Jammu Kashmir Earthquake: ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோளில் 3.5 ஆக பதிவு..
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேற்று இரவு 3.5 ரிக்டர் அளவுகோளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் நேற்று இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 3.5 ஆக பதிவாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் கிஷ்த்வார் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய நிலநடுக்க மையம் உறுதிப்படுத்தியுள்ளது. நேற்று இரவு சரியாக 10:56 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் கடல் மட்டத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. லேசான நிலநடுக்கம் என்பதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் சேதாரங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.
Earthquake of Magnitude:3.5, Occurred on 22-10-2023, 22:56:52 IST, Lat: 33.34 & Long: 76.69, Depth: 5 Km ,Location: Kishtwar, Jammu & Kashmir, India for more information Download the BhooKamp App https://t.co/qRMHev5aJl@KirenRijiju @Dr_Mishra1966 @ndmaindia @Indiametdept pic.twitter.com/SoXteCnuM8
— National Center for Seismology (@NCS_Earthquake) October 22, 2023
அதேபோல் நேற்று, நேபாளத்தில் உள்ள காத்மாண்டு பள்ளத்தாக்கில் காலை 7.30 மணி அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் குலுங்கியதால் பொது மக்கள் அலறி அடித்து தெருக்களில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் எதுவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டவில்லை. ஆனால் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
VIDEO | Residents rushed out of their houses as earthquake jolted Nepal's Kathmandu Valley earlier today.
— Press Trust of India (@PTI_News) October 22, 2023
(Source: Third Party)
STORY | Earthquake hits Kathmandu Valley
READ: https://t.co/sUFjxT8JCx pic.twitter.com/ED7OqtBiqN
பாக்மதி மற்றும் கண்டகி மாகாணங்களின் பிற மாவட்டங்களிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டது. இதே போல் அக்டோபர் 16 ஆம் தேதி, நேபாளத்தின் சுதுர்பாசிம் மாகாணத்தில் 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. திபெத்திய மற்றும் இந்திய டெக்டோனிக் தகடுகள் சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ள நேபாளத்தில், நிலநடுக்கங்கள் பொதுவானவை மேலும், ஒவ்வொரு நூற்றாண்டிலும் இந்த தகடுகள் ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு மீட்டர்கள் நகர்ந்து வருவதால் அழுத்தம் ஏற்பட்டு நிலநடுக்கம் ஏற்படுகிறது என ஆய்வாளர்கள் கூறிப்பிட்டுள்ளனர்.
2015 இல் நேபாள நாட்டில் 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்துடன் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இதில் சுமார் 9,000 பேர் உயிரிழந்தனர். நேபாள் அரசாங்கத்தின் பேரழிவுக்குப் பிந்தைய தேவைகள் மதிப்பீடு (post disaster needs assesment) அறிக்கை குறிப்பிட்டுள்ளபடி, நேபாளம் உலகில் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் 11வது நாடாகும்.
மேற்கு ஆப்கான்ஸ்தானில் அக்டோபர் 8 ஆம் தேதி 6.3 என்ற சக்திவாய்ந்த அளவில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இதையடுத்து, பேரிடர் நிவாரண அதிகாரிகள் நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்டபோது அதிர்ச்சிகர செய்தி ஒன்றை வெளியிட்டனர். அந்த நிலநடுக்கத்தில் சுமார் 2000 த்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.