Video : தொடர்ச்சியாக பெய்யும் கனமழை.. ஸ்தம்பித்த பெங்களூரு.. மூழ்கிய வாகனங்கள்..
அவசரத் தேவைகளைத் தவிர வீடுகளை விட்டு மக்கள் வெளியே வருவதைத் தவிர்க்குமாறும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்றும் மாநகரப் போக்குவரத்து அலுவலர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவை கடந்த ஒரு வார காலமாக பெருமழை ஸ்தம்பிக்க வைத்து வருகிறது. சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகபட்ச பெங்களூரில் சராசரியாக 131 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மழையால் பெங்களூரு முழுவதும் தத்தளிக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பெங்களூரு மக்கள் சரமாரியாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
#WATCH | Karnataka: Massive traffic jam on Marathahalli-Silk Board junction road in Bengaluru amid severe waterlogging caused due to heavy rainfall pic.twitter.com/KUnF0cuPtR
— ANI (@ANI) September 5, 2022
முன்னதாக நேற்று (செப்.05) இரவு முழுவதும் பெய்த கனமழையால் பல பகுதிகளின் நகரின் பிரதான சாலைகளில் மூழ்கியதால், நகரின் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக பெங்களூருவில் இவ்வாறு கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. நேற்றிரவு பெய்த கனமழையால் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் அடித்தளங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
State of affairs in #BengaluruAirport today. I feel like crying seeing the state of infra in India. This is beyond shame. #bengalururains pic.twitter.com/bJZWgY81dl
— Anirban Sanyal (@anirban_sanyal) September 4, 2022
இந்நிலையில், அவசரத் தேவைகளைத் தவிர, வீடுகளை விட்டு மக்கள் வெளியே வருவதைத் தவிர்க்குமாறும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்றும் மாநகரப் போக்குவரத்து அலுவலர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
#bengalururains #adarsh today pic.twitter.com/EXs6QCMCYL
— Prashanth Havinahal (@havinahal) September 4, 2022
குறிப்பாக ஈகோஸ்பேஸ் வெளிவட்ட சாலை, பெல்லந்தூர், கேஆர் மார்க்கெட், சில்க் போர்டு சந்திப்பு, வர்தூர் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. HBR லேஅவுட்டில் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
#ecospace #bangalorerain #bengalururains
— Madhu M (@MadhunaikBunty) September 5, 2022
Security personnels of ecospace IT corridor are working restlessly to help people to cross the road which is completely water logged at #outerringroad. #marathalli #Karnataka pic.twitter.com/Z65BK8r1tS
பழைய விமான நிலைய சாலையின் நடுவே பேருந்துகள் முன்னதாக சிக்கிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலானது. இரண்டு நாட்களுக்கு முன் பெங்களூரு முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இப்பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார். சர்ஜாபூர் சாலையில் கட்டிடங்களின் வாகன நிறுத்துமிடங்கள் தண்ணீருக்கு அடியில் மூழ்கியுள்ளதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஒயிட்ஃபீல்ட் மெயின் ரோடு, பழைய ஏர்போர்ட் ரோடு, பாலகெரே மெயின் ரோடு, சர்ஜாபூர் ரோடு, ஏமலூர் மெயின் ரோடு ஆகிய இடங்களிலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.