மேலும் அறிய

Chris Gayle: சூப்பர் 10 லீக்கின் முதல் பதிப்பு... தொடக்கி வைத்த சுதீப், கிரிகெட்டர் கிறிஸ் கெயில்!

திரை நட்சத்திரங்கள், சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்கள், கார்ப்பரேட் பணியாளர்கள் இணைந்து விளையாடும்,  சூப்பர் 10 லீக்கின் முதல் பதிப்பை கிச்சா சுதீப் மற்றும் கிரிகெட்டர் கிறிஸ் கெயில் தொடங்கி வைத்தனர்.

இந்திய முன்னணி நடிகர் கிச்சா சுதீப் மற்றும் வெஸ்ட் இந்தியன் கிரிக்கெட் லெஜண்ட் கிறிஸ் கெய்ல் இணைந்து, 'சூப்பர் 10' என்ற  கிரிக்கெட் போட்டியின் முதல் பதிப்பை அறிவித்துள்ளனர். 

இந்த போட்டியில்  இந்திய திரை நட்சத்திரங்கள், ஓய்வு பெற்ற சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கார்ப்பரேட் பணியாளர்கள் இணைந்து  10 ஓவர் கொண்ட போட்டிகளில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இப்போட்டிகள் டிசம்பர் 2022 இல் பெங்களூருவில் 2 நாட்களுக்கு நடைபெறும்.



Chris Gayle: சூப்பர் 10 லீக்கின் முதல் பதிப்பு... தொடக்கி வைத்த சுதீப், கிரிகெட்டர் கிறிஸ் கெயில்!

இந்த லீக் போட்டிகளில் தமிழ், பாலிவுட், கன்னடம் மற்றும் தெலுங்கு துறையைச் சேர்ந்த நடிகர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இணைந்து விளையாடவுள்ளனர்.

இப்போட்டி குறித்து மேற்கிந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் கூறுகையில்.., “உலகம் முழுவதும் உள்ள எனக்கு பிடித்த கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் இந்திய திரைத்துறை பிரபலங்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுவது மிகப்பெரும் மகிழ்ச்சி. இந்த போட்டி ‘டி10’ வடிவில் அமைக்கப்பட்டிருப்பதால் மிகப்பெரிய பொழுதுபோக்கை அளிக்குமென்பது உறுதி, டிசம்பர் எப்போது வருமென ஆவலாக உள்ளேன்.” என்றார்

மேலும் இந்த போட்டிகள் குறித்து கிச்சா சுதீப் கூறுகையில்…,
 “சூப்பர் டி10 லீக்  கிரிக்கெட் என்பது, திரைத்துறை மற்றும் கார்ப்பரேட் துறையில் உள்ள நண்பர்களுடனும், கிரிக்கெட் வீரர்களுடனும் இணைந்து விளையாடுவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். இந்த விளையாட்டுகள் எங்களுள் உள்ள மற்றுமொரு பக்கத்தை எங்கள் ரசிகர்களுக்கும் வெளிப்படுத்தும், இது மிகப்பெரிய பொழுதுபோக்கை ரசிகர்களுக்கு வழங்கும்” என்றார். 


Chris Gayle: சூப்பர் 10 லீக்கின் முதல் பதிப்பு... தொடக்கி வைத்த சுதீப், கிரிகெட்டர் கிறிஸ் கெயில்!

இப்போட்டிகள் குறித்து, சூப்பர் 10 கிரிக்கெட்டின் நிறுவனர் மற்றும் இயக்குனரான தினேஷ் குமார் கூறுகையில்.., “நாங்கள் இந்த ‘கிரிக்கெட்டைன்மென்ட்’ பொழுதுபோக்கு கான்செப்ட்டில் ஒரு வருடத்திற்கும் மேலாக பணியாற்றி வருகிறோம். இது முதல் பதிப்பாகும், மேலும் பார்வையாளர்களுக்கு இந்த போட்டிகள் மூலம் மிகச்சிறந்த பொழுதுபோக்கை  வழங்க உறுதிபூண்டுள்ளோம். கிரிக்கெட் மீது உலகளாவிய அளவில் ஆர்வத்தை வலுப்படுத்துவதே இப்போட்டியின் நோக்கமாகும். பொழுதுபோக்கு மற்றும் கிரிக்கெட் துறையில் மிகப்பெரிய ஆளுமைகளை இந்த போட்டிகளில்  கொண்டு வரவுள்ளோம். பங்கேற்கவுள்ள பல பிரபலங்களை அறிவிப்பது மகிழ்ச்சி. உலகளவில் அனைத்து கிரிக்கெட் பிரியர்களுக்கும் ஒரு அற்புதமான தொடர் விளையாட்டு போட்டிகளை  வழங்க ஆவலாக உள்ளோம்” என்று கூறியுள்ளார். 

சூப்பர் 10 கிரிக்கெட்டின் இயக்குநர் சஞ்சய் விஜய் ராகவன் கூறுகையில்.., “கிரிக்கெட் வீரர்களும் பிரபலங்களும் ஒன்றிணைவதைக் காணும் சூப்பர் டென் லீக்கை ஏற்பாடு செய்வதில் நாங்கள் மிக மகிழ்ச்சி அடைகிறோம். போட்டிகள் எப்போது தொடங்குமென மிக ஆவலாக உள்ளது. இந்தப் போட்டியில் சுதீப் கிச்சா மற்றும் கிறிஸ் கெய்ல் போன்ற ஆளுமைகள் இருப்பது மிகப்பெரும் மகிழ்ச்சி. பெரும் ஆளுமைகள் பங்கேற்பது  ரசிகர்களுக்கு பெரிய உற்சாகத்தை அளிக்கும். இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் பிரியர்கள் எதிர்பார்க்கும் ஒரு மிகச்சிறந்த விளையாட்டு போட்டியாக  இதை உருவாக்க உத்தேசித்துள்ளோம்.” என்றார். 

