மேலும் அறிய

எதிர்பார்ப்புகளை கிளப்பிய ஆசிய பெளத்த உச்சி மாநாடு.. குடியரசுத்தலைவர் பங்கேற்பு!

முதலாவது ஆசிய பௌத்த உச்சி மாநாடு வரும் நவம்பர் 5ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.

மத்திய கலாச்சார அமைச்சகம், சர்வதேச பௌத்த கூட்டமைப்புடன் இணைந்து முதலாவது ஆசிய பௌத்த உச்சி மாநாட்டை வரும் நவம்பர் 5ஆம் தேதி முதல் நடத்த உள்ளது. இரண்டு நாள் மாநாடு, டெல்லியில் நடைபெற உள்ளது.

'ஆசியாவை வலுப்படுத்துவதில் புத்த தம்மத்தின் பங்கு' என்பது இந்த உச்சி மாநாட்டின் கருப்பொருளாகும். இந்த உச்சிமாநாட்டில்  சிறப்பு விருந்தினராக குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய பெளத்த உச்சி மாநாடு:

ஆசியா முழுவதும் உள்ள பல்வேறு பௌத்த மரபுகளைச் சேர்ந்த சங்கத் தலைவர்கள், அறிஞர்கள், வல்லுநர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஒன்றிணைத்து, உரையாடலை ஊக்குவிப்பதற்கும், புரிதலை மேம்படுத்துவதற்கும், பௌத்த சமூகம் சந்திக்கும் சமகால சவால்களை எதிர்கொள்வதற்கும் இது உதவும்.

இந்தியா மற்றும் அனைத்து ஆசியாவின் ஆன்மீக, கலாச்சார வரலாற்றில் பௌத்தம் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. புத்தர், அவரது சீடர்கள் மற்றும் போதகர்களின் போதனைகள் வாழ்க்கை, தெய்வீகம் மற்றும் சமூக மதிப்புகள் குறித்த பொதுவான கண்ணோட்டத்தின் மூலம் ஆசியாவை ஒன்றிணைத்துள்ளன.

புத்த தம்மம் இந்தியக் கலாச்சாரத்தின் மதிப்புமிக்க அங்கமாக உருவெடுத்துள்ளது. உறுதியான வெளியுறவுக் கொள்கை மற்றும் பயனுள்ள தூதரக உறவுகளை வளர்ப்பதில் நாட்டிற்கு உதவுகிறது. சுதந்திர இந்தியாவின் தேசிய அடையாளத்தின் ஒரு பகுதியாக பௌத்த சின்னங்களை இணைப்பது முதல் அதன் வெளியுறவுக் கொள்கையில் பௌத்த விழுமியங்களை ஏற்றுக்கொள்வது வரை, புத்த தம்மம், இந்தியாவும் ஆசியாவும் ஒன்றோடொன்று பங்களிப்பு செய்கின்றன.

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்பு:

தம்மத்தை வழிகாட்டும் ஒளிவிளக்காகக் கொண்டு, ஆசியாவின் கூட்டாண்மை, அனைவரையும் உள்ளடக்கிய ஆன்மீக வளர்ச்சிக்கு இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையின் வெளிப்பாடாகவும் இந்த உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இந்த உணர்வுடன், ஆசிய பௌத்த உச்சி மாநாடு பின்வரும் கருப்பொருள்களை உள்ளடக்கி நடைபெறும்.

1. பௌத்த கலை, கட்டிடக்கலை மற்றும் பாரம்பரியம்

2. புத்த சரிகாவும் புத்த தம்மத்தின் பரவலும்

3. புனித பௌத்த நினைவுச்சின்னங்களின் பங்கு மற்றும் சமூகத்தில் அதன் பொருத்தப்பாடு

4. அறிவியல் ஆராய்ச்சி மற்றும் நல்வாழ்வில் புத்த தம்மத்தின் முக்கியத்துவம்

5. 21-ம் நூற்றாண்டில் பௌத்த இலக்கியம் மற்றும் தத்துவத்தின் பங்கு

மேற்கண்ட தலைப்புகளில் விவாதங்களுடன் கூடுதலாக, ஆசியாவை இணைக்கும் தம்ம சேது (தம்மை பாலம்) என்ற கருப்பொருளில் ஒரு சிறப்பு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆசியா முழுவதிலும் உள்ள புத்த தம்மத்தின் பல்வேறு குரல்களை ஒன்றிணைக்கும் தனித்துவமான வாய்ப்பை இந்த உச்சிமாநாடு குறிக்கிறது.

உரையாடல், சமகால சவால்களை எதிர்கொள்வது மற்றும் பௌத்த பாரம்பரியத்தை ஊக்குவிப்பதன் மூலம், இந்த உச்சிமாநாடு நீடித்த, அமைதியான உலகத்திற்கு பங்களிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது மனிதகுலத்தின் நலனுக்கு முழுமையான உத்தரவாதத்தை அளிக்கிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
EPS Slams DMK:
EPS Slams DMK: "2026 வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும்" - எடப்பாடி பழனிசாமி
"திருவள்ளுவருக்கு வர்ணம் பூசுறாங்க" பாஜகவுக்கு எதிரான ஸ்கெட்ச்.. அடித்து ஆடும் தவெக விஜய்!
பாலக்காடு அருகே எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 4 பேர் உயிரிப்பு
பாலக்காடு அருகே எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 4 பேர் உயிரிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

IND vs NZ  Highlights | கோலியின் மோசமான பேட்டிங்வாஷ் அவுட் ஆன இந்திய அணி வரலாறு படைத்த நியூசிலாந்துDhanush Aishwarya | ரஜினி வீட்டில் நடந்த மீட்டிங்?இணையும் தனுஷ் ஐஸ்வர்யா குஷியில் சூப்பர் ஸ்டார்!TVK VCK Flag issue | அகற்றப்பட்ட தவெக கொடி   மறியலில் இறங்கிய மக்கள்   களத்துக்கு வந்த போலீசார்Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
EPS Slams DMK:
EPS Slams DMK: "2026 வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும்" - எடப்பாடி பழனிசாமி
"திருவள்ளுவருக்கு வர்ணம் பூசுறாங்க" பாஜகவுக்கு எதிரான ஸ்கெட்ச்.. அடித்து ஆடும் தவெக விஜய்!
பாலக்காடு அருகே எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 4 பேர் உயிரிப்பு
பாலக்காடு அருகே எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 4 பேர் உயிரிப்பு
TVK Resolution: 2026க்கு அச்சாரம் போடும் தவெகவின்  26 தீர்மானங்கள்: அக்ரசிவ் மோடில் திமுக - பாஜகவை தாக்கிய விஜய்.!
TVK Resolution: 2026க்கு அச்சாரம் போடும் தவெகவின் 26 தீர்மானங்கள்: அக்ரசிவ் மோடில் திமுக - பாஜகவை தாக்கிய விஜய்.!
"தமிழக மக்களை ஏமாற்றும் திமுக அரசு" இறங்கி அடித்த விஜய்.. 2026ஐ குறிவைக்கும் தவெக!
IND Vs NZ:  வரலாற்றில் மோசமான தோல்வி - நியூசிலாந்திடம் 3-0 என டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி
IND Vs NZ: வரலாற்றில் மோசமான தோல்வி - நியூசிலாந்திடம் 3-0 என டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி
WTC Points Table: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் - இந்தியாவிற்கு பேரிடி, ஃபைனல் வாய்ப்பு இருக்கா?
WTC Points Table: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் - இந்தியாவிற்கு பேரிடி, ஃபைனல் வாய்ப்பு இருக்கா?
Embed widget