காட்டுல நீ என்ன பெரிய ஆளா? புலியை நடையால் மிரட்டிய கரடி.. வைரல் வீடியோ!
டிவிட்டரில் பயனர்கள், “இங்கு இயற்கைக்கு மாறாக நடந்துவிட்டது என்றும், புலிப்பார்த்து ஓடாத கரடி மனிதர்களின் சத்தத்திற்கு ஓடிவிட்டது என்று கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
வனப்பகுதிக்குள் கரடியைப்பார்த்ததும் கம்பீரமாக நடந்துச்சென்ற புலியொன்று தரையில் அமர்ந்த வீடியோவைப்பார்த்த நெட்டிசன்கள் இணையத்தில் பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டுவருகின்றனர்.
இச்சமூகத்தில் மனிதர்கள் என்ன செய்தாலும் ஏன்? எதற்கு? என அவர்களின் முகப்பாவனைகளை வைத்தே நம்மால் அறிந்துக்கொள்ள முடியும். ஆனால் வனப்பகுதிக்குள் விலங்குகள் அவரவர் இனங்களோடு தான் இருக்குமா? அல்லது கதைகளில் வருவதுப்போல சில விலங்குகள் நண்பர்களாலும், சிங்கம் எப்போதும் போல ராஜாவாக தான் இருக்குமா? என்பது யாருக்குமே தெரியாது. ஆனால் சில சமயங்களில் வனப்பகுதிக்குள் சில விலங்குகள் மேற்கொள்ளும் சில செயல்கள் வீடியோவாக இணையத்தில் வைரலாகும் போது தான் ஓ இதெல்லாம் இது செய்யுமா? என நாம் ஆச்சரியப்படுவோம்… ஆனால் ஏன்? எதற்கு என்றெல்லாம் தெரியாது… இருந்தப்போதும் அதனை ரசிப்போம்… சில சமயங்களில் அதற்கு பல கமெண்ட்ஸ்களையும் நாம் பதிவிடுவோம்..
Close encounter!!!
— Sandeep Tripathi, IFS (@sandeepifs) October 14, 2021
A close shave...
For whom...even the tiger seems confused!!!! pic.twitter.com/HD268nTKbQ
அப்படிப்பட்ட ஒரு வீடியோ ஒன்று தான் டிவிட்டரில் தற்போது வைரலாகிவருகிறது. ஐஎப்எஸ் (IFS) அதிகாரியான சந்தீப் திரிபாதி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட அந்த வீடியோவில் ஒரு காட்டுப்பகுதியொன்றில் புலி நடப்பது போன்று அந்த வீடியோ தொடங்குகிறது. கம்பீரமாக நடந்து சென்ற நிலையில், தீடிரென கரடி வந்ததும் அதனைத் திரும்பிப்பார்த்தது அந்த புலி. அப்போது கரடி தன்னுடைய பின்னாங்காலில் நின்றவுடன் அமைதியான புலி தரையில் அமர்ந்துவிடுகிறது. பின்னர் மனிதர்களின் சத்தத்தைக்கேட்டதும் கரடி அவ்விடத்தைவிட்டு ஓடுகிறது. பின்னர் கரடி ஒடிய திசையைப்பார்த்த புலி தொடர்ந்து தரையில் அமர்ந்திருந்தது.. இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களைப்பெற்றுள்ளது.. இதோடு பலரும் டிவிட்டரில் மறு பதிவிட்டுவருகின்றனர்.
இதோடு மட்டுமின்றி இந்த வீடியோ பார்த்த நெட்டிசன்கள், பல்வேறு எதிர்மறை மற்றும் கேளிக்கையான கருத்துக்களையெல்லாம் பதிவிட்டுவருகின்றனர். டிவிட்டரில் பயனர்கள், “இங்கு இயற்கைக்கு மாறாக நடந்துவிட்டது என்றும், புலியைப்பார்த்து ஓடாத கரடி மனிதர்களின் சத்தத்திற்கு ஓடிவிட்டது என்றும், புலி மற்றும் கரடி ஆகிய இருவரும் மோதல்களைத் தடுக்கவே புலி உட்கார்ந்திருந்த நிலையிலும், கரடி இறுதியில் திசை மாறி சென்றுவிட்டதாக பதிவிட்டுள்ளனர். மேலும் புலி மற்றும் கரடி ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்தினர் எனவும் தங்களது கருத்துக்களை பதிவிட்டுவருகின்றனர்… என்ன தான் நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்திருந்தாலும் அடர்ந்த காட்டுப்பகுதிக்கள் புலி மற்றும் கரடி மேற்கொண்ட இச்செய்கைகள் அனைவராலும் ரசிக்கும் வகையில் அமைந்தது என்று தான் கூற வேண்டும்..