Indian Air Force Day 2022: இந்திய விமானப்படை தின விழா; புதிய சீருடை… விமான அணிவகுப்பு… களைகட்டும் டெல்லி!
இவ்விழாவில் விமானப்படை வீரர்களுக்கான புதிய போர் சீருடையை விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சவுதாரி வெளியிட்டார். ஏற்கனவே போர் சீருடை இருந்தாலும் அது டிசைன் ஏதுமின்றி ப்ளெயினாக உள்ளது.
2022 ஆம் ஆண்டிற்கான இந்திய விமானப்படை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. ஏனெனில் இது 1932 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் ராயல் விமானப்படையின் துணைப் படையாக இந்திய விமானப்படை உயர்த்தப்பட்ட தேதி அக்டோபர் 8 ஆகும். இது சிறியதாகத் தொடங்கினாலும், காலப்போக்கில் வலிமையான ஒன்றாக மாற்றிக்காட்டினர் இந்திய விமானப் படை வீரர்கள். இந்த நாள் இந்திய விமானப்படையின் வலிமை மற்றும் காலப்போக்கில் பணியாளர்கள் செய்த தியாகங்களை பாராட்டுவதற்காக கொண்டாடப்படுவதாகும். இந்திய விமானப்படை உலகின் மிகப்பெரிய விமானப்படைகளில் தரவரிசையில் முக்கியமான இடத்தில் உள்ளது. இந்த இடத்தை பிடிக்க உதவிய விமானப்படை வீரர்கள் மற்றும் சாகச செயல்கள் போற்றப்படுகின்றன. இந்த நாள், நாட்டிற்கு உதவிய விமானப்படையின் மைல்கல் பணிகளையும், இந்தத் துறையில் இந்தியா வெளிப்படுத்திய சிறப்பையும் அங்கீகரிக்கிறது.
முதல் முறை அணிவகுப்பு
இந்த நாள் முழு தேசத்தையும் ஒன்றிணைத்து, விமானப்படையின் வரலாற்றையும் அதன் பயணத்தையும் நினைவூட்டுகிறது. இந்த நாளில் பல விதமான நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இந்திய விமானப்படை தனது விமானப்படை தின விமான அணிவகுப்பை நடத்தவும், தேசிய தலைநகர் டெல்லிக்கு வெளியே இதனை செய்யவும் முடிவு செய்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
விமான அணிவகுப்பு
விமானப்படை தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ரஃபேல், பிரசாந்த், சுகோய் சு-30, ஜாகுவார், சினூக், அப்பாச்சி மற்றும் எம்ஐ-17 உள்ளிட்ட பல்வேறு வகையான விமானங்கள் அணிவகுப்பு நடத்த உள்ளன. இதில் சுமார் 80 விமானங்கள் வரை பறந்து சாகசம் செய்ய போகின்றன. இதற்கிடையில், ஆகாஷ்கங்கா பராட்ரூப்பர் குழுவின் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, சாரங் விமானக் காட்சி மற்றும் சூர்யா கிரண் ஏரோபாட்டிக்ஸ் அணிகளும் நிகழ்வில் நிகழ்ச்சி நடத்தின.
புதிய சீருடை
டெல்லி நகராட்சி நிருவாகம் விமான கண்காட்சிக்கு மக்களை அழைத்துச் செல்வதற்காக ஷட்டில் சேவைகளை ஏற்பாடு செய்தது. சண்டிகர் டூரிசம் ஆப் மூலம் ஆன்லைன் கட்டணமாக ₹20 செலுத்தி படகுச் சேவைகளைப் பெறலாம். விமான அணிவகுப்பு கண்காட்சிக்கு முன்னதாக சனிக்கிழமை காலை விமானப்படை நிலையத்தில் சடங்கு அணிவகுப்பு நடைபெற்றது. விமானப்படை தளபதி வி.ஆர்.சவுதாரி அணிவகுப்பை பார்வையிட்டார். இவ்விழாவில் விமானப்படை வீரர்களுக்கான புதிய போர் சீருடையை விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சவுதாரி வெளியிட்டார். ஏற்கனவே போர் சீருடை இருந்தாலும் அது டிசைன் ஏதுமின்றி ப்ளெயினாக உள்ளது. இம்முறை ராணுவ சீருடை போல டிஜிட்டல் கேமோஃப்லேஜ் எனப்படும் டிசைனிற்கு இந்த சீருடை மாற்றப்பட்டுள்ளது. புதிதாக உள்நாட்டிலேயே கட்டப்பட்ட பிரசாந்த் எனப்பெயரிடப்பட்டுள்ள இலகுரக போர் ஹெலிகாப்டர்கள் (எல்சிஎச்) மூன்று விமான அணிவகுப்பில் கலந்துகொண்டன. மதியம் சுக்னா ஏரியில் பிரம்மாண்டமான விமான அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தலைமை வகிக்கிறார். ஹெலிகாப்டர்களில், ஹெலிகாப்டர் துருவ், சினூக், அப்பாச்சி மற்றும் எம்ஐ-17 ஆகியவை வான்வழி அணிவகுப்பில் பங்கேற்கும்.