Manish Sisodia : நாளை கைதாகிறாரா மணீஷ் சிசோடியா? மதுபான கொள்கை முறேகேடு வழக்கில் சி.பி.ஐ. சம்மன்!
Manish Sisodia :மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிசோடியா நாளை காலை 11 மணிக்கு ஆஜராகும்படி சி.பி.ஐ. சம்மன் அனுப்புயிள்ளது குறிப்பிடத்தக்கது.
புது டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை (Manish Sisodia) முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. நாளை அவர் கைது செய்யலாம என்று ஆம் ஆத்மி கட்சியின் சார்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிசோடியா நாளை காலை 11 மணிக்கு ஆஜராகும்படி சி.பி.ஐ. சம்மன் அனுப்புயிள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக சிசோடியா பதிவிட்டுள்ள டிவீட்டில்” எனது வீட்டில் 14 மணி நேரம் சி.பி.ஐ. சோதனை நடத்தினர். என் வங்கியின் லாக்கரையும் சோதனையிட்டனர். என் கிராமம், வீடு ஆகியவற்றில் இருந்து அவர்கள் எதையும் கண்டுப்பிடிக்கவில்லை. ஆனால், நாளை காலை 11 மணிக்கு என்னை நேரில் ஆஜராகும்படி கூறியுள்ளனர். நான் சென்று வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பேன். வாய்மையே வெல்லும்’ என்று தெரிவித்துள்ளார்.
मेरे घर पर 14 घंटे CBI रेड कराई, कुछ नहीं निकला. मेरा बैंक लॉकर तलाशा, उसमें कुछ नहीं निकला. मेरे गाँव में इन्हें कुछ नहीं मिला.
— Manish Sisodia (@msisodia) October 16, 2022
अब इन्होंने कल 11 बजे मुझे CBI मुख्यालय बुलाया है. मैं जाऊँगा और पूरा सहयोग करूँगा.
सत्यमेव जयते.
சி.பி.ஐ. சம்மன் தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளரான சவுரவ் பரத்வாஜ் கூறுகையில், குஜராத் மாநில தேர்தல் சமயத்தில் எங்கள் மீதான பயத்தில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மதுபான ஊழலில் ரூ.10,000 கோடிக்கும் மேல் சிசோடியா கொள்ளையடித்துள்ளதாகவும், இது தொடர்பாக, சி.பி.ஐ. மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு குறைந்தப்பட்சம் 500 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முறைகேடு வழக்கு:
ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு பொறுப்பு வந்தபிறகு, மதுபான விற்பனையில் மாற்றம் கொண்டு வந்தது. கடந்த ஆண்டு நவம்பரில் டெல்லி அரசு புதிய மதுபானக் கொள்கையை அறிமுகம் செய்தது. அதன்படி, டெல்லி பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 800-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு எழுந்தது.
இதனால், கடந்த ஜூலையில் புதிய மதுபானக் கொள்கையை டெல்லி அரசு திரும்பப் பெற்றது. இதனிடையே, மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக டெல்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா குற்றம்சாட்டினார். துணைநிலை ஆளுநரின் குற்றச்சாட்டை தொடர்ந்து, இதுதொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ), கடந்த மாதம் வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில், நாளை மணீஷ் சிசோடியா கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வாசிக்க..
ராணுவ அதிகாரிகளுடன் பயிற்சி.. பூரிஜெகன்நாத்துடன் மீண்டும் இணையும் விஜய் தேவரகொண்டா.. வைரலாகும் புகைப்படம்!
Chris Gayle: சூப்பர் 10 லீக்கின் முதல் பதிப்பு... தொடக்கி வைத்த சுதீப், கிரிகெட்டர் கிறிஸ் கெயில்!