மேலும் அறிய

மாநில தேர்தலில் வென்ற எம்பிக்கள் ராஜினாமா.. அடுத்த முதலமைச்சர் யார்? சஸ்பென்ஸ் கொடுக்கும் பாஜக

பாஜக வென்ற மாநிலங்களில் அடுத்த முதலமைச்சர் யார்? என்பதில் தொடர் சஸ்பென்ஸ் நீடித்து வருகிறது. 

ஐந்து மாநில தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வென்ற தெலங்கானாவில் ரேவந்த் ரெட்டியும் சோரம் மக்கள் இயக்கம் வென்ற மிசோரத்தில் லால்டுஹோமாவும் முதலமைச்சராக பதவியேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பாஜக வென்ற மாநிலங்களில் அடுத்த முதலமைச்சர் யார்? என்பதில் தொடர் சஸ்பென்ஸ் நீடித்து வருகிறது. 

அடுத்த முதலமைச்சர் யார்?

இந்த நிலையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வென்ற மத்திய அமைச்சர்கள் உள்பட எம்பிக்கள் அனைவரும் இன்று ராஜினாமா செய்துள்ளனர். அரசியலமைப்பின்படி, ஒரு நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருக்க முடியாது. ஏதேனும், ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

அந்த வகையில், மாநில முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் இருப்பவர்கள் மட்டுமே ராஜினாமா செய்வார்கள் என தகவல் வெளியானது. இச்சூழலில், தேர்தலில் போட்டியிட்டு வென்ற 9 எம்பிக்களும் ராஜினாமா செய்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மாநிலங்களவை உறுப்பினர் கிரோரி லால் மீனாவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பாஜக வென்ற மாநிலங்களில் அடுத்த முதலமைச்சர் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில், இந்த முறை புது முகங்களுக்கு முதலமைச்சர் பதவி அளிக்கப்படும் என பாஜக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையாக இருக்கும்பட்சத்தில், மத்திய பிரதேச முதலமைச்சராக 4 முறை பதவி வகித்த சிவராஜ் சிங் சவுகானுக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்படும். இந்திய அரசியல் வரலாற்றில் நீண்ட காலம் முதலமைச்சராக பதவி வகித்தவர்களில் சிவராஜ் சிங் சவுகானும் ஒருவர்.

தொடரும் சஸ்பென்ஸ்:

அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்யும் நோக்கில் பிரதமர் மோடியின் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோர் கலந்து கொண்டனர். மக்களவை தேர்தல் இன்னும் 4 மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், நடந்து முடந்த சட்டப்பேரவை பாஜகவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

எனவே, மாநில தேர்தலில் மத்திய அமைச்சர்கள் உள்பட 21 எம்பிக்கள் களமிறக்கப்பட்டனர். ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் 7 எம்பிக்களும் சத்தீஸ்கரில் 4 எம்பிக்களும் தெலங்கானாவில் 3 எம்பிக்களும் பாஜக சார்பில் களமிறங்கினர். ஆனால், தெலங்கானாவில் போட்டியிட்ட 3 எம்பிக்களும் தோல்வி அடைந்தனர்.

ராஜஸ்தானில் போட்டியிட்ட எம்பிக்களில் மூவரும் மத்திய பிரதேசத்தில் போட்டியிட்ட பாஜக எம்பிக்களில் இருவரும் தோல்வி அடைந்தனர். சத்தீஸ்கரில் ஒருவரும் தோல்வி அடைந்தார்.                                                                                                  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget