மேலும் அறிய

திருமணம் செய்துகொள்வதாக கூறி பெண்ணிடம் பாலியல் உறவு கொள்வது பாலியல் வன்கொடுமையா? நீதிமன்றம் பரபர

பாலியல் உறவு கொள்வதும் பெற்றோர் சம்மதிக்காததால் உறவை முறித்துக்கொண்டு திருமணம் செய்து கொள்ள மறுப்பதும் பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது என மும்பை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு, பாலியல் உறவு கொள்வதும் பெற்றோர் சம்மதிக்காததால் உறவை முறித்துக்கொள்வதும் பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது என மும்பை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண் ஏமாற்றப்பட்டாரா?

குற்றம்சாட்டப்பட்ட நபரும் பாதிக்கப்பட்ட பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு, காதலித்து வந்த சமயத்தில் இருவரும் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், அந்த நபருக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்திருப்பதும், அவர் திருமணம் செய்யப் போவதும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தெரியவந்தது.

இதையடுத்து, நாக்பூரில் உள்ள காவல்நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். குற்றம் சாட்டப்பட்ட நபரை வரவழைக்கப்பட்டபோது, ​​அவர் புகார்தாரரை திருமணம் செய்யத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அவரது பெற்றோர் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றும் அவர் காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண், குற்றம்சாட்டப்பட்ட நபரின் தந்தையை சந்திக்கச் சென்றார். அப்போது, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தனது மகனை திருமணம் செய்து வைப்பதில் விருப்பமில்லை என்று அவர் கூறியுள்ளார். இதனால், குற்றம் சாட்டப்பட்டவர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376(2)(n) கீழ் நாக்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மும்பை உயர் நீதிமன்றம் பரபரப்பு கருத்து:

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, வழக்கில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர் செஷன்ஸ் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். ஆனால், குற்றம் சாட்டப்பட்டவரை விடுவிக்க மறுத்த செஷன்ஸ் நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தை அணுகும்படி தெரிவித்தது.

எனவே, வழக்கில் இருந்து விடுவிக்கும்படி குற்றம்சாட்டப்பட்ட நபர் மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி M.W. சந்த்வானி, "திருமணம் செய்து கொள்வதாக கூறி, பெண்ணுடன் பாலியல் உறவில் கொண்டு, ஆனால், பெற்றோர் சம்மதிக்காத காரணத்தால் திருமணம் செய்து கொள்ள மறுத்த குற்றம்சாட்டப்பட்ட நபரை" விடுவிக்க உத்தரவிட்டார்.

"திருமணத்திற்கு பெற்றோர் ஒப்பு கொள்ளாத காரணத்தால் கொடுத்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை. இதனாலேயே, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 375 (பாலியல் வன்கொடுமை) கீழ் தண்டனைக்குரிய குற்றத்தை மனுதாரர் (குற்றம்சாட்டப்பட்ட நபர்) செய்தார் என சொல்ல முடியாது.

சூழ்நிலை காரணமாக அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. என்ன நடக்கும் என்பதை குற்றம்சாட்டப்பட்ட நபர் ஊகிக்க முடியாது. அது, அவருக்கு அப்பாற்பட்ட விஷயம். திருமணம் செய்து கொள்ள வேண்டும் என எண்ணம் இருந்தபோதிலும், பாதிக்கப்பட்ட பெண்ணை அவரால் திருமணம் செய்து முடியவில்லை.

திருமணம் செய்து கொள்ள பாதிக்கப்பட்ட பெண் தான் முதலில் மறுத்துள்ளார். வேறு ஒரு பையனை திருமணம் செய்து கொள்வதாக குற்றம்சாட்டப்பட்டவரிடம் தெரிவித்தார். குற்றம்சாட்டப்பட்ட நபர், வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்தபோதுதான், பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்" என நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

