Equinox: அரிதிலும்..அரிது..! இரவும், பகலும் இன்று சமம் ; இந்தியாவில் இந்த அதிசயம் நிகழ்வது எப்படி..?
இந்தியாவில் இன்று அரிதான நிகழ்வாக இரவும், பகலும் சமமாக 12 மணி நேரமாக நிகழ்கின்றன.
பூமியில் அவ்வப்போது அரிதான பல நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. இந்த ஆச்சரியத்தில் இன்று அரிதான நிகழ்வான இரவு மற்றும் பகல் 12 மணி நேரம் என்ற சம அளவில் ஏற்படுகின்றது.
சூரியனை சுற்றும் பூமி:
கோடை காலத்தில் பகல் பொழுது அதிகமாக இருக்கும். குளிர் காலத்தில் இரவு பொழுது அதிகமாக இருக்கும். ஆனால் வருடத்தில் 2 நாட்கள் சமமாக இரவு பொழுதும், பகல் பொழுதும் ஏற்படுகின்றது. அந்த இரண்டு நாடகளில் ஒன்றுதான் இன்று (செப்டம்பர் 23) நிகழ்ந்தது.
சூரியனை, பூமி உள்ளிட்ட 8 கோள்கள் சுற்றி வருகின்றன. பூமியானது சூரியனை சுற்றிக் கொண்டே தானாகவும் சுழன்று வருகின்றது. பூமியானது சூரியனை முழுமையாக சுற்றி வர 365 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. ஆகையால் இந்த காலத்தை ஒரு வருடம் என அழைக்கிறோம். பூமியானது தன்னை தானே முழுமையாக சுற்றி கொள்ள 24 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது, இந்த காலத்தை 1 நாட்கள் என அழைக்கிறோம்.
பாதி இரவு, பாதி பகல்:
பூமியானது சூரியனையும் தன்னை தானேயும் சுற்றி வருவதால், பாதி இரவு பாதி பகல் ஏற்படுகிறது. பூமியானது 23.5டிகிரி சாய்ந்து கொண்டு சூரியனை சுற்றி வருவதால், வருடத்தில் பாதி நாட்கள் சூரியனின் ஒளிக்கதிர்கள் வட அரைக்கோளத்தில் முழுமையாகவும், மீதி பாதி நாட்கள் தென் அரைக்கோளத்தில் முழுமையாகவும் விழுகின்றது. இவ்வாறு வட மற்றும் தென் அரைக்கோளத்தில், சூரிய ஒளிக்கதிர்கள்( செங்குத்தாக விழும் கதிர்கள்) பயணிக்கும் போது 2 முறை நிலநடுக்கோட்டை(பூமியின் மையக்கோடு) கடக்கிறது. சூரிய கதிர்கள் பயணிக்காது, பூமி சுற்றுவதால் சூரிய கதிர்கள் பூமியில் படுவது மாறிக் கொண்டே இருக்கிறது.
அவ்வாறாக சூரிய கதிர்கள் பூமியின் மையப்பகுதியான நிலநடுக்கோட்டில் படும்போது பகல் மற்றும் இரவு சம அளவில் ஏற்படுகிறது. அவ்வாறான நிகழ்வு வருடத்தின் இரண்டு முறை மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நிகழ்கிறது. செப்டம்பர் மாதத்தில் நிகழும் இந்நிகழ்வானது இன்று (23 ஆம் தேதி) நிகழ்கிறது. இனி வரும் காலம் இலையுதிர் காலம் என்பதால் இலையுதிர் சம இரவு ( Autumn equinox) என அழைக்கப்படுகிறது. அடுத்த சமமான இரவு மற்றும் பகல் (இளவேனிற் சம இரவு) அடுத்த வருடம் மார்ச் மாதம் 20ஆம் தேதி நிகழும்.
Also Read: கண்டம் டூ கண்டம்! நோ ரெஸ்ட்! ஒரே மூச்சாக 7000 மைல்கள் பறக்கும் பறவை!
The autumnal equinox is the 2nd moment in the year when the Sun is just above the equator,and day and night are of equal length.
— SylSoulfood (@SylSoulfood) September 23, 2022
I wish that this new season brings new energies and new hopes in your life to achieve new goals.A very Happy Autumnal Equinox to you … #HappyEquinox pic.twitter.com/IgRaRCj0Xt