Mizoram Election Result 2023 LIVE: ஆட்சியைப் பிடித்தது ஜோரம் மக்கள் இயக்கம்; 21 இடங்களில் வெற்றி; 6 இடங்களில் முன்னிலை
Assembly Election Results 2023 LIVE Updates(தேர்தல் முடிவுகள் 2023): மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கான மாநில தேர்தல் முடிவுகளின் லைவ் அப்டேட்களை, உடனுக்குடன் அறிய இணைந்திருங்கள்.
LIVE
Background
Assembly Election Results 2023 LIVE Updates | தேர்தல் முடிவுகள் 2023
Mizoram Election Results: 5 மாநில தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் இதற்கிடையில் மிசோரம் மக்கள் ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டிற்காக தேவாலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதால் வாக்கு எண்ணிக்கையை மாற்றி வைக்குமாறு கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து நேற்று வாக்கு எண்ணிக்கை மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்திற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்தது. அதன் அடிப்படையில் தெலுங்கானாவில் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. மற்ற மூன்று மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றது.
இதையடுத்து இன்று அதாவது டிசம்பர் 4ஆம் தேதி மிசோரம் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது. 40 தொகுதிகள் கொண்ட மிசோரம் மாநிலத்தில் ஆளும் மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ், ஜோரம் மக்கள் இயக்கம் ஆகிய கட்சிகள் களத்தில் இறங்கியதால் மும்முனை போட்டி நிலவுகிறது. இதற்காக 13 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதலில் காலை 8.30 மணிக்கு தபால் ஓட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. அதை தொடர்ந்து மின்னணு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படவுள்ளது. 40 தொகுதிகள்தான் என்பதால் முடிவுகள் மதியத்திற்குள் தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மிசோரத்தில் ஆட்சியைப் பிடிக்க மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 21 தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதும். நேற்றைய வாக்கு எண்ணிக்கையைப் பொறுத்தவரையில் ராஜஸ்தானில் உள்ள 119 தொகுதிகளில் பாஜக 115 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதற்கு முன்னர் ராஜஸ்தான் காங்கிரஸ் வசம் இருந்தது. அதேபோல் காங்கிரஸ் 69 தொகுதிகளில் வெற்றி பெற்று பிரதான எதிர்க்கட்சியாகி உள்ளது.
Mizoram Election Result 2023 LIVE: வெற்றியை உறுதி செய்யும் ஜோரம் மக்கள் இயக்கம்
மிசோரத்தில், ஜோரம் மக்கள் இயக்கம் 20 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் நிலையில் உள்ளது. மேலும் 7 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆளும் கட்சியான மிசோரம் தேசிய முன்னணி 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
Mizoram Election Result 2023 LIVE: 17 இடங்களில் வெற்றி பெற்றது ஜோரம் மக்கள் இயக்கம்
ஜோரம் மக்கள் இயக்கம் இதுவரை 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 10 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றது.
Mizoram Election Result 2023 LIVE: அரியணையை நோக்கி ஜோரம் மக்கள் இயக்கம் ; 16 இடங்களில் வெற்றி; 11 இடங்களில் முன்னிலை
இன்று தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் நண்பகல் 1 மணி நிலவரப்படி ஜோரம் மக்கள் இயக்கம் 16 இடங்களில் வெற்றியை உறுதி செய்துள்ளது. மேலும் 11 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது. பாஜக இரண்டு இடத்தில் வெற்றியை உறுதி செய்துள்ளது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் முன்னிலை வகித்து வருகின்றது. அதேபோல் ஆட்சியில் உள்ள மிசோ தேசிய முன்னணி மூன்று இடத்தில் வெற்றியும் 7 இடங்களில் முன்னிலையும் வகிக்கின்றது.
Mizoram Election Result 2023 LIVE: ஒரு இடத்தில் வெற்றி அடைந்தது பாஜக..!
மிசோரத்தில் பாஜக ஒரு இடத்தில் வெற்றியும் ஒரு இடத்தில் முன்னிலையிலும் உள்ளது. பாஜக பலக் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.
Mizoram Election Result 2023 LIVE: பெரும்பான்மையை வெல்லுமா ஜோரம் மக்கள் இயக்கம்..!
ஜோரம் மக்கள் இயக்கம் தற்போதைய நிலவரப்படி 26 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது. மேலும் இந்த கட்சி ஆட்சியை பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளது. தற்போது ஆட்சியில் உள்ள மிசோரம் தேசிய இயக்கம் 13 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது.