மேலும் அறிய
Advertisement
Bipin Rawat Demise: ‛மென்மையான நட்பு... மேன்மையான எண்ணம்..’ ராவத்தின் நெருங்கிய நண்பர் உருக்கம்!
Bipin Rawat Demise: ‛‛அவர் எங்கள் பேட்ஜில் மிகவும் மென்மையாக பேசக்கூடியவர். அனைவரிடத்திலும் அவர் மென்மையாகவே பேசுவார்,’’
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. 14 பேர் பயணித்த அந்த ஹெலிகாப்டரில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தும் அவரது மனைவியும் பயணித்தனர். இதில் பிபின் ராவத்தும், அவரது மனைவியும் துர்திஷ்டவசமாக விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். 14 பேர் பயணித்த நிலையில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதியாக நியமனம் செய்யப்பட்டவர் பிபின் ராவத். இதற்கான கால வரம்பு 65 வயதாகும். 2019ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியொடு ராணுவ தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத், ஒருநாள் முன்னதாக டிசம்பர் 30ஆம் தேதியே முப்படைக்கும் தலைமை தளபதியாக நியமனம் செய்யப்பட்டார்.
அவரது மறைவு, ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது நினைவுகளை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் அவரது பேட்ஜ் மேட்டும், அவரது நெருங்கிய நண்பருமான ஓய்வு பெற்ற இந்திய ராணுவ சிறப்பு படை பிரிகேடியர் மன்தீப் சிங் சந்த், ராவத் உடனான தனது இளமை கால அனுபவங்களையும், நெருக்கத்தையும் பகிர்ந்துள்ளார்.
‛ராவத்... மிக கவனமாக செயல்படக்கூடிய மனிதர். தனது பணி மூலம் நாட்டிற்கும் ராணுவத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் அவருள் இருந்தது. இந்தியாவின் முதல் முப்படைகளின் தளபதியாக அவர் தேர்வு செய்யப்பட்டது, சரியான முடிவு. அவர் அதற்கு முழுத் தகுதியானவர். அதற்குரிய அனுபவங்களை அவர் பெற்றிருந்தார்.
ராணுவத்தின் நவீனத்தை புகுத்த வேண்டும் என்பதில் அவர் எப்போதும் முனைப்போடு இருந்தார். அவர் எங்கள் பேட்ஜில் மிகவும் மென்மையாக பேசக்கூடியவர். அனைவரிடத்திலும் அவர் மென்மையாகவே பேசுவார். என்டிஏ வகுப்பில் நாங்கள் அனைவரும் மிக நெருக்கமான நண்பர்களாக இருந்தோம். அவர் எங்கள் பேட்ஜில் எல்லோருக்கும் நல்ல நண்பராக இருந்தார். அவரது இழப்பு பேரிழப்பு,’’ என கவலைபட கூறியுள்ளார்.
இதே போல் பலரும் பிபின் ராவத் உடனான தங்களின் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் பலரும் அதை பகிர்ந்து வருகின்றனர்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
மயிலாடுதுறை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion