Sourav Ganguly| மனைவியும் கேர்ள் ஃப்ரெண்டும்.. பெரும் சர்ச்சையில் சிக்கிய கங்குலி..!
பிசிசிஐ தலைவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரங் கங்குலி தற்போது பிசிசிஐ தலைவராக இருந்து வருகிறார். இவர் சமீபத்தில் குருகிராமில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது நிலவும் சூழல் மற்றும் அதில் இருக்கும் நெருக்கடியான சூழல் தொடர்பாக சில கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு சவுரவ் கங்குலி கூறிய பதில்கள் மிகவும் சர்ச்சையாகியுள்ளன.
இதுகுறித்து அவர், ”வாழ்க்கையில் எப்போதும் மன அழுத்தம் என்பதே இருக்காது. வாழ்வில் மனைவியும், கேர்ள் ஃப்ரெண்டும் நமக்கு மிகப்பெரிய மன அழுத்தம்” என்று காமெடியாக பதிலளித்துள்ளார். அவரின் இந்தக் கருத்தை பலரும் வன்மையாக கண்டித்து வருகின்றனர். அத்துடன் பலரும் இது தொடர்பாக தங்களுடைய கருத்துகளை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
That comment by Ganguly is in such bad taste. Especially given how the pandemic and bubbles have affected players mental health. To say something as dismissive and blaming stress on their partners when we've had trolls blame players failures on wives regularly is plain stupid.
— Alone Musk (Rohit) (@rohshah07) December 21, 2021
அதில் குறிப்பாக பலரும், “இது எப்படி காமெடியாக இருக்க முடியும். இது ஒரு தவறான கருத்து. வீரர்களின் விளையாட்டில் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு அவர்களுடைய மனைவி எப்படி பொறுப்பாக முடியும்? இதில் எந்த இடத்தில் சிரிப்புவரும்போல உள்ளது என்பதை நீங்களே சொல்லுங்கள்?” என்று கூறி வருகின்றனர்.
ganguly said his wife gives him the most stress? the misogyny is off the roof
— 🌯 (@thatsthat100) December 19, 2021
ஏற்கெனவே இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலியை நீக்கிய போது கங்குலியின் வார்த்தைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது அவர் விராட் கோலியிடம் பதவி விலக வேண்டாம் என்று தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டதாக கூறினார். ஆனால் அதை விராட் கோலி தன்னுடைய செய்தியாளர் சந்திப்பில் மறுத்திருந்தார். ஆகவே அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் இந்த கருத்தின் மூலம் மேலும் ஒரு சர்ச்சையில் இவர் சிக்கியுள்ளார்.
Less than 10 years ago men were laughing at rape jokes. And when we didnt we were called childish.
— Chinmayi Sripaada (@Chinmayi) December 20, 2021
The absolute lack of understanding of how sexist this shit is and if the reverse were done on you all the time - we’ll see how funny you find it :)
That’s all
@SGanguly99 this is casual sexism. Even if you are trying to joke it is sexist, non-comical and belittling a gender. Wish you retract this statement since you are a person of certain stature, position and responsibility. @BCCI @BCCIWomen
— Harish (@harish_s19) December 19, 2021
Every one keeps saying it's a joke. Can someone explain what's funny so I can laugh too?
— Sell the team, Steve (@Kellieherring) December 19, 2021
மேலும் படிக்க: பரபரப்பான போட்டி.. பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றது இந்தியா!