![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Watch Video: ஆற்றில் மூழ்கிய சிறுவன்.. வட்டமிட்ட முதலைகள்.. பதறவைக்கும் வீடியோ!
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில் முதலைகள் சிறுவனைச் சுற்று வட்டமிடுவது முதுகுத் தண்டை சில்லிட வைக்கிறது.
![Watch Video: ஆற்றில் மூழ்கிய சிறுவன்.. வட்டமிட்ட முதலைகள்.. பதறவைக்கும் வீடியோ! Boy drowning in a river full of crocodiles chiiling viral video Watch Video: ஆற்றில் மூழ்கிய சிறுவன்.. வட்டமிட்ட முதலைகள்.. பதறவைக்கும் வீடியோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/26/a788b529cca85a2f9bb40fe4c2bdbdf01661528749166224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
முதலைகள் நிறைந்த ஆற்றில் மூழ்கும் சிறுவன் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில் அரைகுறையாக நீச்சல் தெரிந்த சிறுவன் ஒருவர் ஆற்றில் எப்படியோ அடித்துச் செல்லப்பட்டு உதவி கேட்டி கத்தியவாறு போராடிக் கொண்டிருக்கிறான்.
முதலைகள் நிறைந்த இந்த ஆற்றில் அதே நேரத்தில் சில முதலைகள் சிறுவனைச் சுற்றி வட்டமிடத் தொடங்குகின்றன.
இந்த வீடியோ காண்போரை பெரும் பதட்டத்துக்குள்ளாக்கும் நிலையில், நீரில் மூழ்கிக்கொண்டிருக்கும் சிறுவனை விரைந்து படகில் வந்து மீட்புக் குழு காப்பாற்றுகிறது.
இந்த வீடியோவை உத்திரப் பிரதேச காவலர் சச்சின் கௌசிக் என்பவர் பகிர்ந்துள்ள நிலையில், “இது ஒரு திரைப்படத்தைப் போன்ற உண்மையான காட்சி! சிறுவன் சம்பல் ஆற்றில் மூழ்கிக்கொண்டிருந்தான். பின்னால் முதலைகள் இருந்தன. மீட்புக் குழுவினர் சரியான நேரத்தில் வந்து சிறுவனைக் காப்பாற்றிய மீட்புக்குழுவினருக்கு பாராட்டுகள்” எனப் பகிர்ந்துள்ளார்.
फ़िल्मों जैसा असल सीन है!
— SACHIN KAUSHIK (@upcopsachin) August 25, 2022
चम्बल नदी में यह बच्चा डूब रहा था, पीछे मगरमच्छ भी थे।
रेस्क्यू टीम सही समय पर पहुँच गई और इस बालक को हाथ पकड़कर खींच लायी।
सल्यूट! #JaiHind 🇮🇳#Heroes #Salute #Love #respect pic.twitter.com/71wtIoLHJF
இந்நிலையில், இந்த வீடியோ சம்பல் ஆற்றில் வீடியோ எடுக்கப்பட்டதாகவும், சிறுவனை மாநில பேரிடர் மீட்புப் படை காப்பாற்றியுள்ளதாகவும் நெட்டிசன்கள் தெரிவித்து மீட்புக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
முன்னதாக இதேபோல் சம்பல் ஆற்றில் முதலையால் தாக்கப்பட்டு சிறுவன் உயிரிழந்த விரக்தியில் கிராமவாசிகள் முதலையை கட்டிப்போட்டு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மத்தியப் பிரதேசத்தில் முதலை ஒன்று சிறுவனை விழுங்கியதாக நம்பிய கிராம மக்கள், அதன் வயிற்றில் இருந்து குழந்தையின் உடலை மீட்க முயற்சித்து, அதன் கால்கள், வாயை கட்டி போட்டு பிடித்து வைத்தனர்.
Boy in the crocodile? Madhya Pradesh villagers tie up 13ft reptile in ‘rescue’ bid | Bhopal News see full article - https://t.co/lCzJfwbBAr pic.twitter.com/fIHVMJfeIO
— Pet News 2Day (@petnews2day) July 13, 2022
ஷியோபூரில் தனது நண்பர்களுடன் சம்பல் ஆற்றில் குளித்தபோது அந்தர் சிங் என்ற ஏழு வயது சிறுவனை முதலை உயிருடன் விழுங்கியதாக கூறப்படுகிறது.
முதலையின் வயிற்றில் சிறுவன் உயிருடன் இருப்பதாக நம்பிய கிராம மக்கள், வயிற்றில் இருக்கும் சிறுவனிடம் பேச வாய்ப்பிருப்பதாக எண்ணி அவரின் பெயரை குறிப்பிட்டு அழைத்துள்ளனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற வனத்துறை மற்றும் காவல்துறை அலுவலர்கள், முதலையின் வயிற்றில் சிறுவன் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என விளக்கம் அளிக்க முயற்சித்தனர்.
அந்தர் சிங் குளித்துக் கொண்டிருந்த போது, முதலை அவரைத் தாக்கி, தாடையில் வைத்தபடி நீந்தி சென்றது. இதையடுத்து, உடன் இருந்த நண்பர்கள் உதவி கேட்டு கத்திய நிலையில், அந்த முதலையை வலை மூலம் பொதுமக்கள் பிடித்தனர்.
முதலை சிறுவனை விழுங்கிவிட்டதாக நம்பிய கிராம மக்கள் முதலில் அதன் கால்களைக் கட்டி, பின்னர் மெல்லாமல் இருக்க அதன் தாடைகளுக்கு இடையே ஒரு குச்சியை வைத்து கட்டினர். குழந்தையை மீட்க கிராம மக்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இதையடுத்து, அவர்களை சமாதானப்படுத்தி முதலையை விடுவிக்க சில மணிநேரங்கள் ஆனது. இறுதியாக, முதலை வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. மறுநாள் காலை ஆற்றில் சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டு இறுதிச் சடங்குகளுக்காக அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)