நோ பணம்.. இனி டிஜிட்டல் பேமெண்ட் தான்.. சுங்கச்சாவடியில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்
நோ பணம்.. இனி டிஜிட்டல் பேமெண்ட் தான்.. சுங்கச்சாவடியில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்
Top 10 News Headlines: 72 நாட்கள் விஜயை காணவில்லை.. அதிர்ச்சியில் ரஜினிகாந்த்.. டிரம்ப் கிண்டல்
Top 10 News Headlines: 72 நாட்கள் விஜயை காணவில்லை.. அதிர்ச்சியில் ரஜினிகாந்த்.. டிரம்ப் கிண்டல்
ரயில்வே பாதுகாப்பில் புதிய புரட்சி! இன்டர்லாக் சிஸ்டம், தானியங்கி கேட் மூடும் வசதி! விபரம் இதோ!..
ரயில்வே பாதுகாப்பில் புதிய புரட்சி! இன்டர்லாக் சிஸ்டம், தானியங்கி கேட் மூடும் வசதி! விபரம் இதோ!..
சபரிமலை பெண்கள் நுழைவு விவகாரம்: பிற கோயில் மரபுகளை முன்வைத்த மத்திய அரசு!
சபரிமலை பெண்கள் நுழைவு விவகாரம்: பிற கோயில் மரபுகளை முன்வைத்த மத்திய அரசு!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: கடலூர் பிரச்சாரம் திடீர் ரத்து; தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்- என்ன சொல்லிருக்கார் தெரியுமா?
TVK Vijay: கடலூர் பிரச்சாரம் திடீர் ரத்து; தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்- என்ன சொல்லிருக்கார் தெரியுமா?
திமுக கூட்டணியில் திருமாவளவன் கூனிக் குறுகி நிற்கிறார்...! அன்புமணி ராமதாஸ் அதிரடித் தாக்கு!
திமுக கூட்டணியில் திருமாவளவன் கூனிக் குறுகி நிற்கிறார்...! அன்புமணி ராமதாஸ் அதிரடித் தாக்கு!
Parthiban: சீமானுக்கு தொண்டை காயும்.. மண்டை காயாது.. ரைமிங்கில் பேசிய பார்த்திபன்!
Parthiban: சீமானுக்கு தொண்டை காயும்.. மண்டை காயாது.. ரைமிங்கில் பேசிய பார்த்திபன்!
TN Election: தேர்தல் நேரத்தில் மட்டும் தினம் தினம் வர்றீங்க? டெய்லியும் மக்களை பாக்க வரலாமே?
TN Election: தேர்தல் நேரத்தில் மட்டும் தினம் தினம் வர்றீங்க? டெய்லியும் மக்களை பாக்க வரலாமே?
வாய்ப்பு கொடுத்தும் கோட்டைவிட்ட தவெக! அதிருப்தியில் தொண்டர்கள்.. ரத்தான கடலூர் பிரச்சாரம்
வாய்ப்பு கொடுத்தும் கோட்டைவிட்ட தவெக! அதிருப்தியில் தொண்டர்கள்.. ரத்தான கடலூர் பிரச்சாரம்
கம்பம் தவெக வேட்பாளருக்கு நடிகர் பொன்னம்பலம் வாக்கு சேகரிப்பு – விஜய் குறித்து பேசிய வீடியோ வைரல்
கம்பம் தவெக வேட்பாளருக்கு நடிகர் பொன்னம்பலம் வாக்கு சேகரிப்பு – விஜய் குறித்து பேசிய வீடியோ வைரல்
Chennai New Commissioner: அருண் மாற்றம்! சென்னைக்கு புது காவல் ஆணையர் - யார் இந்த அபின் தினேஷ் மோடக்?
Chennai New Commissioner: அருண் மாற்றம்! சென்னைக்கு புது காவல் ஆணையர் - யார் இந்த அபின் தினேஷ் மோடக்?
கோடை விடுமுறைக்கு கூடுதல் ரயில்கள் – திருநெல்வேலி முதல் எழும்பூர், தாம்பரம் வரை சிறப்பு சேவை
கோடை விடுமுறைக்கு கூடுதல் ரயில்கள் – திருநெல்வேலி முதல் எழும்பூர், தாம்பரம் வரை சிறப்பு சேவை
Embed widget