முதன்மை ஸ்பான்சரான காஷாவின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான குமார் கௌரவ் கூறுகையில்,  “இப்போட்டிக்கு நிதியுதவி வழங்குவது மிகுந்த மகிழ்ச்சி. இது ஒரு அற்புதமான பொழுதுபோக்கு போட்டி. இது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் தனித்துவமான கிரிக்கெட் விளையாட்டாக இருக்கும். இந்த விளையாட்டு போட்டியில் எங்கள் காஷா என்ற பிராண்டும் இணைந்திருப்பது மகிழ்ச்சி.” என்றார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6836
Active
14772
Recovered
109
Deaths
Last Updated: Tue 17 June, 2025 at 10:44 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Trump Threatens Khamenei: “அவர ஈசியா போட்டுத்தள்ள முடியும், ஆனா எனக்கு வேண்டியது அதுக்கும் மேல“; ஈரான் குறித்து ட்ரம்ப் பதிவு
“அவர ஈசியா போட்டுத்தள்ள முடியும், ஆனா எனக்கு வேண்டியது அதுக்கும் மேல“; ஈரான் குறித்து ட்ரம்ப் பதிவு
அடிமேல் அடி வாங்கும் சட்டம் ஒழுங்கு.. என்ன செய்யப்போகிறார் மு.க.ஸ்டாலின்? தேர்தல் நேரத்தில் இப்படியா?
அடிமேல் அடி வாங்கும் சட்டம் ஒழுங்கு.. என்ன செய்யப்போகிறார் மு.க.ஸ்டாலின்? தேர்தல் நேரத்தில் இப்படியா?
ஸ்டாலின் இந்த முறை காவு கொடுத்திருப்பது அமைச்சர் நேருவை தான்  - ஆர்.பி.உதயகுமார் காட்டமான பதிவு !
ஸ்டாலின் இந்த முறை காவு கொடுத்திருப்பது அமைச்சர் நேருவை தான் - ஆர்.பி.உதயகுமார் காட்டமான பதிவு !
ஸ்டாலின், உதயநிதி வரிசையில்..  நிர்வாக பொறுப்பில் இன்பநிதி !  அரசியலுக்கு அச்சாரம்?
ஸ்டாலின், உதயநிதி வரிசையில்.. நிர்வாக பொறுப்பில் இன்பநிதி ! அரசியலுக்கு அச்சாரம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin : ’’அவர் கேட்டால் கொடுப்போம்’’ உதயநிதிக்கு PROMOTION போட்டுடைத்த ஆர்.எஸ்.பாரதிபொய் சொல்லி 2 -வது திருமணம் ரூ.18.5 லட்சம் அபேஸ் ஆட்டையை போட்ட சீரியல் நடிகைIsrael Attack | நேரலையில் செய்தி வாசித்த பெண்.. திடீரென தாக்கிய இஸ்ரேல்! பதற வைக்கும் வீடியோThirupattur | ”வெளிய வா உன்ன...” கத்தியை காட்டி மிரட்டல்!அடாவடியில் ஈடுபட்ட இளைஞர்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Khamenei: “அவர ஈசியா போட்டுத்தள்ள முடியும், ஆனா எனக்கு வேண்டியது அதுக்கும் மேல“; ஈரான் குறித்து ட்ரம்ப் பதிவு
“அவர ஈசியா போட்டுத்தள்ள முடியும், ஆனா எனக்கு வேண்டியது அதுக்கும் மேல“; ஈரான் குறித்து ட்ரம்ப் பதிவு
அடிமேல் அடி வாங்கும் சட்டம் ஒழுங்கு.. என்ன செய்யப்போகிறார் மு.க.ஸ்டாலின்? தேர்தல் நேரத்தில் இப்படியா?
அடிமேல் அடி வாங்கும் சட்டம் ஒழுங்கு.. என்ன செய்யப்போகிறார் மு.க.ஸ்டாலின்? தேர்தல் நேரத்தில் இப்படியா?
ஸ்டாலின் இந்த முறை காவு கொடுத்திருப்பது அமைச்சர் நேருவை தான்  - ஆர்.பி.உதயகுமார் காட்டமான பதிவு !
ஸ்டாலின் இந்த முறை காவு கொடுத்திருப்பது அமைச்சர் நேருவை தான் - ஆர்.பி.உதயகுமார் காட்டமான பதிவு !
ஸ்டாலின், உதயநிதி வரிசையில்..  நிர்வாக பொறுப்பில் இன்பநிதி !  அரசியலுக்கு அச்சாரம்?
ஸ்டாலின், உதயநிதி வரிசையில்.. நிர்வாக பொறுப்பில் இன்பநிதி ! அரசியலுக்கு அச்சாரம்?
"மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தா இதை செய்யுங்க" என்ன சொல்ல வருகிறார் விஜய்?
Premalatha: கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! - தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் - என்ன விஷயம் தெரியுமா.?
கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! - தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் - என்ன விஷயம் தெரியுமா.?
London Flight Cancelled: அகமதாபாத்துக்கும் லண்டனுக்கும் ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
அகமதாபாத்துக்கும் லண்டனுக்கும் ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
இனி உணவுலாம் வீணாகாது, இளைஞர்களுக்கு வேலை; தமிழக அரசுடன் ஒப்பந்தம் போட்ட ஐஐடி சென்னை- எதற்கு தெரியுமா?
இனி உணவுலாம் வீணாகாது, இளைஞர்களுக்கு வேலை; தமிழக அரசுடன் ஒப்பந்தம் போட்ட ஐஐடி சென்னை- எதற்கு தெரியுமா?
Embed widget