Assembly Election Results 2023: 3 மாநிலங்களில் ஆட்சி அமைக்கும் பாஜக கூட்டணி..? கூட்டணியில் வியூகம் அமைக்கும் பாஜக!
திரிபுரா மற்றும் நாகாலாந்து கூட்டணி கட்சிகளின் உதவியுடனும், மேகாலயாவில் கான்ராட் சங்மாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க பாஜக முயற்சி மேற்கொண்டு வருகிறது.
![Assembly Election Results 2023: 3 மாநிலங்களில் ஆட்சி அமைக்கும் பாஜக கூட்டணி..? கூட்டணியில் வியூகம் அமைக்கும் பாஜக! Assembly Election Results 2023: Keeps Nagaland, Tripura, Reunites With Meghalaya Ally Assembly Election Results 2023: 3 மாநிலங்களில் ஆட்சி அமைக்கும் பாஜக கூட்டணி..? கூட்டணியில் வியூகம் அமைக்கும் பாஜக!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/03/90dae50cb275db325669f08d645115211677817126229571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல்களில் பாஜக மறும் அதன் கூட்டணி கட்சிகள் இரண்டு இடங்களில் வெற்றிபெற்றது. திரிபுரா மற்றும் நாகாலாந்து கூட்டணி கட்சிகளின் உதவியுடனும், மேகாலயாவில் கான்ராட் சங்மாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க பாஜக முயற்சி மேற்கொண்டு வருகிறது.
திரிபுராவில் கூட்டணி ஆட்சி அமைக்கும் பாஜக:
ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதிக்கமாக இருந்த திரிபுரா, தற்போது பாஜக கைகளில் தஞ்சமடைந்துள்ளது. 60 தொகுதிகள் கொண்ட திரிபுராவில், எதிர்கட்சிகளாக உள்ள காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் போட்டியிட்டது. இருப்பினும்,திரிபுராவில் பாஜக கூட்டணி 32 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ளனர். இங்கு, சிபிஎம் கூட்டணி 14 இடங்களிலும், திமோக 13 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
நாகலாந்தில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை:
நாகாலாந்து தேர்தலில் பாஜக 12 இடங்களிலும், கூட்டணி கட்சியான என்டிபிபி 25 இடங்களிலும் வெற்றி பெற்றன. திரிபுராவில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றது. இங்கு 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. திப்ரா மோதா கட்சி 21 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மேகாலயாவில் பாஜக நிலைமை:
மேகாலாயாவில் மொத்தம் உள்ள 60 இடங்களில் 26 இடங்களில் வெற்றி பெற்று முதலிடம் வகித்தாலும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை தேமகவுக்கு இல்லை. எனவே சுயேட்சைகளிடமும், பாஜகவிடமும் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளனர். இந்த தேர்தலில் பாஜக 3 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் திரிணாமூல் காங்கிரஸ் 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, மேகாலயாவில் கான்ராட் சங்மாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க அக்கட்சி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
3 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி கூறியது என்ன?
நாகலாந்து:
பிரதமர் மோடி பேசுகையில், “என்டிபிபி-பாஜகவை ஆசிர்வதித்த நாகாலாந்து மக்களுக்கு நன்றி. அரசுக்கு சேவை செய்ய மக்கள் மீண்டும் கூட்டணிக்கு ஆணையிட்டுள்ளனர். இரட்டை இயந்திர அரசு, மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபடும். இந்த முடிவை உறுதி செய்த எனது கட்சி தொண்டர்களின் கடின உழைப்பை நான் பாராட்டுகிறேன்.
திரிபுரா:
நன்றி திரிபுரா! இது முன்னேற்றம் மற்றும் உறுதித்தன்மைக்கான வாக்கு. மாநிலத்தின் வளர்ச்சிப் பாதையை பாஜக தொடர்ந்து முன்னெடுக்கும். அனைத்து திரிபுரா பிஜேபி தொண்டர்களும் அடிமட்ட அளவில் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டதற்காக நான் பெருமைப்படுகிறேன்.
மேகாலயா:
மேகாலயாவில் பாஜகவுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் மோடி மற்றொரு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேகாலயாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கும், மாநில மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்துவதற்கும் நாங்கள் தொடர்ந்து கடினமாக உழைப்போம். எனது கட்சி தொண்டர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)