மேலும் அறிய

தேதி குறிச்சாச்சு.. ஆனா, மாப்பிள்ளை யாருனு தெரியாது.. மகாராஷ்டிர அரசியலில் தொடர் ரகளை!

மகாராஷ்டிராவின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகாத நிலையில், முதல்வர் பதவியேற்பு விழா எப்போது நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பை பாஜக வெளியிட்டுள்ளது

மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் பதவியேற்பு விழா, வரும் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி நடைபெறும் என பாஜக அறிவித்துள்ளது. மும்பையில் உள்ள புகழ்பெற்ற ஆசாத் மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், முதலமைச்சர் யார் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள் கடந்த 23ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அங்கு, பாஜக தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றியை பதிவு செய்தது.

மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார்?

கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மொத்தம் 234 தொகுதிகளில் வென்று, சாதனை படைத்தது. பாஜக மட்டும் 132 இடங்களை கைப்பற்றியது. சிவசேனா 57 தொகுதிகளிலும் தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. இதன் மூலம், பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது. 

தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் தொடர் சஸ்பென்ஸ் நீடித்து வருகிறது. முதலமைச்சர் பதவி யாருக்கு என்பது குறித்து அறிவிக்கப்படாத நிலையில், பதவியேற்பு விழா எப்போது நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பை பாஜக வெளியிட்டுள்ளது.

வரும் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி, பதவியேற்பு விழா நடைபெறும் என மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவான்குலே அறிவித்துள்ளார். மும்பையில் உள்ள புகழ்பெற்ற ஆசாத் மைதானத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கூட்டணியில் தொடர் ரகளை:

பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ்-க்கு முதலமைச்சர் பதவி தரப்பட உள்ளதாக பாஜக வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆனால், முதலமைச்சர் பதவி தனக்கே தரப்பட வேண்டும் என தற்போதைய முதலமைச்சரும் சிவசேனா கட்சியின் தலைவருமான ஏக்நாத் ஷிண்டே கேட்டு வந்ததாக தகவல்கள் வெளியானது. 

இந்த சூழலில், இந்த வாரம் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், ஆட்சி அமைக்க தடையாக இருக்க மாட்டேன் என ஷிண்டே கூறினார். மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து கூட்டணி தலைவர்களிடையே தொடர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும், தற்போதுவரை, முதலமைச்சர் பதவி யாருக்கு என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.

இதையும் படிக்க: Fengal Cyclone Landfall: அப்பாடா.! ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க ஆரம்பித்தது.! அப்போ, எப்போ முடியும்?

தலைப்பு செய்திகள்

இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..
எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..
கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றும் உரிமை உங்களுக்கு உண்டு! ஆர்பிஐ விதிகள் என்ன?
கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றும் உரிமை உங்களுக்கு உண்டு! ஆர்பிஐ விதிகள் என்ன?
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Tasmac liquor online : மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்.? விளக்க வீடியோ இதோ..
மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்- எப்படி தெரியுமா.?
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Embed widget