Amit Shah : உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்...இதுதான் காரணம்
உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மோசமான மூடுபனி
பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, வடக்கு ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடர்த்தியான முதல் மிக அடர்த்தியான மூடுபனி படர்ந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) இன்று காலை தெரிவித்துள்ளது.
மூடுபனி அடர்ந்து போர்த்தி இருப்பதால் பல நகரங்களில் கண்களுக்கு எதுவும் தெளிவாக தெரியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் நேற்று முன்தினம் 8 டிகிரியாக இருந்த வெப்ப நிலை, நேற்று 4.4 டிகிரியாக குறைந்தது. ஒரே நாளில் இவ்வளவு வெப்பநிலை குறைந்துள்ளதால் மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர்.
நள்ளிரவு முதல் விடிய விடிய இடைவிடாத பனிப்பொழிவு மற்றும் காற்றும் அதிகளவில் அடிப்பதால் குளிர் அதிகரித்துள்ளது. டெல்லியை தொடர்ந்து ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பகுதிகளிலும் பனிப்பொழிவு உள்ளது.
அதன்படி, தர்மசலாவில் 5.2 டிகரியும், நைனிடாலில் 6 டிகிரியும், டேராடூனில் 4.5 டிகிரியும் பதிவாகி உள்ளது. கங்கை சமவெளிகள் மற்றும் அதை ஒட்டிய மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் அடர்த்தியான மூடுபனி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக தரைவழி மற்றும் ஆகாயவழி போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
இதை அடுத்து, டெல்லிக்கு சுமார் 12 ரயில்கள் நான்கு மணி நேரம் தாமதாக வந்துள்ளன. இதைப்போல டெல்லியில் இருந்து புறப்பட்ட ரயில்களும் தாமதாக கிளம்பியுள்ளன. இந்த குளிரின் நிலை அடுத்த மூன்று நாட்களில் குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
12 trains running late and 2 trains rescheduled in the Northern Railway region due to fog
— ANI (@ANI) January 5, 2023
(Pic shared by CPRO Northern Railway) pic.twitter.com/B1oCDIwwkx
அமித்ஷா சென்ற விமானம்?
திரிபுரா மாநிலத்தில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்துறை அமைச்சர் அமித்ஷா தனி விமானத்தில் நேற்று மாலை சென்றார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் விமானம் புதன்கிழமை இரவு கவுகாத்தி லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மோசமான வானிலை காரணமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற விமானம் அசாம் மாநிலம் கவுகாந்தி விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது. நேற்று இரவு 10.45 மணிக்கு கவுகாந்திக்கு வந்த அமித்ஷாவை, முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா வரவேற்றார்.
மேலும் படிக்க