மேலும் அறிய

Fingerprint Scanners: விரல்ரேகையை ஸ்கேன் செய்தாலே வரலாறு சிக்கிடும்! குற்றவாளிகளுக்கு செக் வைக்கும் கர்நாடக போலீஸ்!

Fingerprint Scanners: கைரேகையைக் கொண்டு சந்தேக நபர்களைக் கண்காணிக்கவும் குற்றங்களைத் தடுக்கவும் பெங்களூரு போலீஸார், புதிய முயற்சியை நாட்டிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளனர்.

Fingerprint Scanners: சந்தேக நபர்களைக் கண்காணிக்கவும் குற்றங்களைத் தடுக்கவும் பெங்களூரு போலீஸார் கைரேகை ஸ்கேனர் சாதனம் மற்றும் MCCTNS செயலியைப் பயன்படுத்துகின்றனர். சந்தேக நபர்களின் கைரேகைகள் MCCTNS செயலியின் அடிப்படையில், அவர்களின் குற்றப் பின்னணியை அறிந்து கொள்ள முடியும். . கர்நாடக தலைநகரில் இந்த முன்னோடி திட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து காவல் நிலையங்களும் கைது செய்யப்பட்ட நபர்களின் கைரேகைகளை கைப்பற்றி சேமித்து வருகின்றது. 

கைரேகை போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குற்றவாளிகளை பிடிக்க பெங்களூரு நகர போலீசார் முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, மாநிலத்தில் உள்ள காவல் நிலையங்களில் கைது செய்யப்பட்ட அனைவரின் கைரேகைகளையும் கைப்பற்றி சேமிக்க ஸ்கேனர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கைரேகைகள் மாநில காவல்துறைக்கு அனுப்பப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரவிருக்கிறது.  ஒரு நபரின் கைரேகையை MCCTNS செயலியில் ஸ்கேன் செய்தால், அதில், அவர் இதற்கு முன்னர் ஏதேனும் குற்றத்தில் ஈடுபட்டிருந்தால்,  உடனடியாக திரையில் குற்றத்தின் முழு விபரம் மற்றும் எவ்வளவு குற்றங்கள் என்பதுவரை தெரியவரும். இதற்காக மொபைல் கிரைம் மற்றும் கிரிமினல் டிராக்கிங் நெட்வொர்க் சிஸ்டம் ஆப் (MCCTNS) ஐ மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் உருவாக்கியுள்ளனர். 

மேலும் கர்நாடக காவல் துறையினருக்கு கைரேகை ஸ்கேனர் கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதனால், போலீசார் சந்தேக நபரின் விரல்களை ஸ்கேன் செய்து, அவர்களின் விவரங்களை MCCTNS செயலி மூலம் சரிபார்க்கலாம். இதன் மூலம் காவல் துறை சந்தேகிக்கும் சந்தேக நபரின் அனைத்து குற்றப் பதிவுகளையும், கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களையும் அந்த கைரேகை ஸ்கேனர் திரையில் காண்பித்துவிடும். கைரேகை சரிபார்க்கப்பட்டதும், sசந்தேககிக்கப்படும் நபருக்கு குற்றப் பின்னணி இருந்தால், குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காவலில் வைக்கலாம். கர்நாடக காவல் துறை கொண்டுவந்துள்ள இந்த புதிய நடைமுறையின் கீழ், இரவு 11 மணிக்கு மேல் சந்தேகத்திற்கிடமான முறையில் சாலையில் செல்பவர்களின் கைரேகைகளை போலீசார் ஸ்கேன் செய்து வருகின்றனர்.

இதன் மூலம் பிடிபடும் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவார்கள். இதில் இருந்து எந்த குற்றவாளியும் தப்ப முடியாது என்கிறார் பெங்களூரு நகர கிழக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் சுப்பிரமணியேஸ்வர ராவ். இந்நிலையில், நாட்டில் அதிகரித்து வரும் குற்றங்களை தடுக்க மத்திய அரசு மாஸ்டர் பிளான் ஒன்றை தயாரித்துள்ளது. குற்றங்களை கட்டுப்படுத்தவும், குற்றவாளிகளை கைது செய்யவும் உதவும் புதிய செயலியை மத்திய உள்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. பெங்களூரில் மக்கள் இரவு பகலாக உழைக்கிறார்கள். குறிப்பாக IT-BT மற்றும் MNC நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வெகுநேரம் வரை நகரத்தில் சுற்றித் திரிகின்றனர்.

இதை மூலதனமாக கொண்டு, இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்லும் நபர்களை குற்றவாளிகள் வழிமறித்து மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுதவிர, கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்கள் சமீபகாலமாக நகரில் அதிகரித்து வருகின்றன. அதனால்தான் நகரங்களில் குற்றங்களைத் தடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் MCCTNS மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. MCCTNS செயலி பெங்களூர் காவல்துறைக்கு ஒரு சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் இந்த செயலியை போலீசார் ஏற்கனவே பயன்படுத்தி வருகின்றனர். நாட்டிலேயே கர்நாடகாவின் பெங்களூருவில் தான் இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூடிய விரைவில் நாடு முழுவதும் MCCTNS செயலியைக் கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காண்பது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Sabarimala Temple: ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
Embed widget