மீண்டும் கட்டணம் உயர்த்திய ஏர்டெல்: எல்லா பிளானிலும் 20-25% ஏற்றம்; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு சேவை வழங்குனரான ஏர்டெல், அதன் கட்டண விகிதங்களில் மீண்டும் மாற்றம் செய்துள்ளது. இது குறிப்பாக ப்ரீபெய்டு கட்டணங்களை 25% அதிகரிப்பினை செய்துள்ளது.
தொலைத் தொடர்பு துறையில் பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில், நிறுவனங்கள் தொடர்ந்து சமீப காலமாக கட்டணங்களை அதிகரித்து வருகின்றன. தற்போது நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு சேவை வழங்குனரான ஏர்டெல், அதன் கட்டண விகிதங்களில் மீண்டும் மாற்றம் செய்துள்ளது. இது குறிப்பாக ப்ரீபெய்டு கட்டணங்களை 25% அதிகரிப்பினை செய்துள்ளது. இது ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் இந்த அதிரடி கட்டண அதிகரிப்பானது நவம்பர் 26 முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஏர்டெல் நிறுவனத்தின் அர்பு விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 200 - 300 ரூபாயாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த ஜூலை மாதத்தில் ஏர்டெல் அதன் போஸ்ட் பெய்டு திட்டங்களுக்கான கட்டண விகிதத்தினை அதிகரித்தது. இந்த நிலையில் தற்போது ப்ரீபெய்டுக்கும் கட்டண விகிதத்தினை அதிகரித்துள்ளது. இதனால் ஏர்டெல் வாடிக்கையாளார்கள் இன்னும் கூடுதலாக செலவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த கட்டண அதிகரிப்பினால் இனி, 79 ரூபாய் திட்டமானது 99 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 28 நாட்களில் வேலிடிட்டி கொண்ட ஒரு திட்டமாகும். இதில் 200 எம்பி டேட்டா, லிமிடெட் கால் சேவையும் இதில் உண்டு. இதே 149 ரூபாய் மதிப்பிலான திட்டம், இனி 179 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் அன்லிமிடெட் கால் சேவை, தினசரி 100 இலவச எஸ் எம் எஸ், 2ஜிபி டேட்டா வழங்கப்படும். இதே 219 ரூபாய் திட்டத்தினை, 265 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது 28 நாட்கள் வேலிடிட்டியாகும். இதிலும் அன்லிமிடெட் கால் சேவை, தினசரி 100 இலவச எஸ் எம் எஸ், தினசரி 1 ஜிபி டேட்டா கிடைக்கும்.
இதே 249 ரூபாய் திட்டத்தினை, 299 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது 28 நாட்கள் வேலிடிட்டியாகும். இதிலும் அன்லிமிடெட் கால் சேவை, தினசரி 100 இலவச எஸ் எம் எஸ், தினசரி 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும். 298 ரூபாய் திட்டத்தினை, 359 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது 28 நாட்கள் வேலிடிட்டியாகும். இதிலும் அன்லிமிடெட் கால் சேவை, தினசரி 100 இலவச எஸ் எம் எஸ், தினசரி 2 ஜிபி டேட்டா கிடைக்கும்.
399 ரூபாய் திட்டத்தினை, 479 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது 56 நாட்கள் வேலிடிட்டியாகும். இதிலும் அன்லிமிடெட் கால் சேவை, தினசரி 100 இலவச எஸ் எம் எஸ், தினசரி 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும். 449 ரூபாய் திட்டத்தினை, 549 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவும் 56 நாட்கள் வேலிடிட்டியாகும். இதிலும் அன்லிமிடெட் கால் சேவை, தினசரி 100 இலவச எஸ் எம் எஸ், தினசரி 2 ஜிபி டேட்டா கிடைக்கும்.
379 ரூபாய் திட்டத்தினை, 455 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவும் 84 நாட்கள் வேலிடிட்டியாகும். இதிலும் அன்லிமிடெட் கால் சேவை, தினசரி 100 இலவச எஸ் எம் எஸ், 6 ஜிபி டேட்டா கிடைக்கும்.
598 ரூபாய் திட்டத்தினை, 719 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவும் 84 நாட்கள் வேலிடிட்டியாகும். இதிலும் அன்லிமிடெட் கால் சேவை, தினசரி 100 இலவச எஸ் எம் எஸ், தினசரி 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும். 698 ரூபாய் திட்டத்தினை, 839 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவும் 84 நாட்கள் வேலிடிட்டியாகும். இதிலும் அன்லிமிடெட் கால் சேவை, தினசரி 100 இலவச எஸ் எம் எஸ், தினசரி 2 ஜிபி டேட்டா கிடைக்கும்.
1,498 ரூபாய் திட்டத்தினை, 1,799 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது 365 நாட்கள் வேலிடிட்டியாகும். இதிலும் அன்லிமிடெட் கால் சேவை, தினசரி 100 இலவச எஸ் எம் எஸ், இதில் 24 ஜிபி டேட்டா கிடைக்கும்.
2,498 ரூபாய் திட்டத்தினை, 2,999 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது 365 நாட்கள் வேலிடிட்டியாகும். இதிலும் அன்லிமிடெட் கால் சேவை, தினசரி 100 இலவச எஸ் எம் எஸ், இதில் தினசரி 2 ஜிபி டேட்டா கிடைக்கும்.
48 ரூபாய் திட்டத்தினை, 58 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில் 3 ஜிபி டேட்டா கிடைக்கும். 98 ரூபாய் திட்டத்தினை, 118 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில் 12 ஜிபி டேட்டா கிடைக்கும். இதுவே 251 ரூபாய் மதிப்பிலான திட்டத்தினை, 301 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில் 50 ஜிபி டேட்டா கிடைக்கும்.
கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்த நிறுவனம் 300% வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது. இது 1,134 கோடி ரூபாயாக நிகரலாபம் அதிகரித்துள்ளது. இதே இது கடந்த ஆண்டில் 763.20 கோடி ரூபாய் நஷ்டத்தினை எதிர்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதே இதன் செயல்பாட்டு வருவாய் 5.48% அதிகரித்து, 28,326.40 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஏர்டெல்-லின் பங்கு விலையானது தற்போது 4.15% அதிகரித்து அல்லது 29.60 ரூபாய் அதிகரித்து, 744.20 ரூபாயாக என்.எஸ்.இ-யில் வர்த்தகமாகி வருகின்றது. இதே பி.எஸ்.இ-ல் 4.31% அல்லது 30.80 ரூபாய் அதிகரித்து 745 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இந்த பங்கின் 52 வார உச்ச விலையானது 755.95 ரூபாயாகும். இதே 52 வார குறைந்தபட்ச விலையானது 450.20 ரூபாயகும். இன்றைய உச்ச விலையும் 755.95 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 736.30 ரூபாயாக உள்ளது.