மேலும் அறிய

World Cup 2023 Points Table: உலகக் கோப்பை புள்ளிப்பட்டியல் விவரம்.. முதலிடத்தை வலுவாக ஆக்கிரமித்த இந்தியா..!

World Cup 2023 Points Table: உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

World Cup 2023 Points Table: நியூசிலாந்து அணியை வீழ்த்தியதன் மூலம் நடப்பு உலகக் கோப்பையில், இந்திய அணி தொடர்ந்து 5வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

உலகக் கோப்பை:

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் ஒருநாள் உலகக் கோப்பை தொடர், கடந்த 5ம் தேதி தொடங்கி உற்சகமாக நடைபெற்று வருகிறது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்திய மைதானங்களில் சில அணிகள் தடுமாறினாலும், சில அணிகள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. அதோடு, பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழிவது ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்தியா, நேற்று நியூசிலாந்தை வீழ்த்தி தொடர்ச்சியாக 5வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

20 வருட ஏக்கம் முடிந்தது..!

தர்மசாலாவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 273 ரன்களை சேர்த்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி விராட் கோலி மற்றும் கேப்டன் ரோகித் சர்மாவின் அபாரமான ஆட்டத்தால், 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், 2003ம் ஆண்டிற்குப் பிறகு ஐசிசி போட்டிகளில் நியூசிலாந்தை வீழ்த்தியதே இல்லை என்ற மோசமான பயணத்தை இந்திய அணி முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. அதோடு, நடப்பு தொடரில் தோல்வியையே சந்திக்காத ஒரே அணி என்ற பெருமையையும்  தக்கவைத்துள்ளது.

புள்ளிப்பட்டியல் விவரம்:

அணிகள் போட்டிகள் வெற்றி தோல்வி புள்ளிகள்
இந்தியா 5 5 0 10
நியூசிலாந்து  5 4 1 8
தென்னாப்ரிக்கா 4 3 1 6
ஆஸ்திரேலியா 4 2 2 4
பாகிஸ்தான் 4 2 2 4
வங்கதேசம் 4 1 3 2
நெதர்லாந்து 4 1 3 2
இலங்கை 4 1 3 2
இங்கிலாந்து 4 1 3 2
ஆப்கானிஸ்தான் 4 1 3 2

தடுமாறும் நட்சத்திர அணிகள்:

போட்டியை நடத்தும் இந்தியா உடன் சேர்ந்து நியூசிலாந்து, தென்னாப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை தொடர்ந்து ஆக்கிரமித்துள்ளன. பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் தொடர் வெற்றிகளை பெற முடியாமல் தடுமாறி வருகின்றன. மேலும், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி 4 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. வெறும், 0.002 புள்ளிகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை விட ஒரு இடம் மேலே என புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் இங்கிலாந்து நீடிக்கிறது. 

இதையும் படிங்க: Pak Vs AFG World Cup 2023: சென்னையில் ஆப்கானிஸ்தான் உடன் மோதல்! ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா பாகிஸ்தான்?

இன்றைய போட்டி:

இந்நிலையில் சென்னையில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. அரையிறுதிப்போட்டிக்கு முன்னேற இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டியது இரு அணிகளுக்கும் கட்டாயமாக உள்ளது. பாகிஸ்தான் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறும். ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் 6வது இடத்திற்கு முன்னேறக்கூடும். ஒருவேளை ஆப்கானிஸ்தான் அணி போராடி தோல்வியுற்றால், இங்கிலாந்து அணி 10வது இடத்திற்கு தள்ளப்படலாம்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Drone Training : 10ஆம் வகுப்பு பாஸ் போதும்! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
10ஆம் வகுப்பு பாஸ் போதும்.! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
Embed widget