மேலும் அறிய

பில்கிஸ் பானு வழக்கு... குற்றவாளிகளின் விடுதலை ரத்து செய்யப்படுமா? - என்ன முடிவு எடுக்கபோகிறது உச்ச நீதிமன்றம்..?

பில்கிஸ் பானு தாக்கல் செய்த மனு, வரும் டிசம்பர் 13ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. அந்த மனுவை, உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு விசாரிக்க உள்ளது.

கடந்த 2002ஆம் ஆண்டு, குஜராத் கலவரத்தின்போது பெண்கள், குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து நடந்த இந்த கலவரத்தின்போது டோஹட் மாவட்டம் ராதிக்பூர் கிராமத்தை சேர்ந்த பில்கிஸ் பானு தன்னுடைய குடும்பத்துடன் கிராமத்தை விட்டு வெளியேறி வேறொரு பகுதிக்கு சென்றுள்ளார்.

21 வயதான பில்கிஸ் பானு 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு 3 வயதில் ஏற்கனவே ஒரு பெண் குழந்தை வேறு இருந்தது. 

பில்கிஸ் பானு தன்னுடைய குடும்பத்தின் 17 பேருடன் வேறு கிராமத்திற்கு புறப்பட்டபோது, மார்ச் 3ஆம் தேதி, ஷபர்வாட் என்னும் கிராமத்தில் 20-30 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டார். பில்கிஸ் பானுவின் 3 வயது குழந்தையை கொடூரமாக சுவற்றில் அடித்துக்கொன்றது அந்த கும்பல். 

கர்ப்பிணியான பில்கிஸ், அவரது அம்மா உள்பட 3 பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமின்றி அவரது குடும்பத்தினர் 14 பேரை கொடூரமாக கொலை செய்தனர். 

இந்த வழக்கின் குற்றவாளிகளான 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், நன்னடத்தையின் அடிப்படையில் 11 குற்றவாளிகளையும் குஜராத் அரசு ஆகஸ்ட் 15ஆம் தேதி முன்கூட்டியே விடுவித்தது. குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

குறிப்பாக, குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்து ஹீரோக்கள் போல இந்து அமைப்பினர் வரவேற்றது மக்களிடையே கோபத்தை உண்டாக்கியது. குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பில்கிஸ் பானு தாக்கல் செய்த மனு, வரும் டிசம்பர் 13ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. அந்த மனுவை, உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு விசாரிக்க உள்ளது.

முன்னதாக, ஆயுள் தண்டனையை எதிர்த்து 11 குற்றவாளிகளில் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும்போது, 1992 தண்டனை குறைப்பு விதியின் கீழ் அவரை விடுவிப்பது குறித்து குஜராத் அரசு பரிசீலிக்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறியது. 

அந்த தீர்ப்பின் அடிப்படையில் மாநிலத்திலும் மத்தியிலும் உள்ள பாஜக அரசு விரைவாக நடவடிக்கை எடுத்து 11 குற்றவாளிகளையும் இரண்டே வாரங்களில் விடுதலை செய்தது. 

பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றவாளிகளின் விடுதலையை தடுக்கும் 2014 தண்டனை குறைப்பு விதியை குஜராத் அரசு கடைப்பிடித்திருந்தால் அது சாத்தியப்பட்டிருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
Rajinikanth Health: தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு  திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
Rajinikanth Health: தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு  திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
”1989 ஜூலை16 நினைவிருக்கிறதா? டாக்டர் ராமதாஸ்.! பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும்”- திமுக கடும் தாக்கு.!
”1989 ஜூலை16 நினைவிருக்கிறதா? டாக்டர் ராமதாஸ்.! பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும்”- திமுக கடும் தாக்கு.!
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Embed widget