![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Prakash Raj: சந்திரயான் 3 விண்கலத்தை கிண்டல் செய்தாரா பிரகாஷ்ராஜ்..? வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!
சந்திராயன் 3 விண்கலத்தை கிண்டல் செய்து டிவிட்டரில் கார்டூன் பதிவிட்டதாக நடிகர் பிரகாஷ் ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
![Prakash Raj: சந்திரயான் 3 விண்கலத்தை கிண்டல் செய்தாரா பிரகாஷ்ராஜ்..? வழக்குப்பதிவு செய்த போலீஸ்..! Actor Prakash Raj Booked By Karnataka Police For Mocking Chandrayaan-3 Mission Prakash Raj: சந்திரயான் 3 விண்கலத்தை கிண்டல் செய்தாரா பிரகாஷ்ராஜ்..? வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/22/c705aff5cba97c5f3abe9cf92d5315bf1692711809193571_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சந்திரயான் 3 விண்கலத்தை கிண்டல் செய்து நடிகர் பிரகாஷ் ராஜ் டிவிட்டரில் கார்ட்டூன் பதிவிட்டதாகவும், அவரை கைது செய்ய வேண்டும் என்றும் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. நடிகர் பிரகாஷ் ராஜ், தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில், முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அவர் சினிமாவில் மட்டுமின்றி, அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
பாஜக-வுக்கு எதிராகவும் பேசி, சமூக வலைதளங்களில் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வரும் பிரகாஷ் ராஜ், டிவிட்டரில் கார்ட்டூன் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் ஒருவர் டீ ஆற்றுவது போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, நிலவில் இருந்து வரும் முதல் புகைப்படம் என்று பதிவிட்டுள்ளார்.
BREAKING NEWS:-
— Prakash Raj (@prakashraaj) August 20, 2023
First picture coming from the Moon by #VikramLander Wowww #justasking pic.twitter.com/RNy7zmSp3G
சர்ச்சை கார்ட்டூன்:
இதை பார்த்த சிலர் இந்த கார்ட்டூன் சந்திராயன் 3 விண்கலத்தை ட்ரோல் செய்யும் விதமாக உள்ளதாக இணையத்தில் கமெண்டுகளை பதிவிட்டு வந்தனர். இந்தியர்கள் பெருமைப்படும் ஒரு விஷயத்தை, சமூகத்தில் சிறந்த அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் இவ்வாறு கிண்டல் செய்வது ஏற்புடையது அல்ல என்று, அவரை கடுமையாக கண்டித்து, பலர் பதிவுகள் வெளியிட்ட வண்ணம் இருந்தனர். இது குறித்து அவர் விளக்கம் அளிக்கும் விதமாக டிவிட்டரில் பதிவு ஒன்றை போட்டிருந்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)