மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: ஜில்லென்ற வானிலை.. உங்களை சுற்றி நடந்த சூழ்நிலை... இதோ! காலை தலைப்பு செய்திகள்..!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- மதவாதம் தவிர பாஜகவிடம் வேறு கொள்கை இல்லை; வெறுப்பரசியலை வைத்தே வாக்கு பெற நினைக்கிறார்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு
- இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்; 37 ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிப்பு - 15 நாளில் 10 படகுகளுடன் 64 மீனவர்கள் கைது
- 116வது ஜெயந்தி விழா, 61வது குரு பூஜை விழா - பசும்பொன் முத்துராமலிங்க நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மரியாதை
- தேவர் குருபூஜைக்கு வரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்று திருப்புவனம் பகுதியில் பாரத பிரதமர் எடப்பாடியாரே என புகழ்பாடும் சுவரொட்டியால் பரபரப்பு
- விழுப்புரம்: மரக்காணம் வட்டாரத்தில் உள்ள உர விற்பனை நிலையங்களில் வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் தலைமையில் வேளாண் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு
- திராவிடம் பற்றி எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாதது வெட்கக் கேடு - அமைச்சர் பொன்முடி கடும் விமர்சனம்
- உலக சிக்கன தினம் ஒவ்வொரு வருடம் அக்டேபார் 30ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
- 31 மாதங்களுக்கு பிறகு மீண்டும் நேற்று துவங்கியது சேலம் - சென்னை விமான சேவை
- கேரளாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக டிஜிபி ஷங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியா:
- கேரள மாநிலம் கொச்ச்சியில் கிறிஸ்துவ ஜெபக்கூட்டத்தில் குண்டுவெடிப்பு; 3 பேர் இதுவரை உயிரிழப்பு, 50க்கு மேற்பட்டோர் படுகாயம்
- முதலமைச்சர் மாற்றம் குறித்து எம்.எல்.ஏ சர்ச்சை - சித்தராமையா ஆதரவாளர்கள் ரகசிய கூட்டம் நடத்தியதால் டி.கே.சிவக்குமார் பிரிவினர் அதிர்ச்சி
- ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் 2 ரயில்கள் எதிரெதிரே மோதி விபத்து - இதுவரை 10 பேர் உயிரிழப்பு என தகவல்
- கேரள குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு காரணமான டொமினிக் மார்ட்டின் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்
- ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் மட்டும் 2022-23 நிதியாண்டில் ஏறக்குறைய 50 ஆயிரம் கோடி ரூபாயை வருவாயாக ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம்:
- இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பொதுமக்கள் பாதுகாப்பே முதன்மையானது - ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்
- கஜகஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் தீ விபத்து - 42 பேர் உயிரிழப்பு
- அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து குடியரசுக் கட்சியின் மைக் பென்ஸ் விலகியுள்ளதாக தகவல்
- நான் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் முஸ்லீம்கள் அமெரிக்கா வர பயண தடை விதிப்பேன் - ட்ரம்ப் சர்ச்சை பேச்சு
- சிங்கப்பூரில் பாலியல் வன்கொடுமை வழக்கில் இந்தியருக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு:
- உலகக் கோப்பை 2023: இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை
- ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில் நேற்று சென்னை அணி பஞ்சாப்பை வீழ்த்தி வெற்றிபெற்றது.
- உலகக் கோப்பை 2023: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
- உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இங்கிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் டக் அவுட் ஆனார் விராட் கோலி
- ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: மலேசியாவை வீழ்த்தி இந்திய பெண்கள் அணி 2-வது வெற்றி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion