Watch Video: ஒரு வீடியோ 1 மில்லியன் வார்த்தைக்கு சமம்... குழந்தைகளின் வீடியோவை பதிவிட்ட ஆனந்த் மஹிந்திரா !
ட்விட்டர் பக்கத்தில் ஆனந்த் மஹிந்திரா பதிவிட்டுள்ள வீடியோ மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது.
ட்விட்டர் தளத்தில் ஆனந்த் மஹிந்திரா அவ்வப்போது சில நல்ல வீடியோக்களை பகிர்ந்து தன்னுடைய கருத்தை பதிவு செய்வார். அந்த வீடியோக்கள் பலரையும் அதிகம் கவரும். அந்த வகையில் தற்போது அதே மாதிரியாக வீடியோ ஒன்றை அவர் மீண்டும் பகிர்ந்துள்ளார். இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அவர் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஒரு ட்விட்ட்ர் பதிவை செய்துள்ளார். அந்தப் பதிவில் இடம்பெற்றுள்ள வீடியோ தான் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது.
அதன்படி அந்தப் பதிவில், பல குழந்தைகள் பாட்டு பாடி மகிழ்ச்சியாக இருக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவில் மேலும் ஒரு சிறப்பு அம்சம் அமைந்துள்ளது. அதாவது இந்த வீடியோவில் இந்த குழந்தைகள் தங்களிடம் எந்தவித இசை கருவியும் இல்லாமல் இசையமைத்து மகிழ்ச்சியாக இருக்கின்றனர். அத்துடன் அவர்கள் தங்களுடைய கையில் சில பாட்டில்கள், பக்கெட்கள் ஆகியவற்றை வைத்து தாலம் போட்டு மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றனர்.
One video is worth a million words. The Happiness Factory requires no capital. Merry Christmas to you all.. pic.twitter.com/db16oitjDf
— anand mahindra (@anandmahindra) December 25, 2021
இந்த வீடியோவை பதிவு செய்த ஆனந்த் மஹிந்திரா, “இந்த ஒரு வீடியோ ஒரு மில்லியன் வார்த்தைகளுக்கு சமம். மகிழ்ச்சிக்கு எந்தவித தலைமையிடமும் தேவையில்லை. அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த வீடியோ பதிவை தற்போது வரை 66 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர்.
What a spectacular video!
— Manu Gulati (@ManuGulati11) December 25, 2021
Just can't take my eyes off it even for a second.
Beautiful...Just so very beautiful!#Happiness...Straight from the heart.💕#MerryChristmas everyone.😊
அத்துடன் பலரும் இந்த வீடியோ தொடர்பாக தங்களுடைய கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர். அதில் பலரும் இந்த வீடியோவை பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ மிகவும் அருமையாக உள்ளதாகவும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Their innocence and happiness brings smiling on our face ☺💓
— Rani D. I (@ImaculateRani) December 25, 2021
Lovely video
To enjoy life no instrument is required,only inner happiness and simple satisfaction is required. Regards 🙏
— Dr.Anjani Kumar (@anjanee09094684) December 25, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்