Mangoes On EMI : சூடுபிடிக்கும் மாம்பழ சீசன்...இனி இ.எம்.ஐ-யில் வாங்கலாம்...எங்கு தெரியுமா...!?
இந்தியாவில் டிவி, ஃபிரிட்ஜ், போன், ஏசி ஆகியவற்றை மாத தவணையில் வாங்குவதை தொடர்நது தற்போது, மாம்பழத்திற்கு இ.எம்.ஐ.யில் வாங்கலாம் என்ற அறிவிப்பு மக்களை வியக்க வைத்துள்ளது.
Mangoes On EMI : இந்தியாவில் டிவி, ஃபிரிட்ஜ், போன், ஏசி ஆகியவற்றை மாத தவணையில் வாங்குவதை தொடர்நது தற்போது, மாம்பழத்திற்கு இ.எம்.ஐ.யில் வாங்கலாம் என்ற அறிவிப்பு மக்களை வியக்க வைத்துள்ளது.
மாம்பழம்
வெயில் காலம் வந்துவிட்டாலே நம் அனைவரும் நினைவிற்கு வருவது மாம்பழ சீசன். மாம்பழம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. ஆனால் நாட்டில் நிலவும் பணவீக்கத்தால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடும் சிரமத்தில் உள்ளனர். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது.
பொதுமக்கள் சத்தான உணவுகளை கூட இதனால் வாங்குவதில்லை. இதுபோன்ற மக்கள் சிரமப்படுவதை தவிர்க்க, புனே பழ வியாபாரிகள் புதுவித ஐடியாவை வெளியிட்டுள்ளனர். அதாவது, மாம்பழ சீசனில் அனைத்து தர மக்களும் மாம்பழத்தை வாங்க ஏதுவாக, மாதாந்திர தவணை முறையில் மாம்பழம் வாங்கலாம் என்பதை அறிவித்துள்ளனர். புனேவின் ஆனந்த் நகரைச் சேர்ந்த பழ வியாபாரி இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்.
இ.எம்.ஐ.யில் மாம்பழம்
இதுகுறித்து மாம்பழ வியாபாரி சனாஸ் கூறுகையில், ”டிவி, ஃபிரிட்ஜ் போன்றவற்றை மாதாந்திர தவணையில் மக்களுக்கு வழங்கும்போது ஏன் மாம்பழத்தையும் தவணை முறையில் மக்களுக்கு வழங்கக்கூடாது என்று நினைத்தேன். அனைவரும் மாம்பழம் வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் எங்களது குடும்பம் முதல் முறையாக மாதாந்திர தவணை முறையில் மாம்பழம் விற்பனை செய்ய முடிவு செய்திருக்கிறோம்.
மாம்பழ சீசன் தற்போது தான் தொடங்கி இருக்கிறது. இதனால் அதனின் விலை அதிகமாக இருக்கும். இதனால் மக்கள் வாங்க தவிர்க்கின்றனர். கொங்கன் பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் அல்போன்சா மாம்பழம் ஒரு டஜன் ரூ.800 முதல் 1,100 வரை விற்பனை செய்யப்படுகிறது. மற்ற மாம்பழங்களை ஒப்பிடுகையில் அல்போன்சா மாம்பழம் விலை உயர்வுதான். இதனை மக்கள் வாங்க ஏதுவாக இதுபோன்ற இஎம்ஐ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.
Maharashtra | To make Alphonso (Hapus) affordable, a Pune-based mango seller is offering mangoes on EMI
— ANI (@ANI) April 9, 2023
After Covid, it was seen that people were losing interest in Alphonso due to its high price, so we started this scheme of giving mangoes on EMI to bring back the customers.… pic.twitter.com/TXgskeBSUI
மேலும், கொரோனா தொற்றால் கடந்த 2 முதல் 3 ஆண்டுகளாக மாம்பழ விற்பனை முடங்கி இருந்தது. தற்போது அதில் லாபம் ஈட்டுவதற்காக இது போன்ற திட்டத்தை அறிமுக செய்துள்ளோம். பெரிய கடைகளில் எப்படி தவணை முறையில் டிவி, செல்போன் போன்றவைகளை வாங்குகிறோமோ, அதே போன்றுதான் மாம்பழங்களும் இ.எம்.ஐயில் விற்பனை செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி மாம்பழம் வாங்கலாம். அதனை 3,6,12 தவணைகளில் செலுத்திக் கொள்ளலாம். இந்த சலுகை பெற குறைந்தபட்சம் ரூ.5,000க்கு மாம்பழம் வாங்க வேண்டும் என்றார்