மேலும் அறிய

Axel The Dog : பயங்கரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த நாய், ஆக்சலுக்கு விருது.. கண்கலங்க வைக்கும் விவரம்..

எட்டு மணிநேரம் துப்பாக்கிச் சண்டை நடந்த கட்டிடத்தில் ஒரு பயங்கரவாதியின் இருப்பிடத்தைக் கண்டறிய இராணுவப் படைகளுக்கு உதவியது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் நடைபெற்ற பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் உயிர்நீத்த இந்திய ராணுவ நாய் 'ஆக்சல்' இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான வீர விருதுகளில், மரணத்திற்குப் பின் 'மென்ஷன்-இன்-டெஸ்பாட்ச்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

மென்ஷன்-இன்-டெஸ்பாட்ச்

பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட நாய், தனது பணிக்காக விருது பெற்ற முதல் ராணுவ நாய் ஆகும். பாதுகாப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட பட்டியலின்படி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு 'மென்ஷன்-இன்-டெஸ்பாட்ச்'  இராணுவ வீரர்கள் 40 பேருக்கும், ஒன்று விமானப்படை வீரருக்கும், மற்றொன்று 'ஆக்ஸலுக்கும்' ஒப்புதல் அளித்துள்ளார். எல்லைகள், போர் பகுதிகளில் துணிச்சலான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு தகுதி வாய்ந்த சேவையை அங்கீகரிப்பதற்காக 'மென்ஷன்-இன்-டெஸ்பாட்ச்ஸ்' வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்: Patriotic Songs Tamil: வந்தே மாதரம்... தாயின் மணிக்கொடி...தேசப்பற்றுக்கான டாப்-10 தமிழ் பாடல்கள்..!

குடியரசு தலைவர் ஒப்புதல்

ஆபரேஷன் ரக்ஷக், ஆபரேஷன் ஸ்னோ லியோபார்ட், ஆபரேஷன் ரினோ, ஆபரேஷன் ஆர்க்கிட், ஆபரேஷன் ஃபால்கன், ஆபரேஷன் ஹிஃபாசாட் உள்ளிட்ட பல்வேறு ராணுவ நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்காக, 'மெண்ஷன்-இன்-டெஸ்பாட்ச்'களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததாக பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்: Independence Day 2022 Wishes: 75-வது சுதந்திர தினம்: வாழ்த்துகள், புகைப்படங்கள், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் இங்கே..!

ஆக்சல் ராணுவ நாய்

ஆக்செல்' 26 வது இராணுவ நாய் பிரிவின் ஒரு பகுதியாக இருந்தது. அது ஆபரேஷன் ரக்ஷக்கில் ஈடுபட்டது. கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரில் இந்த இரண்டு வயது நாய்க்கு ராணுவ விழாவில் அஞ்சலி செலுத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. ஆக்சலை பல தோட்டாக்கள் துளைத்திருந்தன. எட்டு மணிநேரம் துப்பாக்கிச் சண்டை நடந்த கட்டிடத்தில் ஒரு பயங்கரவாதியின் இருப்பிடத்தைக் கண்டறிய இராணுவப் படைகளுக்கு உதவியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்: 3 வருஷம் ஜெயில்தான்! தேசியக்கொடி ஏற்றும்முன் இதிலெல்லாம் கவனம் தேவை! முழு விவரம்!

சண்டையின்போது நடந்தது…

ஆக்சல் கண்டுபிடித்த குப்வாராவைச் சேர்ந்த அக்தர் ஹுசைன் பட் என்று பின்னர் அடையாளம் காணப்பட்ட பயங்கரவாதி, பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டார். இவர் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்துடன் தொடர்புடையவர். 'ஆக்செல்' முதல் இருப்பவர்களை கண்டுபிடிக்க உதவி, இரண்டாவது அறைக்குள் நுழைந்தவுடன், ஒரு பயங்கரவாதி அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். சுடப்பட்டு 15 வினாடிகளுக்கு அசைந்ததாகவும், அதன் பின்னர் கீழே விழுந்ததாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். துப்பாக்கிச் சண்டை முடிவுக்கு வந்ததையடுத்து, சம்பவ இடத்தில் இருந்து 'ஆக்சல்' உடலை ராணுவம் மீட்டது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
Vijay Sethupathi :
Vijay Sethupathi : "இது என் படத்தோட ப்ரோமோஷன்..அத பத்தி ஏன் பேசனும்?" சூடான விஜய் சேதுபதி
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமா பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுத்தேனா? - அமைச்சர் எ.வ.வேலு  விளக்கம்
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமா பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுத்தேனா? - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
மதுரை மக்களே உஷார்.. நாளை (17-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் விவரம் இதோ
மதுரை மக்களே உஷார்.. நாளை (17-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் விவரம் இதோ
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
Embed widget