோத செயல்களில் ஓபிஎஸ் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் தொண்டர்கள் ஒற்றைத் தலைமையை விரும்பினர்.
திமுகவுடன் ஓபிஎஸ் தொடர்பு கொண்டுள்ளார் - ஈபிஎஸ்
அதிமுக அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்களை ஓபிஎஸ் தரப்பினர் திருடிச் சென்றனர். கட்சியில் தொடர்ந்து பிரச்சனை
செய்து கொண்டே இருந்தால் மக்கள் எப்படி அதிமுகவை ஏற்றுக் கொள்வார்கள்?
திமுகவுடன் ஓபிஎஸ் தொடர்பு வைத்துக் கொண்டிருப்பதை அதிமுகவினர் எப்படி ஏற்பார்கள்? - ஈபிஎஸ் கேள்வி
ஓபிஎஸ்சுடன் இணைய முடியாது - ஈபிஎஸ்
ரவுடிகளை வைத்து அதிமுக அலுவலகத்தையும் எங்கள் தரப்பினரையும் ஓபிஎஸ் தாக்கச் செய்தார். பொதுக்குழுவுக்கு நாங்கள் அழைப்பு விடுத்த போது நிராகரித்த ஓபிஎஸ், ஏன் நீதிமன்றங்களையே நாடிச் செல்கிறார்.
பதவியில் இருக்க வேண்டும் என்பதே ஓபிஎஸ் விருப்பம்
ஓபிஎஸ்சிடம் உழைப்பு கிடையாது, பதவி மட்டும் வேண்டும், யார் எப்படி போனாலும் அவருக்கு கவலையில்லை.
கட்சியின் உயர் பொறுப்பில் உள்ள ஓபிஎஸ், அநாகரிகமாக நடந்து கொண்டால் எப்படி இணைந்து செயல்பட முடியும்? - ஈபிஎஸ்
ஓபிஎஸ் அடிக்கடி அழைப்பு கொடுப்பார் : ஈபிஎஸ்
ஒற்றைத் தலைமை குறித்து பொதுக்குழுவில் விவாதிக்காமல் அதை ரத்து செய்ய ஓபிஎஸ் முயற்சித்தது எந்தவிதத்தில் நியாயம்?
சசிகலாவை எதிர்த்து தானே ஓபிஎஸ் தர்மயுத்தம் செய்தார்? அவர்களையே அழைப்பது ஏன்? - ஈபிஎஸ்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

