Yediyurappa: போக்சோ வழக்கில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கைது வாரண்ட்
Yediyurappa: சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் புகாரில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாதபடி கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் வைக்கப்பட்ட நிலையில், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கர்நாடக நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
எடியூரப்பா மீது பாலியல் புகார்:
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது, ஒரு பெண் பாலியல் புகார் அளித்த நிலையில், போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த பெண் தெரிவித்துள்ள புகாரில், கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி எடியூரப்பா வீட்டிற்கு சென்றபோது, தனது மகளை எடியூரப்பா பாலியல் தொல்லை அளித்ததாக பெண் ஒருவர் குற்றம் சாட்டி புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து, சதாசிவநகர் காவல்துறையினரால், மார்ச் 14ஆம் தேதி கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா (81) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கைது வாரன்ட்:
இந்நிலயில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் வைக்கப்பட்ட வழக்கில், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கர்நாடக நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
Bengaluru court issues non-bailable arrest warrant against former CM B S Yediyurappa in POCSO case
— Press Trust of India (@PTI_News) June 13, 2024
17 வயதுடைய சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்ததாக கூறப்படும் வழக்கில், விசாரணைக்கு ஆஜராகுமாறு எடியூரப்பாவுக்கு சிஐடி சம்மன் அனுப்பியிருந்த நிலையில், ஜூன் 17 ஆம் தேதி சிஐடி முன்பு விசாரணைக்கு ஆஜராவதாக எடியூரப்பா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எடியூரப்பா புகாரளித்த சிறுமியின் தாய், சில தினங்களுக்கு முன்பு, பெங்களூர் மருத்துவமனையில் காலமானார். இவர் பல உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டதாகவும் கடுமையான சுவாச சிக்கல்கள் காரணமாக மே 26 ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மே 27 ஆம் தேதி காலமானார். புகார் அளித்தவர் காலமானது , பெரிதும் சர்ச்சையான நிலையில், இவர் இறப்பானது உடல்நலக்குறைவினால்தான் என மருத்துவ தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.