‛நாங்க எதுக்கு நடுராத்திரி சுடுகாட்டுக்கு போகணும்..?’ அப்படி தான் இருக்கு பிக்பாஸ் ப்ரொமோ!
Bigg Boss 6 Tamil Promo: போட்டியாளர்களை நீங்க தேர்வு பண்ணிட்டு, எங்களை அவர்களோடு எந்த ரகம் என ஒப்பிடுவதெல்லாம், ‛நாங்க எதுக்குய்யா நடுராத்திரி சுடுகாடு போகணும்...’ என்பதைப் போல தான் உள்ளது.
5 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்த பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்த முறை 6வது சீசனை கோலாகலமாக தொடங்க உள்ளது. இதோ அதோ என கவுன்டவுண் எல்லாம் போட்டு முடிவுக்கு வரவிருக்கும் பிக்பாஸ், நாளை மாலை 6 மணியிலிருந்து தன் ஒளிபரப்பை தொடங்குகிறது.
வழக்கம் போல உலகநாயகன் கமலஹாசன் இந்த நிகழ்ச்சியை தொடங்கவிருக்கிறார். போட்டியாளர்கள் பட்டியலும் இறுதி செய்யப்பட்ட நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாமல், சஸ்பென்ஸ் தரலாம் என காத்திருக்கிறது விஜய்டிவி. ஆனால், வழக்கம் போல, இந்த ஆண்டும் முன்கூட்டியே போட்டியாளர்கள் பற்றிய தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.
எப்போதும் போல, கசியும் இந்த பட்டியலில் 90 சதவீதம் உண்மையாக தான் இருக்கும் என தெரிகிறது. அந்த வகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள், ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். நாளை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பை தொடங்கும் நிகழ்ச்சியில், போட்டியாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வுகள் நடைபெறும். ஒவ்வொருவரையாக அழைத்து, அவர்களுக்கு ஒரு முன்னுரை வழங்கி, நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யும் பணியை வழக்கம் போல கமல் மேற்கொள்வார்.
View this post on Instagram
கமலிடம் வாழ்த்துப் பெற்ற பின், தங்களின் வருகைக்கான நோக்கம் குறித்து விளக்கும் போட்டியாளர்கள், அதன் பின், பிக்பாஸ் வீட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். நாளை நாள் முழுதும், போட்டியாளர்களை அறிமுகம் செய்வதில் தான் போகும். முதல் ஒரு வாரம், போட்டியாளர்கள் ஒருவருக்கு ஒருவர், தங்களை அறிமுகம் செய்து கொள்ள நேரம் எடுத்துக்கொள்வார்கள்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை பிரபலப்படுத்த அதற்கான ப்ரொமோஷன் பணிகள் நடந்து வருகிறது . அதன் படி, சற்று முன் பிக்பாஸ் குறித்த ப்ரொமோ ஒன்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் , ‛இதில் நீங்க எந்த ரகம்?’ என்று குறிப்பிட்டுள்ளனர். ‛என்னது... நாங்க எந்த ரகமா...’ என்று தான், அந்த கேப்ஷனை பார்த்ததும் கேட்கத் தோன்றுகிறது. சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பிரபலப்படுத்த பலே ப்ரொமோக்கள் தொடங்கிவிட்டன.
போட்டியாளர்களை நீங்க தேர்வு பண்ணிட்டு, எங்களை அவர்களோடு எந்த ரகம் என ஒப்பிடுவதெல்லாம், ‛நாங்க எதுக்குய்யா நடுராத்திரி சுடுகாடு போகணும்...’ என்பதைப் போல தான் உள்ளது.