IND vs PAK Hockey | பரபரப்பான போட்டி.. பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றது இந்தியா!
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் வெண்கல பதக்க போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி பங்களாதேஷ் தலைநகர் தாகாவில் நடைபெற்றது. இதில் இந்தியா, பங்களாதேஷ், தென்கொரியா, ஜப்பான், பாகிஸ்தான் உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்கின்றன. கொரோனா பாதிப்பு காரணமாக மலேசிய அணி இந்த தொடரிலிருந்து விலகியது. இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய அணி ஜப்பான் அணியிடம் 3-5 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இதனால் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா சென்றது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற வெண்கலப்பதக்க போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதல் கால்பகுதியில் இரு அணிகளும் அதிரடியாக தொடங்கின. குறிப்பாக இந்திய அணி முதல் கோலை பெனால்டி கார்னர் வாய்ப்பின் மூலம் அடித்தது. அதன்பின்னர் பாகிஸ்தான் அணியும் முதல் கால்பகுதியிலேயே கோல் அடித்து 1-1 என சமன் செய்தது. அதன்பின்னர் இரண்டாவது கால் பகுதியில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை.
மூன்றாவது கால்பகுதியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாட தொடங்கியது. முதலில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி பாகிஸ்தான் அணி கோல் அடித்து 2-1 என முன்னிலை பெற்றது. அதைத் தொடர்ந்து இந்திய வீரர் சுமித் மேலும் ஒரு கோல் அடித்து சமன் செய்தார். மூன்றாவது கால் பகுதியின் இறுதியில் இரு அணிகளும் தலா 2-2 என சமனில் இருந்தன.
Congratulations to the #MenInBlue for clinching the 3rd place in the Hero Men’s Asian Champions Trophy Dhaka 2021. 🏆
— Hockey India (@TheHockeyIndia) December 22, 2021
Well played, team 🇮🇳.👏🤩#IndiaKaGame #HeroACT2021 pic.twitter.com/j7UDwYoins
நான்காவது மற்றும் கடைசி கால்பகுதி மிகவும் பரப்பராக அமைந்தது. அதில் இந்திய அணியின் வருண் குமார் பெனால்டி கார்னர் மூலம் ஒரு கோல் அடித்து இந்தியாவிற்கு முன்னிலை பெற்று தந்தார். அதைத் தொடர்ந்து ஆகாஷ்தீப் சிங் அசத்தலாக மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் இந்திய அணி 4-2 என முன்னிலை பெற்றது. கடைசி கட்டத்தில் பாகிஸ்தான் அணி மேலும் ஒரு கோலை அடித்தது. இறுதியில் இந்திய அணி 4-3 என்ற கணக்கில் போட்டியை வென்றது. அத்துடன் வெண்கலப்பதக்கத்தையும் வென்று அசத்தியது.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் 2011ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதில் அதிகபட்சமாக இந்திய அணி 3 முறையும்(2011,2016,2018), பாகிஸ்தான் அணி (2012,2013,2018) 3 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர். 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இறுதி போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதன்காரணமாக இந்திய-பாகிஸ்தான் அணிகள் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். 2016,2018 தொடர்ந்து 2021ஆம் ஆண்டிலும் தொடரை வென்று இந்தியா இம்முறை மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: வாஷிங்டன் சுந்தர் To ஸ்ரேயாஸ் ஐயர்- 2021-ஆம் ஆண்டில் அசத்திய அறிமுக வீரர்கள் !